மாரடைப்பை தடுப்பது உங்கள் கைகளில்


மாரடைப்பை தடுப்பது உங்கள் கைகளில்
பிரண்டை உப்பு                            Pirandai Salt


வருமுன் காப்போம்

வசதியான  வைத்திய முறைகள் இன்று கேள்விக்குரியதாகி விட்டதை நீங்கள் அறிவீர்கள். மருத்துவர் சிகிச்சை முறைகளைச் சொல்லுவதும் நோயாளிகள் அவற்றைக் கேட்டு நடப்பதுமான வசதியான முறை வெற்றியளிக்கவில்லை. இது நோயாளிகளின்  இறப்பு விகிதத்தை போதியளவு குறைக்கவில்லை.

நோய் வராமல் தடுப்பதும், நோயை நேரத்தில் அடையாளம் காண்பதும், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை ஆரம்பிப்பதும் அவசியமாகும்.

இதனை நோயாளரின் முழுமையான ஒத்துழைப்புடனும் பங்களிப்போடுமே செயல்படுத்த முடியும். நோயாளிகள் தமது முக்கிய பங்களிப்பை உணர்ந்து, ஏற்று மருத்துவ உதவியுடன் செயல்பட்டால் மட்டுமே தமது ஆரோக்கியத்தை நன்கு பேண முடியும் என்பதை நாம் நன்கு உணரலாம்.

எனவே நமது ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியமானது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், இதய நோயையும் பக்க வாதத்தையும் தடுக்க முடியும்.  இத்தகைய அணுகுமுறையே நல்ல பலனை அளிக்கும்.

மனிதனைப் பாதிக்கின்ற பல்வேறு நோய்களில் இதயநோய் மிகவும் முக்கியமான இடத்தைப் ஏன் பிடிக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம். காரணங்கள் பல உள்ளன.

இருதய நோய்கள் ஏன் முக்கியமானது


மனிதர்களின் மரணத்திற்கான முதல் காரணியாக இருக்கிறது
எதிர்பாராது திடீரென தாக்கும் நோயாகவும் இருக்கிறது.
அதிகம் பயமுறுத்தும் நோயாகவும் இருக்கிறது.
மனிதர்கள் தமது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை மாற்றுவதற்குத் தூண்டக் கூடிய காரணியாகவும் இருக்கிறது.


வீட்டில் நீங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்குச் செய்ய வேண்டியவை என்ன?

உணவு:

உடல் நலத்திற்கு ஏதுவான உணவுகளை உட்கொள்ளுங்கள். தினமும் 5 கப்புகளுக்கு (Serving)  குறையாதளவு பழவகைகளையும் காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நிரம்பிய (Saturated fat) கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்ப்பது அவசியம். அதிக உப்புள்ள உணவுகளையும் தவிருங்கள். முக்கியமாக கடையுணவுகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அத்தகையவையே.


உடல் உழைப்பு:


உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயற்படுங்கள். அதில் உங்கள் இருதயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கும் பணிகளில் அல்லது உடற்பயிற்சியில் தவறாது ஈடுபடுங்கள்.

எடை:

உங்கள் எடையைக் கவனத்தில் எடுங்கள். அதீத எடை உயர் இரத்த அழுத்தத்தைக் கொண்டுவரும். அதே நேரம் ஒருவர் தனது அதீத எடையைக் குறைத்தால் இரத்த அழுத்தம் குறையும்.

புகைத்தல்:

புகைத்தலைக் கைவிடுங்கள். நீங்கள் அதனைச் செய்தால் ஒருவருட காலத்திற்குள்ளேயே மாரடைப்பு வருவதற்கான சாத்தியம் உங்களுக்கு அரைமடங்கு குறைந்துவிடும்.

