ஆளி விதைகளின் 11 அற்புத பயன்கள்...
ஆளி விதைகளின் 11 அற்புத பயன்கள்:
ஆளி விதை ஓர் அட்டகாசமான உணவுதான். தாவர உணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது இது. நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு அமிலங்களை, நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது.
இந்தக் கொழுப்பு அமிலம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் (Essential fatty acid – EFA). ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் ஒமேகா 6-ம் இருப்பதால், செல் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் ஆளி விதை உறுதிப்படுத்துகிறது. உடல் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
இதில், அதிக அளவு மக்னீசியம், பாஸ்பரஸ், செம்பு, தியாமின், மாகனீஸ் மற்றும் நார் சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால் காயங்களினால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள ஃபைபர் செரிமான பிரச்சனையை போக்குகிறது.
ஆளி விதைகளின் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
புற்றுநோயை எதிர்த்து போராடும்
ஆளி விதையில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போல செயல்பட்டு புற்று நோய் பிரச்சனையை எதிர்த்து போராடும் வல்லமை உடையது. மேலும் இதில் உள்ள லிக்னன்கள், உடலினுள் கெமிக்கல்களால் மாற்றப்பட்டு உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும்.
இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மார்பகம், புரோஸ்டேட், குடல் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும்.
நீரிழிவு நோய்க்கு பயன்படும் ஆளி விதை:
ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஹீமோகுளோபின் ஆய்வுகளின் போது, இரத்தத்தில் 2 வகையான நீரிழிவு நோய்கள் கணடறியப்படுகின்றன. இரண்டு வகையான நீரிழிவு பிரச்சனைக்கு ஆளி விதை அற்புத மருந்தாக பயன்படுகிறது. மேலும் இதில் உள்ள நார்சத்து செரிமான பிரச்சனைகளை எளிதில் போக்கும்.
இதயத்தின் நண்பன்
ஒமேகா 3 நிரம்பியுள்ள ஆளி விதைகள் தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்க்கின்றன. வெள்ளை அணுக்களை இரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் இணைத்து வைப்பதன் மூலம் தமனிகளில் கழிவுகள் சேருவதையும் ஒமேகா 3 தவிர்க்கிறது. இந்த ஒமேகா 3 ஆளி விதைகளில் பெருமளவு குவிந்துள்ளது. இதனால் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது.
வீக்கங்களை குறைக்கும்
2 தேக்கரண்டி ஆளி விதையில் 140% சத்துக்கள் நிரம்பியுள்ளது. மேலும், இதில் ஒமேகா 3 பெருமளவு உள்ளதால் காயங்களால் ஏற்படும் வீக்கங்களை விரைவில் குணப்படுத்துகிறது. அழற்சியினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை தருகிறது.
உடல் எடை குறைத்தல்
ஆளி விதைகளில் நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளதால் இது உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். இதனை சரியான அளவில் எடுத்து கொண்டால் பசியெடுக்காது . மேலும் இது உடல் எடையை கச்சிதமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. இதில் உள்ள லிக்னன்ஸ் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவும். அதுமட்டுமல்லாமல் சிறந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் அளிக்கிறது.
செரிமான பிரச்சனையை தீர்க்கும்
ஆளி விதைகளில் ஏராளமான நார்ச்சத்துகள் நிரம்பியுள்ளது. இதனால் செரிமான பிரச்சனையை எளிதில் தீர்க்கும். ஆளி விதை முக்கியமாக மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். ஆளி விதை அரைத்து மாவாக்கி உண்ணும் போது, கூடவே நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். இது சாப்பாட்டின் அளவை கூட்டும், தினமும் தொடர்ந்து செய்தால்தான் அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். ஒமேகா 3 பெருமளவு உள்ளதால் காயங்களால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கும்.
மாதவிடாய் பிரச்சனைகள்:
ஆளி விதையில் லிக்னன் என்ற தாவர வேதிப்பொருள் இருப்பதால் பெண்களின் ஹார்மோன் சமநிலையைப் பாதுகாத்து, மாதவிடாய் சுழற்சியை இயல்பாக வைக்கிறது. ஓழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளை சரி செய்யும்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு..
ஆளி விதையில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 நிரம்பியுள்ளதால் கர்ப்பிணிகளுக்கு தேவையான புரோட்டின் சத்துக்கள் கிடைக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது பயன்படுகிறது. மருத்துவர்கள் இதனை இவர்களுக்கு பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது.
