உடல் ஆரோக்கியத்திற்கு தேங்காய் பால்

உடல் ஆரோக்கியத்துக்கு தேங்காய் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...!!

மக்னீசியம்:

ஒரு கப் தேங்காய் பாலில் 89 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெக்னீசியத்தால் நரம்புகள் அமைதியாகும். அது மட்டுமில்லாமல் நமது இரத்தக் கொழுப்பு கட்டுப்பாட்டில் இருக்கும்.

இரும்பு, செலீனீயம் மற்றும் முக்கியமான சத்துக்கள்:

தேங்காய் பாலில் வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, செலீனியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள்  உள்ளன. பசுவின் பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் தேங்காய் பாலை சாப்பிடலாம்.

பாஸ்பரஸ் மூளைக்கு டானிக்: 

பாஸ்பரஸ் சத்துகள் அதிகம் உள்ளதால் எலும்புகள் பலமாக்கும். தேங்காய் பாலில் இருக்கும் செலீனியம் எனும் வேதிப்பொருள் ஆர்த்தரைடீஸ் நோயைக் குணப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நல்ல கொழுப்பை அதிகரிக்க:

தேங்காய் பால் கொழுப்பை அதிகரிக்காது. தேங்காய் பாலில் ஒமேகா3 என்ற முக்கிய வேதிப்பொருட்கள் இருப்பதால் உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

நார்ச்சத்து அதிகம்:

தேங்காய் பாலில் இருக்கும் நார்ச்சத்து அதை உட்கொண்ட பின் வெகுநேரம் பசிப்பதைத் தடுக்கிறது. அதனால் நமது உடல் எடை தானாகவே  குறைகிறது.

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த:

சில பேருக்கு அதிகமாகவே தலை முடி உதிர்வு ஏற்படும். என்ன செய்தாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தேங்காய் பால் நிச்சயம் ஒரு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

தேங்காய் பாலில், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி பங்கல் மற்றும் வைரஸ் பிரார்ப்படீஸ் அதிகம் உள்ளது. அதனால் இதைப் பருகினால், உடலில் எதிர்ப்புச் சக்தி தானாகவே அதிகரிக்கிறது. தேங்காய் பால் பருக இயலாதவர்கள் தினம் ஒரு இளநீர் பருகினால் நலம் விளைவிக்கும்.