செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்...


செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்

உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.

நாம் உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போகும் போது அஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும் உணவை செரிக்க செரிமான நீர் சுரப்பதில்  பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த வயிற்று கோளறு ஏற்படும். பொதுவாகவே வயது ஏற ஏற செரிமான நீர் சுரப்பது குறைந்து கொண்டே வரும். சில சமயங்களில்  உண்ணும் உணவை சரியாக வாயில் அரைத்து மென்று சாப்பிடாவிட்டாலும் அஜீரணம் வரும்

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும் அதிக உணவு, அடிக்கடி சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் வருகிறது. மலங்கழிக்க வேண்டும் என்ற உணர்வு  இருந்தாலும் மலங்கழிக்க முடியாது. இதனால் உடல்கனமாதல், தலைவலி, பசியின்மை, எந்த வேலையிலும் அக்கறையின்மை ஆகியன நேரும். உணவு வெகு  நேரம் குடலில் தங்கி இருந்தால் வாயு உருவாகும். அழுகிய நிலை உருவாகும். வயிறு வீங்கி வலி வரும்.

வயிறு, குடல் பகுதியில் உதரவாயு சேர்வதால் அழற்சி உண்டாகும். இது செரிமானக் குறைபாட்டால் நேர்கிறது. வாய் வழியாகவோ, மலக்குடல் வழியாகவோ  வாயுவை வெளியேற்றாவிட்டால் மார்பு பகுதியில் வலியை உண்டாக்கும். இதய நோய் என்று சந்தேகம் வரும். மூச்சு விடுதல் சிரமம் ஆகும்.
உங்களுக்கு செரிமான கோளாறுகள் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள சில அறிகுறிகளை தெரிந்து கொள்ளுங்கள். உணவு உண்டபின் ஏற்படும் கோளாறுகள் மற்றும் சில உடல் உபாதைகள் உங்களுக்கு செரிமான கோளாறுகள் இருக்கும் என்பதை குறிக்கும்.


அறிகுறிகள் :

1.சாப்பிட உடன் தூக்கம் வராமல் தவித்தால் மற்றும் சிலருக்கு சாப்பிட உடனே வயிற்றில் உப்புசம் காணப்பட்டால் அவர்களுக்கு செரிமானம் சீராக நடைபெறவில்லை என்று அர்த்தம். ஆகவே போதுமான உணவுகளையே இரவு நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2.உங்கள் உடல் எடையின் மாற்றத்தை வைத்தே உங்களுக்கு செரிமான கோளாறு இருக்கிறது என கணக்கிடலாம். தொடர் என்று எடை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் இது ஒரு அறிகுறியாக இருக்கிறது.

3.வாயில் மற்றும் நாசித்துளையில் இருந்து வெளிப்படும் துர்நாற்றம் கூட உங்கள் செரிமான கோளாறுகளால் ஏற்படும். வியர்வையில் இருந்து கூட வெளிப்படும் துர்நாற்றமும் இதற்கான அறிகுறியே.

4.மலச்சிக்கல் கோளாறுகள் இருந்தாலும் நீங்க எடுத்து கொண்ட உணவுகள் ஒழுங்காக செரிமானம் அடையவில்லை என்று அர்த்தம். நல்ல ஆரோக்கியமான உணவுகளையே எடுத்து கொள்வது நல்லது.

5.சருமத்தில் திடீர் என்று ஏற்படும் பருக்களுக்கு காரணம் கூட, நீங்க சாப்பிட உணவுகளின் செரிமான பிரச்சனைதான். இதனால் ஏற்படும் பருக்களின் பாதிப்புகள் தொற்றுக்களை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படும் மற்றும் அழற்சியை உருவாக்கும்.

6.நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் சத்துக்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் முடி வளர்ச்சி தடுக்கப்படும் மற்றும் நகங்கள் அடிக்கடி உடைவது போன்ற அறிகுறிகள் தென்படும். இவைகள் செரிமானத்தில் ஏற்படும் கோளாறுகளால் தான் உருவாகும்.

7.கேஸ்ட்ரிக் ப்ராப்ளம் பாதிப்பு உருவாவதற்கு காரணம் உடலில் இருக்கும் இரும்பு சத்துக்கள் குறைபாடு தான். இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காது, கொழுப்புகள் தான் சேரும் மற்றும் உடல் மிகவும் சோர்வு தன்மையை கொடுக்கும்.