மது:

மது அருந்துவராயின் அதைக் கைவிடுங்கள் அல்லது அதன் அளவை நன்கு குறையுங்கள். அதிகமாக உட்கொள்ளும் மது உங்கள் எடையை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் பக்கவாதத்தை கொண்டு வருவதற்கான முதற் காரணி மது என்பதுடன் மாரடைப்பைக் கொண்டுவருவதற்கு ஏதுவான காரணி என்பதை அறிவீர்கள்.


மருத்துவரை சந்தியுங்கள்:


எனக்கு எந்தவிதமான நோய் அறிகுறிகளும் இல்லைஎன எண்ணி வாழாதிருக்க வேண்டாம். மனிதர்களுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, குருதியில் அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவு போன்றவை நோய் முற்றும் வரை வெளிப்படையான அறிகுறிகள் எவற்றையும் காட்டுவதில்லை.

எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் மருத்துவரை அணுகி பிரஷர், கொலஸ்டரோல் மற்றும் சீனி அளவை அறிந்து கொள்ளுங்கள்.

அத்துடன் உங்கள் எடையையும், வயிற்றின் சுற்றளவையும் அவர் அளந்து பார்த்து உங்களுக்கு இருதயநோய் வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவார். இவை அதிகமாக இருந்தால் அவற்றைச் சரியான அளவில் குறைப்பதற்கு முயல வேண்டும்.


இருதய நலத்தைப் பேணும் நடவடிக்கைகளை வீட்டில் எடுத்தால் மட்டும்போதாது, உங்கள் வேலைத்தளத்திற்கும் விஸ்தரியுங்கள்

புகைக்காத வேலைத்தளம்:

நீங்கள் வேலை பார்க்கும் இடம் புகை பிடிப்பதற்கு  தடைவிதித்திருக்கிறதா எனப் பாருங்கள். இல்லையேல் அது புகை பிடிக்க தடை செய்யப்பட்ட இடமாக மாற்றுவதற்கு முழு முயற்சி எடுங்கள்.

உடலுக்கு வேலை:

உங்கள் தொழில் உடல் உழைப்பு அற்றதாயின் அங்கு உங்கள் உடலுக்கு வேலை கொடுக்கக் கூடிய வழிமுறைகளை கண்டுபிடியுங்கள்.

லிப்டைத் தவிர்த்து படிகளைப் பயன்படுத்துங்கள்:

மதிய உணவை மேசையில் உட்கார்ந்தபடி உண்ணாமல், வெளியே நடந்து சென்று பெற முடியுமானால் அதைச் செய்யுங்கள். வேலைக்குப் போவதற்கு பஸ், கார் போன்றவற்றுக்குப் பதிலாக சைக்கிளைப் பயன்படுத்த முடியுமானால் சிறந்தது.  முடிந்த அளவிற்கு லிஃப்டை பயன்படுத்துவதை தவிர்த்து மாடிப்படிகளை உபயோகிப்பது இதயத்திற்கு நல்லது.

உணவு:

உங்கள் உணவு அலுவலக காண்ட்டீனில் பெறப்படுகிறது என்றால் அங்கு ஆரோக்கியமான உணவு கிடைக்க வழிசெய்யுங்கள். முடியாவிட்டால் நல்ல ஆரோக்கிய உணவை கொடுக்கும் நல்ல உணவகத்தைத் தேடுங்கள். அதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கான நடையும், நல்ல காற்றும் கிடைக்கும் அல்லவா?

ஓய்வு:

தொடர்ந்து ஒரே விதமான வேலையெனில் இடையில் இரண்டு தடவைகளாவது 5 நிமிடங்கள் ஓய்வு பெற்று உங்கள் கை, கால்களை  நீட்டி நிமிர்த்தி அவற்றைச் சுறுசுறுப்பாக்குங்கள்.

