பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் ஏற்படும்...?

பொட்டாசியம் அதிகம் உள்ள  உணவுகளை சாப்பிட்டால் 
என்னென்ன நன்மைகள் ஏற்படும்.?

 
நமது உடலுக்கு பலவித ஊட்டச்சத்துக்கள் அன்றாடம் தேவைப்படுகிறது. அதில் மிக முக்கியமானது இந்த பொட்டாசியம். மன அழுத்தத்திற்கும், சீரற்ற ரத்த ஓட்டத்திற்கும், தசைகள் வலுப்பெறவும், உடலில் இருக்க கூடிய அழுக்குகள் வெளியேறவும், திரவ அளவை உடலில் சீராக வைத்து கொள்ளவும் பொட்டாசியம் உதவுகிறது. பொட்டாசியம் சத்து நமது உடலில் பல விந்தைகளை செய்கின்றது.

நமது உடலில் நோய்களின் தாக்கம் இல்லாமலும் இவை பார்த்து கொள்கிறது. நமது உடலில் பல மாற்றங்களை இந்த பொட்டாசியம் சத்து தருகின்றது. பொட்டாசியம் குறைபாடு ஏற்பட்டால் ஏராளமான உடல் கோளாறுகள் ஒன்றன் பின் ஒன்றான உண்டாகும். பொட்டாசியம் நிறைந்த காய்கனிகளை சாப்பிட்டால் அப்படி என்னதான் நமது உடலில் நடக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
   
முக்கிய சத்து..!
மற்ற ஊட்டச்சத்துக்களை போன்றே இந்த பொட்டாசியம் நமது உடலுக்கு மிக முக்கியமாக தேவைப்படுகிறது. இதய கோளாறுகள் முதல் சிறுநீரக பிரச்சினை வரை அனைத்தையும் பொட்டாசியம் சத்தால் குணப்படுத்த முடியும். இவை அனைத்தும் பொட்டாசியம் நிறைந்த உணவுகளினால் தான் சாத்தியமாகும்.
   

உருளை கிழங்கு
பொட்டட்டோ சிப்ஸ், பொட்டட்டோ ப்ரைஸ்... போன்ற உருளைக்கிழங்கு சார்ந்த உணவு பொருளுக்கு நாம் மிக பெரிய அடிமையாக இருக்கின்றோம். ஆனால், உருளை கிழங்கை இப்படி சாப்பிடுவதை காட்டிலும் வேக வைத்து சாப்பிடுவது தான் நல்லது.
ஏனெனில், இதிலுள்ள பொட்டாசியம் அப்போதுதான் அப்படியே நமக்கு கிடைக்கும். அத்துடன் இரும்பு சத்து, வைட்டமின் பி6, சி, நார்சத்து போன்றவையும் சேர்ந்து கிடைக்கும்.
   
பீட்ரூட்
170 கிராம் பீட்ரூட்டில் 518 mg அளவு பொட்டாசியம் உள்ளதாம். இந்த அடர் சிவப்பு நிறத்தில் உள்ள பழம் இதய நோய்கள் வரும் அபாயத்தை பெரிதும் குறைக்கிறது.
இதற்கு முழு காரணமும் பீட்ரூட்டில் உள்ள பொட்டாசியம் தான். மேலும், இதில் உள்ள இரும்புசத்து, மாக்னீஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை சீரான ரத்த ஓட்டத்தை தரும்.
   
முளைக்கீரை
பலவித மருத்துவ பயன்கள் இந்த முளைக்கீரையில் உள்ளதாம். முளைக்கீரையை சாப்பிடுவதால் பொட்டாசியம், வைட்டமின் கே, கால்சியம், மாக்னெஸ் ஆகிய சத்துக்கள் கிடைக்கும்.
எனவே, உங்களுக்கு பார்வை குறைபாடு, எலும்புகள் பாதிப்பு, எதிர்ப்பு சக்தி குறைபாடு.. இப்படிப்பட்ட பிரச்சினைகள் எல்லாம் வராதாம்.

வாழைப்பழம்
பொட்டாசியம் என்றதுமே வாழைப்பழம் என்று தான் பலருக்கு ஞாபகம் வந்திருக்கும். 1 வாழைப்பழத்தில் 422 mg பொட்டாசியம் சத்து உள்ளதாம்.
எனவே, தினம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதோடு முழு ஆரோக்கியத்தையும் தரும்.
   
தக்காளி
இந்தியர்களின் உணவில் தக்காளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் சாப்பிட்டு தக்காளியை ஒதுக்காமல் சாப்பிட்டாலே நமக்கு பலவித சத்துக்கள் கிடைக்கும்.
குறிப்பாக பொட்டாசியம், வைட்டமின் சி, புரதசத்து ஆகியவை உடலுக்கு அதிக அளவில் செல்லும்.
   
ஆரஞ்சு
வைட்டமின் சி ஆரஞ்சில் அதிகம் உள்ளது என்பது நமக்கு நன்கு தெரியும். அத்துடன் இதில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளதாம்.
தொடர்ந்து ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன் பலவித ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
   
அவகேடோ
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்களில் முதன்மையானது இந்த அவகேடோ. நார்சத்து, பலவித வைட்டமின்கள், பொட்டாசியம் போன்றவை இதில் நிறைந்துள்ளதாம். இந்த பழத்தை ஜுஸ் அல்லது சாலட் போன்று தயாரித்து சாப்பிடலாம்.

கிட்னி பீன்ஸ்
நார்ச்சத்தும் பொட்டாசியமும் அதிகம் நிறைந்துள்ள உணவுகளில் கிட்னி பீன்ஸ் முதன்மையான இடத்தில் உள்ளது. அத்துடன் வெள்ளை பீன்ஸ், சோயா பீன்ஸ் போனறவற்றிலும் இதே போன்று பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே, இந்த பீன்ஸ்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்வது நல்லது.
   
உலர் பழங்கள்
உலர்ந்த அத்திப்பழம், ஆப்ரிகாட், பீச் ஆகியவற்றை தினமும் சாப்பிட்டால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும், அதிக பொட்டாசியம் உடலுக்கு கிடைத்தால் பலவித நோய்களில் இருந்து எளிதில் தப்பித்து கொள்ளலாம்.
   
யோகர்ட்
கால்சியம், ரிபோபிளவின்ஸ், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் யோகார்டில் அதில் உள்ளது. உடல் எடையை சீராக வைத்து கொள்ளவும், அடிக்கடி பசி எடுப்பதை தடுக்கவும் இது உதவுகிறது. எனவே அன்றாடம் சிறிது யோகர்ட் கலந்து சாப்பிட்டு வாருங்கள்.
 

இதய நோய்களை ஆபரேசன் இல்லாமல் இயற்கையான முறையில் சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் குணப்படுத்த, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

இதய நோய்கள் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, இதய நோய்கள் Home Page-ற்கு செல்லவும்

இதய நோய்கள் Home Page