குழந்தைகளுக்கான ஆயுர்வேத நோய் தடுப்பு திட்டம்

குழந்தைகளுக்கான ஆயுர்வேத நோய் தடுப்பு திட்டம் -Ayurvedic Immunization Schedule
 
இன்றைய கால கட்டத்தில் பிறந்த குழந்தை முதல் -குழந்தை பருவத்தில் பலவகையான தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை கொடுத்து வருகிறோம்..கொள்ளை நோய்கள் உள்ள அந்த கால கட்டத்தில் பல வகையான நோய் தடுப்பு முறைகளை ஆயுர்வேத மருத்துவத்தில் குழந்தை மருத்துவ பிரிவு செயல்படுத்தி உள்ளது என்பது ஆச்சர்யம் மட்டுமல்ல நிச்சயமான உண்மை .BCG என்ற தடுப்பு மருந்து காச நோய் தடுப்பு மருந்தாக எல்லாருக்கும் போடத்தான் செய்தாலும் -இன்னும் காச நோயை ஒழிக்க முடியவில்லை .,

ஆண்டி பயாடிக் இல்லாத அந்த கால கட்டத்தில் Active immunity என்னும் தன்       நோய் எதிர்ப்பு ஆற்றலை ஆயுர்வேதம் பல வகைகளில் வளர்க்க செய்ய பல இயற்கையான மூலிகைகளை திட்டமிட்டு கொடுக்க சொல்கிறது .
         
5000 வருடங்களுக்கு முன்னால் ஆயுர்வேத ஆச்சார்யாக்களால் எழுதப்பட்ட ஆயுர்வேத பாரம்பரிய புத்தகமான ஆரோக்கிய கல்பத்ரும என்ற புத்தகத்தில் குழந்தை பிறந்த நாளிலிருந்து குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும் ஆரோக்கியத்துடன் வளரவும் தேவையான உணவுமுறைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வகை உணவுமுறை திட்டத்தினை நவீன நோய்த்தடுப்புத்திட்டம் (அ) நோய்த்தடுப்பு கால அட்டவணை உடன் ஒப்பிடலாம்.

    குழந்தை பிறந்த நாளிலிருந்து 13 வயது வரை கொடுக்கப்பட வேண்டிய உணவு முறைகள் (ம) மூலிகைகள் பற்றி ப்ராகார யோக அத்யாயத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

ப்ராகார யோகம் :-

      ப்ராகார யோகம் என்றால்- குழந்தையின் ஆரோக்கியத்தை பேணிகாக்கயும், நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிப்பதன் மூலம் நோய் வராமல் தடுபதற்காகவும் கொடுக்கப்படும் மூலிகைகளை பற்றிய மருத்துவ உருவாக்கம் ஆகும்.

    பிறந்த குழந்தைக்கான ஆயுர்வேத நோய் தடுப்புத் திட்டம்

·   குழந்தை பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஏழாம்நாள் வரை- வசம்பு+சிறு புல்லாடி (Desmodim trifolium) சாறினை மூன்று சொட்டு தினமும் உச்சந்தலையில் இட வேண்டும்.

     பயன்கள்-குழந்தையின் ஜீரணத்தன்மையும்,நோய் எதிர்ப்பு சத்தியும் வலுவடையும்.

·   15 நாட்களுக்கு பிறகு- வில்வத்தின் (பட்டை,காய்,பழம்,இலைகள்,வேர்) பஞ்சாங்கத்தோடு நெல்லிக்காய்ச் சாறு சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு கிராம் வீதம் 7 நாட்கள் கொடுக்க வேண்டும்.

·    ஒரு மாத வயது குழந்தைக்கு கோரைக்கிழங்கு, பெருங்காயம், வாயுவிடங்கம் (ம) பிரம்மி சாறு சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை கொடுக்க வேண்டும்.

·   மூன்று மாத குழந்தைக்கு- சுக்கு, மிளகு, திப்பிலி (ம) நன்னாரி சாரோடு வெண்ணெய் சேர்த்து 7 நாட்கள் கொடுக்கவேண்டும்.

·   ஆறு மாத குழந்தைக்கு நிலப்பனை தண்டு சாற்றில் சுக்கு, மிளகு, திப்பிலி பொடியுடன் தேன் சேர்த்து 7 நாட்கள் கொடுக்க வேண்டும்.

ஒரு வயது குழந்தைக்கு:

கிழ்கண்ட மூலிகைகளை ஒவ்வொரு மாதமும் 7 நாட்கள் கொடுக்க வேண்டும்.

முதல் மாதம்: நெல்லிக்காய் + கோரைக்கிழங்கு + சுக்கு + மிளகு + திப்பிலியுடன் தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்

இரண்டாவது மாதம்: நெல்லிக்காய் மற்றும் கோரைக்கிழங்குடன் வெண்ணெய் சேர்த்து கொடுக்க வேண்டும்

மூன்றாவது மாதம்: நெல்லிக்காய் மற்றும் கோரைக்கிழங்குடன் சர்க்கரை சேர்த்து வெந்நீரில் கொடுக்க வேண்டும்.

