முட்டைகோஸை உங்கள் உணவில் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்...

முட்டைகோஸை உங்கள் உணவில் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள்...

முருங்கைக்காய், வெங்காயம் போன்ற காய்கறிகள் வருடத்தில் பல நாட்களில் அதிகமான விளைச்சல் இருக்காது. அதனால் அதன் விலைகளும் ஏற்ற இறக்கத்தில் இருக்கும். ஆனால் முட்டைகோஸ் மட்டுமே வருடத்தின் அனைத்து நாட்களிலும் கிடைக்கக்கூடிய காய்கறியில் ஒன்று. முட்டைகோஸ் விலையும் குறைவாகவே விற்கப்படுகிறது. முட்டைகோஸ் என்பது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. முட்டைகோஸ் அதன் நன்மைகள் ஏராளம். முட்டைகோஸ் குடும்பமான காலிஃப்ளவர், ப்ராக்கோலி, கேள், போன்ற காய்கறிகள் இருக்கின்றன. இவை பச்சை, சிவப்பு, வெள்ளை, போன்ற நிறங்களில் கிடைக்கின்றது. முட்டைகோஸ் தோலானது மிகவும் மென்மையாகவும் இலை போன்று வடிவிலும் இருக்கின்றது.. ஆனால் இன்றைய தலைமுறையினர் இடையே முட்டைகோஸின் நன்மைகள் மிகவும் குறைத்து மதிப்பிட்டு இருக்கிறது. முட்டைகோஸை பெரும்பாலும் நாம் அனைவரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் அதன் நன்மைகள் மிகவும் ஏராளம். இன்றைய நவீன அறிவியலில் முட்டைகோஸின் மகத்துவத்தைப் பற்றி கண்டுபிடித்து கூறியுள்ளனர்.

முட்டைகோஸ் ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும் அதை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

உடல் எடை குறைப்பு :

முட்டைகோஸ் பெரும்பாலும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம் எடுத்துக் கொள்வார்கள். வெஜிடபிள் சாலட் என முட்டைகோசே பெரும்பாலும் இருக்கும். ஒரு கிண்ணத்தில் முட்டைக்கோசை வெட்டி போட்டால் அது வெறும் 22 கலோரி மட்டுமே இருக்கும். லேசாக வயிறு நிறைந்தது போன்ற எண்ணத்தையும் கொடுக்கும். அதே நேரத்தில் குறைந்த கலோரி இருப்பதால், அதிகமான சாப்பிடுவதை தவிர்த்து உடல் எடையை குறைப்பதற்கு இலகுவாக இருக்கும். அதே நேரத்தில் இது அதிகமான நல்ல மருத்துவ குணங்களை கொண்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதுபோக முட்டைகோஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நார்ச்சத்து இயல்பாகவே உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் பயனளிக்கும். எனவே உடல் எடையை குறைத்து நல்ல ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் முட்டைக்கோஸ் மூலம் துவங்கலாம்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :

இதில் அதிக அளவு விட்டமின் சி இருக்கின்றது உடலின் பல செயல்பாடுகளுக்கும் விட்டமின் சி பெரிதளவில் உதவுகிறது. விட்டமின் சி அதிகம் இருப்பதால் முட்டைகோஸ் உடல் செயல்பாட்டிற்கு பெரிதளவு உதவுகின்றது. மேலும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இது போக விட்டமின் சி என்பவை உடலில் உள்ள இரும்புச் சத்துக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய காரணிகளை நீக்கிவிடும். அதுமட்டுமில்லாமல் விட்டமின் சி என்பது சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது. எனவே உங்கள் ஆரோக்கியமான உணவு முறையில் தினமும் ஒரு முட்டை கோஸ் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அது உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் அதில் உள்ள ஊட்டச் சத்துக்கள் விட்டமின்கள் பலவகையில் உங்களுக்கு உதவுகின்றது. முடிந்தால் பச்சையாக சாப்பிட முயற்சி செய்ய வேண்டும். பொரியல் போன்று செய்யும் பொழுது அதிகமான எண்ணெய் சேர்க்காமல் பார்த்துக் கொண்டிருந்தால் அதிகமாக சத்தான முட்டைக்கோஸ் உங்களுக்கு தயார்.

