நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள்ளங்கி :

கறிக்குழம்பின் சுவையை மேலும் அதிகரிப்பதில் இதன் பங்களிப்பு மிகச் சிறந்தது. ஆனால் சிலர் இதன் மணத்தை விரும்பாத காரணத்தினால் உணவில் இதை தவிர்த்து விடுகின்றனர். நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் காய்கறிகளில் முக்கியமானது இந்த முள்ளங்கி. மனித உடல் நலத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை தாராளமாக பயன்படு;த்தி வர உடல் நலக் குறைவினால் ஏற்படும் மருத்துவச் செலவுகள் பெருமளவில் குறைக்கலாம்.
முள்ளங்கியில் வெள்ளை மற்றும் சிவப்பு முள்ளங்கி என இரண்டு வகைகள் உள்ளன.

மருத்துவ குணமுடைய பகுதிகள்:

இலைகள், கிழங்கு பகுதி, வேர்கள் மற்றும் விதைகளில் நோய் தீர்க்கும் குணமுடைய மருந்து சத்துக்கள் பெருமளவில் காணப்படுகிறது.

100 கிராம் முள்ளங்கியில் அடங்கியுள்ள சத்துப் பொருட்கள்:

வைட்டமின் - ஏ, பி,சி மற்றும் கே 
ஈரப்பதம்          - 93 மூ
மாவுச்சத்து - 4 மூ
நார்ச்சத்து         - 1.05 மூ 
புரதச்சத்து         - 1.12 கி
தாது உப்புகள்   - 1.09 கி
கொழுப்புச்சத்து - 0.65 மி.கி
கால்சியம்          - 2.56 கி
பாஸ்பரஸ்          - 0.74 கி
சோடியம்          - 0.36 கி
குளோரின்     - 0.27 மி.கி
மாங்கனீசு          - 0.19 கி
இரும்புச்சத்து  - 5.86 மி.கி

பொதுவான பயன்கள்:

முள்ளங்கியை நம் அன்றாட உணவில் குழம்பிலிட்டோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு

ஒரு தேக்கரண்டி முள்ளங்கி சாறுடன் சிறிதளவு தேனைக் கலந்து சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கட்டு மற்றும் வயிறு உப்பிசம் போன்ற தொல்லைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

முள்ளங்கி சாற்றை 25 மி.லி.வீதம் காலை, மாலை உணவிற்கு முன் கொடுதது வர சிறுநீரகக் கோளாறு, சிறுநீர்ப் பாதை தொற்று போன்ற நோய்கள் தீரும்.

வாதம், சுவாச காசம் போன்ற நோய்களுக்கு இரு சிறந்த மருந்தாகும்.
முள்ளங்கியில் காணப்படுதம் சோடியம் மற்றும் குளோரின் சத்து மலச்சிக்கலை நீக்கி மலத்தை இளக்கி வெளியேற்றும் ஆற்றல் கொண்டவை.

முள்ளங்கியில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து கண்களுக்கு குளிர்ச்சியூட்டி பார்வையை தெளிவுற செய்யும்.
அஜீரணக் கோளாறுகளை நீக்கி உண்ணும் உணவை செரிமானம் அடைய வைக்கும் சக்தி இதற்கு உண்டு.
கருச்சிதைவு ஏற்பட்டவர்கள் முள்ளங்கி சாற்றில் கற்கண்டு கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதில காணப்படும் கால்சியச் சத்து பற்கள் மற்றும் எலும்புகள் பலம் பெற உதவுகிறது.

பயன்படுத்தும் முறைகளும், தீரும் நோய்களும்:

நரம்ப சம்பந்தமான நோய்களினால் அவதிப்படுபவர்கள் முள்ளங்கியை அன்றாட உணவில் பயன்படுத்தி வர நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று நோய் விரைந்து நீங்கும்.

மூலநோய்க்கு:

மூல நோயினால் அவஸ்தைபடுபவர்கள் தினமும் காலையும், மாலையும் உணவிற்கு முன் 50 மி.லி. வீதம் முள்ளங்கி சாற்றை பருகி வல மூல நோயின் தாக்கம் குறைந்து நோய் கட்டுப்படும். சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலும் நீங்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு:

முள்ளங்கியில் காணப்படும் இன்சுலின் சத்து நீரழிவு நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. எனவே. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் உயவில் முள்ளங்கியை சேர்த்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும். இதில் காணப்படும் நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து போன்றவை உடல் எடை குறையாமல் பாதுகாக்கும்.

ஆண்மை பெருக:

ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியைப் பெருக்க முள்ளங்கி சிறந்த மருந்தாகும். ஆண்மை குறைவினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி முள்ளங்கியை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டு வர விந்தணு உற்பத்தியை பெருகச் செய்து ஆண்மை இழப்பை ஈடு செய்யும்.

எலும்புகள் பலம் பெற:

முள்ளங்கியில் காணப்படும் கால்சியம் மற்றும் மாங்கனீசு சத்து எலும்பு தேய்மானம் மற்றும் எலும்புகள் வளர்ச்சியின்மைக்கு சிறந்த மருந்தாகும். நம் அண்றாட உணவில் இதை சேர்த்து வர இந்நோயிலிருந்து நிரந்தர நிவாரணம் பெறலாம்.

கர்ப்பிணிகளுக்கு:

கருவுற்ற தாய்மார்கள் முள்ளங்கியை உணவில் ஏதாவது ஒரு விதத்தில் வாரம் இரு முறை பயன்படுத்தி வர சிறுநீர் மிகுதியாகக் கழிந்து கை, கால் வீக்கம் குறையும். மகப்பேறு சிக்கலின்றி எளிதாகும்.

வயிற்றுப் புழுக்கள் நீங்க:

சிலருக்கு வயிற்றுப் புழுக்கள் மிகுதியால் வயிற்றில் வலி மற்றும் அடிக்கடி மலம் கழிக்க நேரிடும். இவர்கள் தினமும் காலையில் உணவிற்கு முன் முள்ளங்கி சாற்றை குடித்து வர வயிற்று புழுக்கள் இறந்து மலத்துடன் வெளியேறும்.

குடல் புண் குணமாக:

குடல் புண்ணினால் அவதிப்படுபவர்கள் முள்ளங்கி சாற்றில் தேன் கலந்து சாப்பி;ட்டு வர புண்கள் விரைவில் ஆறும். மேலும் வயிறு சம்பந்தமான நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

வயதானவர்களுக்கு:

வயதுமுதிர்ச்சியின் காரணமாக மூட்டு வலி, கை, கால் வலி மற்றும் தூக்கமின்மையால் தவிப்பவர்கள் தினமும் முள்ளங்கியை சூப் செய்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிட்டு வர நோய்களின் தாக்கம் குறையும்.

தீப்புண் குணமாக:

தீப்புண்களினால் அவதிப்படுபவர்கள் முள்ளங்கி விதையை அரைத்து புண்களின் மீது பற்று போட்டால், புண்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் காயங்களிலிருந்து வடியும் நீர் நின்று புண்கள் விரைவில் குணமாகும்.

கரும்புள்ளிகள் நீங்க:

சிலருக்கு முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றி முக அழகைக் கெடுக்கும். முள்ளங்கி விதையை அரைத்து கரும்புள்ளிகள் மற்றம் படர் தாமரை மீது தடவி வல நல்ல பலன் கிடைக்கும்.

எனவே பல்வேறு நோய்களிலிருந்து நலம் பெற உதவும் முள்ளங்கியை நாளும் பயன்படுத்தி வளம் பெறுவோம்.