நான்காவது மாதம்: நெல்லிக்காய் மற்றும்  கோரைக்கிழங்கோடு சர்க்கரை மற்றும் தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஐந்தாவது மாதம்: நெல்லிக்காய், கோரைக்கிழங்கு மற்றும்  பஞ்சகோல (திப்பிலி, திப்பிலி மூலம்,ஆட்டி கொடுவேலி) பொடியோடு நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஆறாவது மாதம்: நெல்லிக்காய் + கோரைக்கிழங்கு, சீரகம் மற்றும்  திப்பிலி பொடியுடன் தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஏழாவது மாதம்: நெல்லிக்காய், கோரைக்கிழங்கு, சுக்கு, திப்பிலி மற்றும் மாதுளத்தோடு தயிருக்கு மேல் மிதக்கும் நீர் சேர்த்து கொடுக்க வேண்டும்.

எட்டாவது மாதம்: நெல்லிக்காய், கோரைக்கிழங்கு, சுக்கு, திப்பிலி மூலம் மற்றும் குடஜ மூலிகையோடு நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஒன்பதாவது மாதம்: நெல்லிக்காய், கோரைக்கிழங்கு, வாயுவிடங்கம் மற்றும் திப்பிலியோடு நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

பத்தாவது மாதம்: நெல்லிக்காய், கோரைக்கிழங்கு, சீரகம், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலியோடு சர்க்கரை சேர்த்து கொடுக்க வேண்டும்.

பதினொன்றாவது மாதம்: நெல்லிக்காய் மற்றும்  கோரைக்கிழங்கோடு ஆட்டுப்பால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

பனிரண்டாவது மாதம்: நெல், கோரைக்கிழங்கோடு, சர்க்கரை (ம) சீரகப்பொடியோடு மாட்டுப்பால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

மூன்று வயது குழந்தைக்கு:

கீழ்க்காணும் மூலிகைகளை ஒரு மாதத்திற்கு ஏழு நாட்கள் கொடுக்க      வேண்டும்.

அனைத்து மருந்துகளையும் சம அளவு நெய் (ம) சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

உட்கொள்ளும் அளவு:

மருந்துகள் - 3 கிராம்
நெய்       - 3 கிராம்
சர்க்கரை    - 3 கிராம்

முதல் மாதம் – சீந்தில் கொடி, திப்பிலி, வசம்பு.

இரண்டாவது மாதம்- சுக்கு, திப்பிலி, வசம்பு, பதுமுகம், இந்துப்பு (ம) கடுக்காய்.

மூன்றாவது மாதம்- வாயுவிடங்கம், கோரைக்கிழங்கு, ஏலக்காய், வசம்பு, இஞ்சி, சுக்கு, திப்பிலி.

நான்காவது மாதம்: நன்னாரி, சுக்கு, மிளகு, திப்பிலி, வசம்பு, சீரகம், மாசிக்காய்.

ஐந்தாவது மாதம்: மாதுளம், கோரைக்கிழங்கு, வசம்பு, கொத்தமல்லி, திப்பிலி.

ஆறாவது மாதம்: மூக்கிரட்டை, நிலவேம்பு, வசம்பு,  நால்பாமரம்.

ஏழாவது மாதம்: மாஷபர்னி (காட்டுலூன்னு), கோரைக்கிழங்கு, கோவை செடியின் வேர், காட்டுமுத்திரா, திப்பிலி (ம) வசம்பு.

எட்டாவது மாதம்:  தும்பி, கோரைக்கிழங்கு, வசம்பு, புரசம்பட்டை
.
ஒன்பதாவது மாதம்: பிரம்மி, கோரைக்கிழங்கு, வசம்பு, குடஜம் (ம) திப்பிலி.

பத்தாவது மாதம்: மாலதிபுஷ்பம்,  வசம்பு, சீரகம்.

பதினொன்றாவது மாதம்: வன்னி இலை, சீரகம், கொடுவேலி, வசம்பு, (ம) திப்பிலி

பனிரெண்டாவது மாதம்: கோரைக்கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி, மாதுளம், நெல்லிக்காய், வாயுவிடங்கம்,     தாளிசபத்ரம், கொடுவேலி, கடுக்காய், செந்தாமரை, வசம்பு.

ஐந்து வயது குழந்தை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூலிகைகளில் வசம்பிற்கு பதில் கொட்டம் சேர்த்து கொடுக்க வேண்டும்.

எட்டு வயது குழந்தை:

ஐந்து வயதில் குழந்தைக்கு கொடுக்கப்படும் மூலிகைகளின்        பொடியோடு விஷ்ணுகிரந்தி மூலிகை வேர், நெய் (ம) தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

பத்து வயது குழந்தைக்கு:

கீழ்க்காணும் மூலிகைகளை சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை ஒவ்வொரு மாதமும் ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும்.

அளவு- 10 கிராம்.

முதல் மாதம் – கடுக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, வசம்பு, தாளிசபத்ரம், பிரம்மி.