செரிமானத்தை சரி செய்கிறது :

பொதுவாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் மட்டுமே எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு பெரிய அளவில் செரிமான பிரச்சனைகள் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. சொல்லப்போனால் காய்கறிகள் பழங்கள் மட்டுமே உண்டு வருவோருக்கு வயிற்றுக்கோளாறுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. அதே போல் முட்டைகோஸில் அதிகமான நார்ச்சத்து இருக்கிறது. நார்ச்சத்து நமது அஜீரண கோளாறுகளை கலைந்து எடுத்து வயிற்று கோளாறுகளை சுத்தம் செய்கிறது.மேலும் இதில் அதிகமான நீர்ச்சத்தும் இருக்கின்றது. எனவே வயிற்றுப் பகுதி மற்றும் குடல் பகுதிக்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக விளங்குகின்றது.

சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்க

இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் காரணி ஆனது, பல சர்க்கரை வியாதிகளுக்கு உபயோகிக்கக் கூடிய மருந்துகள் பயன்படுத்தி வருகிறார்கள். மருத்துவர்கள் முட்டைகோஸ் சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைக்க பெரிதளவு உதவுகின்றது என்று கூறுகின்றனர். முட்டைகோஸில் உள்ள ஒரு காரணி ஆனது சர்க்கரை வியாதிக்கு எதிராக போராடுகிறது. மேலும் அதிகமான இன்சுலின் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் ஏற்கனவே நார்ச்சத்தும் இருப்பதால் உடலில் ஓடக்கூடிய ரத்தமானது சர்க்கரையை உறிஞ்சுவதை முடிந்த அளவு குறைக்கிறது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு ஆராய்ச்சியில் சர்க்கரை வியாதி உள்ள சில எலிகளுக்கு இந்த முட்டைக்கோசை கொடுத்துள்ளனர் 60 நாட்களில் எலிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை வியாதியின் அளவு குறைந்தது கண்டுபிடிக்கக்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதயத்திற்கு இதமானது

நாம் தினமும் சாப்பிடக் கூடிய உணவு வகைகளை கண்டிப்பாக முட்டைக்கோஸ் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். முட்டைகோஸின் சிறப்புகள் கூடிக்கொண்டே போகிறது என்பதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த பட்டியலில் இப்பொழுது இதயம் சேர்ந்திருக்கிறது. முட்டைகோஸில் உள்ள ஒரு காரணி ஆனது குறிப்பாக சிவப்பு முட்டைக்கோஸில் உள்ள ஒரு காரணி ஆனது. இதயத்திற்கு சக்தியை அளிக்கக் கூடிய வல்லமை படைத்தது. என்று குறிப்பிடுகிறார்கள். முட்டைகோஸ் வாங்கும்பொழுது அதன் நிறம் நல்ல நிறமாக இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும். என்று கூறுகின்றார்கள். மேலும் இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த நாளங்களை சரி செய்கிறது.  ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் மாரடைப்பு போன்ற வியாதிகள் வருவது குறைய வாய்ப்புகள் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை சீராக்கி அதற்கு எதிராக செயல்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய அதிகபட்ச சோடியத்தை அளிக்கிறது. அதிகபட்சமாக பொட்டாசியம் சேர்ப்பது மாரடைப்பு வருவதிலிருந்து குறைக்க உதவி செய்யும் .

கிருமிநாசினி :

முட்டைக்கோஸ் உடலில் உள்ள கெட்ட கிருமிகள் பாக்டீரியாக்கள் போன்றவற்றை அளிக்கிறது. தினமும் நம் உணவில் முட்டைக்கோஸ் சேர்த்துக் கொண்டு வருவதினால், உடலிலுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய அனைத்து பாக்டீரியாக்களும் அளிக்கக்கூடிய வேலையை முட்டைகோஸ் செய்கிறது. தீங்கு விளைவிக்கக்கூடிய காரணியான யூரிக் ஆசிட் போன்ற விஷயங்களை உடம்பிலிருந்து முட்டைகோஸ் எடுத்துவிடுகிறது. மேலும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல்களையும் உடலிலிருந்து சுத்தம் செய்யும் வேலையை முட்டைகோஸ் மிகவும் சிறப்பாக செய்து வருகிறது. முட்டைகோஸில் இயற்கையாகவே சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால், இது நல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. மேலும் நுரையீரலுக்கு நன்மை விளைவிக்க கூடியது.