உங்கள் இருதயம் உங்கள் பொறுப்பில் உள்ளது. அதனைச் சுறுசுறுப்பாக நீண்ட காலத்திற்கு செயற்பட வைப்பது உங்கள் கைகளில்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

மன அழுத்தம்:

உங்கள் வேலையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியுடனும் செய்யுங்கள். மனப்பதட்டத்திற்கும், மன அழுத்தத்திற்கும் (Stress) மாரடைப்புடன் தொடர்பு இருப்பதாக சிலஆய்வுகள் கூறுகின்றன. வேலை பார்க்கும் இடத்தில் நெருக்கடிகள் இருக்குமாயின் நீக்க முயலுங்கள்
இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகள் (பிளாக்) ரத்தக் குழாயை கிழிக்கும்போது அல்லது விரிசல் ஏற்படுத்தும்போது பெரும்பாலும் மாரடைப்புகள் ஏற்படுகின்றன.

பாதிக்கப்பட்ட தசை உயிரிழந்து வடுவாக மாறி விடுகிறது. இருதய தசைக்கு உள்ள சுருங்கி விரியும் (பம்ப்) தன்மையை, இந்த வடு இழந்து விடுகிறது. இருதய தசையின் ஒரு பகுதி இறுக்கம் அடைந்து விடுவதால், இருதயத்தின் (இடது வெண்ட்ரிக்கிள், உடலுக்கு ரத்தம் செலுத்தும் முக்கிய அறை) ரத்த வினியோக திறமை குறைந்து விடுகிறது. நுரையீரல் கோளாறுக்கும், மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.

நமக்குத் திடீரென்று மாரடைப்பு வருவது போல் தோன்றினால் அதன் அறிகுறிகள் என்ன?

நாம் உடனே செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி எங்கேனும் இருக்கின்றதா?

ஒரு சில சமயங்களில் வழக்கமான அறிகுறிகள் தோன்றாமல், வெறுமனே மூச்சு விடுவதில் சிரமம், வேர்த்துக் கொட்டுதல் அல்லது திடீரென சோர்வு ஏற்படுதல் மட்டும் தோன்றலாம்.

ஒரு சிலருக்கு இரண்டு தோள்பட்டை மற்றும் கைகளில் வலி ஏற்படலாம். தாடையில் வலி அல்லது முதுகில் தோள்பட்டைக்கு நடுவே வலி ஏற்படலாம். இவைகள் நெஞ்சுவலிக்கான எச்சரிக்கையாக இருக்கும் பட்சத்தில், ஓய்வு எடுத்த ஒரு சில நிமிடத்தில் இந்த அறிகுறிகள் மறைந்து விடும்.

கரோனரி ரத்தக் குழாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டால் மாரடைப்பு வரும். இருதயத்தில் வலி கடுமையாக இருக்கும். தொடர்ந்து நீடிக்கும்.நெஞ்சுவலியுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும், படபடப்பு அதிகரிக்கும். பலகீனம், சோர்வு ஏற்படும், வேர்த்துக் கொட்டும், முகம் வெளிறிப் போகும். இருதயத்துடிப்பு சீராக இல்லாதது போல் தோன்றும்.


இடது மார்புக்கும் தோள்பட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஊசி குத்துவதுபோல் வலி இருப்பதுவும்  ஒரு அறிகுறியே.

விவரிக்க முடியாத சோர்வு, அதிகப்படியான பதற்றம், ஜீரணமின்மை அல்லது காற்று உருவானது போன்ற வலி சட்டென்று உருவாகும்

ஈரவியர்வை, தலை லேசாகி தளர்ந்து தளர்ந்து விழுதல் என வித்தியாசப்படலாம்


மாரடைப்பு வருவது போல் தோன்றினால் நாமாகவே முன்வந்து வேண்டுமென்றே இருமினால் அந்த நேரத்துக்குச் சரியாகும் என்று எங்கோ படித்தேன். அது சரியா?

உடல் உழைப்பின் போது ஒருவருக்கு நெஞ்சில் அசவுகரியம் ஏற்பட்டால், உடனடியாக அவரது உடல் உழைப்பை நிறுத்தி விட்டு அப்படியே படுத்து ஓய்வெடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

உடல் உழைப்பு எனும் போது அது இருமலையும் குறிக்கலாம்.