சருமம் பொலிவு பெற:
ஆளிவிதையில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலம் சருமத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. இது வறண்ட சருமத்தை மிருவாக்கும், தினமும் உடலில் ஏற்படும் மாசுக்களை நீக்குகிறது. இதில் உள்ள மூலப்பொட்கள் முகம் மற்றும் சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது. சுருக்கங்களை போக்கும், முகப்பருக்களை நீக்கும்,
அடர்த்தியான முடி:
ஆளிவிதையில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலம் முடி பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது. இது முடி உடையும் பிரச்சனை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வலிமையான முடிகளை வளர செய்கிறது.
2 கப் தண்ணீர் சுட வைத்து அதில் 4 தேக்கரண்டி ஆளி விதைகள் போட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் சூடு தணிந்த பின்பு அதனை எடுத்து தினமும் உச்சந்தலையில் பூசிக் கொண்டால் வலிமையான முடி வளரும்.
ஆளி விதைகளில் கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள்:
புரோட்டீன்கள்
கொழுப்பு அமிலங்கள்
நார்ச்சத்துக்கள்
நியாஸின்
பேண்டோதெனிக் அமிலம்
பிரிடாக்சின்
ரிபோஃப்ளாவினோடு
தையமின்
வைட்டமின் ஏ
வைட்டமின் சி
வைட்டமின் இ
வைட்டமின் கே
சோடியம்
பொட்டாசியம்
கால்சியம்
காப்பர்
அயன்
மக்னீசியம்
மாங்கனீசு
துத்தநாகம்
இந்த ஒரே ஒரு ஆளி விதையில் ஏராளமான அற்புத மூலப்பொருட்கள் ஒளிந்துள்ளது. இதனை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான பயன்களை அடையலாம்.
ஆளி விதைகளை எப்படி உள்கொள்வது:
ஆளி விதைகளை உறவைத்து பின்னர் அதனை 10 நிமிடங்கள் சூடு தண்ணீர் அல்லது 2 மணி நேரம் குளிர்ந்த நீரில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
இதனை முழுமையாக உட்கொள்வதன் மூலம் முழுவதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது,
ஆளி விதைகளை நீங்கள் காலை நேரத்தில் எடுத்து கொண்டால் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கிடைக்கும். இதனை சாப்பிடுவதற்கு உகந்த நேரமும் காலை தான். இதனை சாலடுகளிலும் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
ஆளி விதைகளை வறுத்தும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டை தணிக்கும்.
பேலியோ டயட் இருப்பவர்களும் இந்த ஆளி விதைகளை சாப்பிடலாம்.
எவ்வளவு தான் நன்மை இருந்தாலும் இந்த ஆளி விதைகளில் சில தீமைகளும் உள்ளது.
ஆளி விதைகளின் பக்க விளைவுகள்
Side effects of flax seeds
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நாம் ஒரேடியாக உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. சிறிது சிறிதாகத்தான் சேர்த்துக்கொள்ள வேண்டும்
இரத்தத்தில் உள்ள சர்க்கரை நிலைகள்
ஆளிவிதைகள் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு
நோயினால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து கொள்பவர்கள் இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்தம்
ஆளிவிதைகள் இரத்த அழுத்தத்தை அதிகமாக குறைக்கும். இதனால் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்து கொள்பவர்கள் கண்டிப்பதாக இதனை தவிர்க்க வேண்டும்.
இரத்தம் உறைதல்
ஆளிவிதைகள் இரத்தத்தை மெதுவாக தான் உறைய வைக்கும். இதனால் இரத்தப்போக்கு கோளாறுகள் உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரத்திற்கு முன்பும் ஆளி விதைகளை உட்கொள்ளக் கூடாது.
ஹார்மோன் மற்றும் உணர்திறன் நிலைகள் அதிகரிக்கும்
ஆளி விதைகள் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை அதிகப்படுத்தும். இதனால் மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் வரவாய்ப்புள்ளது.
கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் பிரச்சினைகள்:
ஆளி விதைகளை கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.
முடிவுரை:
எளிதில் கிடைக்கக்கூடிய இந்த ஆளி விதைகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் வல்லமை உள்ளது. உடல் எடையை குறைக்கும் அற்புத மருந்தாகவும் உள்ளது. மேலே கூறிய இதன் நன்மைகள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்