அல்சர் பிரச்சனைகளை சரி செய்கிறது :

இன்று சரியான உணவு பழக்க முறை இல்லாததால் பலரும் அல்சர் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அல்சர் பிரச்சனை வந்தால் சிறிது சாப்பிட தாமதமானாலும் கூட வயிற்று வலி வர ஆரம்பித்துவிடும். மருத்துவர்கள் பசிக்க விடாமல் சாப்பிடவேண்டும் என்று கூறுவார்கள். மூன்று நேரமும் சாப்பிட வேண்டிய சாப்பாட்டை பிரித்து சாப்பிட்டால் அல்சர் வலி பெரிய அளவில் வராது என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் இன்று நாம் வாழும் வாழ்க்கை முறையில் ஐந்து நேரம் உட்கார்ந்து உணவுக்காக செலவழிக்கக் கூடிய சூழ்நிலையில் நாம் யாரும் இல்லை. தொடர்ந்து முட்டைக்கோஸ் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள அல்சர் பிரச்சனைகள் பத்து நாட்களில் காணாமல் போய்விடும் என்று கூறுகின்றனர். இந்த முட்டைக்கோஸ் அப்படியே சாப்பிடாமல் அதை ஒரு ஜூஸ் போல் பிழிந்து சாப்பிட வேண்டும். முட்டைக்கோஸ் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும் அதில் சிறிது கேரட்டையும் போட்டு ஜூஸாக அரைத்து தினமும் 2 கப்புகள் குடித்து வந்தால் ஒரு வாரத்திலேயே நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

வீக்கத்தை குறைக்கும் :

முட்டைகோஸில் இயற்கையாகவே சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கின்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவை உடலில் ஏற்பட்டுள்ள சிறிய சிறிய வீக்கங்கள் போன்றவற்றை குறைக்கிறது. இதனால் ஏற்படும் மூட்டுவலி, கைகால் வலி, முழங்கால் ,போன்றவற்றை குறைக்க முட்டைகோஸ் ஒரு பெரும் காரணமாக இருக்கின்றது. முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் எனும் வேதிப்பொருள், வழி நீக்கியாக செயல்படுகிறது. மேலும் இதில் உள்ள வேதிப்பொருள் வலியை நீக்கி வீக்கத்தை குறைக்க வல்லது. மேலும் முட்டைகோஸில் விட்டமின் இ, மற்றும் விட்டமின் சி இருக்கின்றது. இது வீக்கம் தரக்கூடிய கிருமிகளை நீக்க பெரிதும் உதவி செய்கிறது என்பதை 2014ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

மார்பக பிரச்சனைகளை சரிசெய்யும் :

குழந்தை பெற்ற உடனேயே சில தாய்மார்களுக்கு ஏற்படும் மார்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முட்டைகோஸ் நல்ல தீர்வாக அமையும் என்று கூறுகின்றனர். குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது ஏற்படும் பிரச்சனை, பால் அதிகமாக கொடுக்காமல் தங்கிவிட்டால் மார்பகம் சற்று இறுகிக் காணப்படும். அதனால் வலிகள் ஏற்படும். பல தாய்மார்கள் இதுபோன்ற பிரச்சனைக்கு ஆளாகி உள்ளனர். முட்டைகோஸ் ஒரு நல்ல தீர்வை வழங்குகிறது. முட்டைகோஸில் இருந்து சில இலைகளை எடுத்து அரை மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த குளிர்ந்த இலையை மார்பகத்தில் மேல் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இலை நம் அறையின் வெப்பத் திற்கு வந்த உடனேயே புதிய இலையை அதேபோல் மார்பகத்தில் வலி ஏற்படும் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் சில நேரங்கள் செய்து வந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று கூறுகின்றனர்.