8.செரிமானம் என்றாலே அதற்கு தேவையான என்சைம் குறைந்த அளவில் இருந்தால் நீங்க எந்த உணவுகளை எடுத்து கொண்டாலும் ஒவ்வாமை ஏற்பட்டு சில கோளாறுகளை ஏற்படுத்தும்.


சிறு வயதினரிலிருந்து பெரியவர் வரை சொல்லக் கூடிய வார்த்தை பசியில்லை என்பதே, சரியான நேரத்திற்கு பசியில்லாமல் இருப்பதற்கு காரணங்கள் 

1.போதிய உடல் உழைப்பு இல்லாமல் இருத்தலும்
2.நம் உடலின் அடிப்படை மெட்டபாலிசமும்
3.பசியில்லாத நேரங்களில் தேவை இல்லாமல் சிறுதீனி, காஃபி, டீ போன்றவற்றை சாப்பிடுவதும்.
4.மலச்சிக்கல் இருந்தாலும் சரியான நேரத்தில் பசி எடுக்காது.பசி எடுப்பதைத் தவிர மற்ற பிரச்சினைகள் அஜீரணம், புளியேப்பம் மற்றும் வேறுவிதமான பிரச்சினைகளுக்கு நாம் பொதுவாக ஆண்டாசிட் மாத்திரைகளை சாப்பாடு சாப்பிட்ட பின்பு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். 

எலும்பு தன்னாலே உடைதல் ,கிட்னி பெய்லியர் போன்ற பக்க  விளைவுகளை ஏற்படுத்துகிறது ஆன்டாசிட் மருந்துகள், மாத்திரைகள்.


ஆண்டாசிட் Digene (Mg 185mg Al 830mg), Gelusil (Mg 250mg Al 250mg) போன்ற மருந்துகளில் அதிக அமிலத்தன்மையை நடுநிலையாக்கும் அலுமினியம், மெக்னீசியம் கால்சியம் போன்ற காரத்தன்மையுடைய உலோகங்களே உள்ளன. இப்போது, ‘ஒரே வேளைமருந்தில் அமிலம் சுரக்கும் சுரப்பிகளை நிறுத்தும் Proton pump inhibitors (PPIs) மருந்துகள் இருப்பதால், ஒவ்வொரு வேளை உணவுக்கு முன்னும்பின்னும் அமிலத் தன்மையை குறைந்து வயிற்றில் உள்ள அமிலம் நீர்த்து போய் விடுகிறது .


பர்சில் பாக்கெட்டில் எப்போதுமே ஸ்டாக் வைத்துள்ளவர்கள் நம்மில் பலர் இந்த மிட்டாய் மாத்திரை,கேஸ் மாத்திரை ,சப்பி சாப்பிடற மாத்திரை ,  பால் மருந்து, ரோஸ் மருந்து என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிற இந்த ஆன்டாசிட் மருந்துகள்அலுமினியம் ஹைட்ராக்சைட்,மக்னேசியம் ஹைட்ராக்சைட்,கால்சியம் ஹைட்ராக்சைட் போன்ற வேதி பொருளை உள்ளடக்கியது .

ஆன்டாசிட் மருந்துகள் தொடர்ச்சியாகவும் அடிக்கடியும் எடுத்துக் கொள்ளும்போது ஆட்டோ இம்யூன் நோய்கள் வரவும் அதே சமயத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்த போகவும் நிறைய வாய்ப்புள்ளது.. எனவே சாதாரண ஜெலுசில் ,டைஜின் போன்ற ஆண்டாடிசிட்கள் ஆட்டோ இம்யூன் நோய்களானசொரியாசிஸ் ,ருமாடாய்ட் ஆர்த்ரைடீஸ் , ஆட்டோ இம்யூன் தைராய்ட் ,SLE போன்ற பெரிய நோய்களை உருவாக்கவும் வாய்ப்புகள் மிக மிக அதிகம்.


மேற்கண்ட பக்க விளைவுகளை தடும் கெமிக்கல்களை உபயோகிப்பதை விடுத்து சித்த, ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது செரிமான பிரச்சினைகள் அனைத்தும் முழுமையாக குணமாகும்.


For Contact:

 K7Herbocare

84, Pasupathy Nagar,

P&T Nagar Main Road,

Madurai-625 017.

 

Whatsapp & Call 1: +91-9025047147.

Whatsapp & Call 2: +91-9629457147.