இரண்டாவது மாதம் – சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, வசம்பு, கோரைக்கிழங்கு (ம) கொட்டம் ஆகியவற்றை புளிவஞ்சி சாறுடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

நான்காவது மாதம் – ஜீவனிய மூலிகைகளை கோரைக்கிழங்கு, கொடுவேலி, திப்பிலி ஆகியவற்றை ஆட்டுப்பாலுடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஐந்தாவது மாதம் – திராட்சை, மூக்கிரட்டை, வட்டத்திருப்பி, கோரைக் கிழங்கு, ஹபுஷமூலம் (JUNIPERUS COMMUNIS- இசுவத்சி), கட்பலம் மற்றும் மாதுளையோடு ஆட்டுபால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஆறாவது மாதம்- சாரிவாதி க்ருதத்தை (நன்னாரி, கோரைக்கிழங்கு, வெட்டிவேர்,  சுக்கு, மிளகு, திப்பிலி, தேவதாரு, சீரகம்) ஆட்டுப்பால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஏழாவது மாதம்- நாகராதி க்ருதத்தை (சுக்கு, நெல்லிக்காய், கண்டங்கத்திரி, குடஜம், கோரைக்கிழங்கு, வில்வத்தின் பஞ்சாங்கம்) நீரில் சேர்த்து கொடுக்க வேண்டும்.

எட்டாவது மாதம்- பிப்பலியாதி க்ருதத்தோடு (திப்பிலி, குடஜம், இந்திரயவா, திராட்சை, சுண்டைக்காய், கண்டகத்திரி, திக்த, தும்பை, ஓமம், தூதுவேளை, மாதுளம், கோரைக்ககிழங்கு, வட்டத்திருப்பி, வசம்பு, முருங்கை, பெருங்காயம், மூக்கிரட்டை, வில்வ வேர் ,தாமரை, வாயுவிடங்கம்,நெல்லிக்காய்) தயிருக்கு மேல் மிதக்கும் நீரினை சேர்த்து தயாரித்த பின்பு ஜீரகம் (ம) கற்கண்டு சேர்த்து கொடுக்க வேண்டும்.

ஒன்பதாவது மாதம்- வில்வாதி க்ருதத்தோடு 
கஸாயம் பொருட்கள்-வில்வம், ஓமம், கருநொச்சி, திப்பிலி, கோரைக்கிழங்கு, மாதுளம், கல்கப் பொருட்கள், சுக்கு, மிளகு,  திப்பிலி, ஏலக்காய், கொடுவேலி, வாயுவிடங்கம்) சமஅளவு பால் சேர்த்து கொடுக்க வேண்டும்.

மாற்று முறைகள்-1: சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், கொடுவேலி, வாயுவிடங்கம், வட்டத்திருப்பி, தும்பை, கோரைக்கிழங்கோடு தயிருக்கு மேல் மிதக்கும் நீரினை சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை கொடுக்க வேண்டும்.

மாற்று முறைகள் 2:-வட்டத்திருப்பி, தும்பை, கோரைக்கிழங்கோடு தயிருக்கு மேல் மிதக்கும் நீர் சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யினை கொடுக்க வேண்டும்.

பத்தாவது மாதம் :-

Ø  திராயமான க்ருதத்தோடு (கஷாய பொருள்கள்-கமந்திரை, பிரம்மி, குடஜம், கோரைக்கிழங்கு, திப்பிலி; கல்க பொருள்கள்-அதிவிடயம், கோரைக்கிழங்கு, குடஜம், நிலவேம்பு).

பதினொன்றாவது மாதம் :-

Ø  தாடிமாதி க்ருதத்தோடு  (கஷாய பொருள்கள்-மாதுளம், நெல்லிக்காய், கடுக்காய், தாண்றிக்காய், வாயுவிடங்கம், திப்பலி, கொடுவேலி, ஜீவந்தி சாறு) சம அளவு தயிருக்கு மேல் மிதக்கும் நீர் சேர்த்து கொடுக்க வேண்டும்.

பனிரெண்டாவது மாதம் :-

   வட்டத்திருப்பி, குடஜம், நிலவேம்பு, கொத்தமல்லி ஆகிய கஷாய பொருள்களும்; வாயுவிடங்கம், பரசுப்பட்டை, மஞ்சள், மரமஞ்சள், மூக்கிரட்டை, சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், துராலபா, அதிமதுரம் ஆகிய  கல்கப் பொருள்கள் அனைத்தும் சேர்த்து தயாரிக்கப்பட்ட நெய்யுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

பதிமூன்று வயதில்:

முதல் மாதம் – அருகம்புல் (ம) வசம்புடன் சர்க்கரை,தேன் (ம) நெய் சேர்த்து கொடுக்க வேண்டும்.

இரண்டாவது மாதம் – பிரம்மி, வல்லாரை, சமீ வல்கலம், நெல்லிக்காய், பன்னுபிலங்கு, பலா, பிரண்டை, கார்போக்கி, நிலவேம்பு, நன்னாரி

மற்ற மாதங்கள் மேலே சொன்னது போலே .

இந்த மருத்துவ மூலிகைகள் கிடைக்க வில்லை என்றால் அதற்கும் பல வகையான திட்டங்களை ஆயுர்வேத சிகிச்சை சொல்கிறது.