நைட்ரோ கிளிசரின் மாத்திரைகள் ஏற்கனவே அவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தால், உடனடியாக ஒரு மாத்திரையை அவரது நாக்குக்கு அடியில் வைத்து மெல்ல கரைய செய்ய வேண்டும். வலி தொடர்ந்தால், ஐந்து நிமிட இடைவெளியில் தொடர்ந்து இரண்டாவது முறை மற்றும் மூன்றாவது முறை மாத்திரை கொடுக்கலாம்

உடலை அதிகளவு அசைக்காமல் உடனடியாக ஆம்புலன்சை அழைப்பதும் அல்லது உங்கள் குடும்ப மருத்துவரிடம் செல்வதும் முக்கியம். அவர் உங்கள் தேவைகேற்ப ஊசியொன்றினை முதலுதவியாக இட்டபின் மேற்கொண்ட சிகிச்சைக்கு ஆலோசனை அளிப்பார். டாக்டர் இடும் ஊசிதான் உடனடி மாரடைப்பை தடுக்கும் மருந்தாக அமையும்.

பெண்களுக்கு வருவதற்கு முன் வருகிற எச்சரிக்கை அறிகுறிகள்

இந்த அறிகுறிகள் ஆண்களுக்கு வருவது போல் இல்லாமல் இருக்கலாம். உதாரணத்திற்கு ஆண்கள் அடையும் நெஞ்சு வலியைப் போல பெண்களுக்கு வராமல் இருக்கலாம். ஆக ஒரு பெண்ணுக்கு இருதய நோய்க்கான எச்சரிக்கை அறிகுறிகள் பற்றித் தெரிந்திருப்பதும் ஆண்களைப் போல அல்லாத அறிகுறிகள் வரலாம் என்பதும் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும்

மார்பில் அசெளகரியம்,  அழுத்துதல், இறுக்கம் அல்லது அதிக பளு போன்ற உணர்வு, நடு மார்பில் வலி.

இந்த அசெளகரியம் உடலின் மற்ற பாகங்களான கைகளின் மேற்புறம் (ஒன்று அல்லது இரண்டு கைகளி லும்) முதுகு, கழுத்து, தாடை மேல் வயிற்றுக்குப் பரவுதல், மூச்சிரைத்தல், இது தனியாகவோ அல்லது வசதியற்ற மார்பு நிலையுடன் சேர்ந்தோ இருக்கலாம்.

விவரிக்க முடியாத சோர்வு, அதிகப்படியான பதற்றம், ஜீரணமின்மை அல்லது காற்று உருவானது போன்ற வலி சட்டென்று உருவாகும்

ஈரவியர்வை, தலை லேசாகி தளர்ந்து தளர்ந்து விழுதல் என வித்தியாசப்படலாம்.

இருதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகள் ஆண்களைவிட பெண்களால் வேறு மாதிரி உணரப்படும்.

பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மிக மென்மையாக இருக்கும். பொதுவாக அதிகப்படியான வேலை செய்வதால் ஏற்படுகிற சோர்வு படபடப்பு மூச்சிரைத்தல் நெஞ்சுவலி போன்றவை ஏற்பட்டால் உடனே கவனிக்கப் பட வேண்டும். இருதயத்தில் இருந்து தொடங்கும் பிரச்சினை எந்த விதமான செயலிலும் மோசமடையக் கூடும்.

ஒருவேளை இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருப்பதாக சந்தேகப்பட்டால் அருகில் இருக்கும் நெஞ்சுவலி கிளினிக்கிற்கு நேரில் சென்று உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

பெண்களுக்கு இருதய நோய்கனின் அறிகுறிகளைப் புரிந்து கொள்வது சிரமம் என்பது உண்மைதான். இருந்தாலும் வருமுன் காப்பது எப்போதும் நல்லது. மரபு வழி வரும் பிரச்சினை. வயது இனம் போன்றவற்றால் தடுக்க முடியாததாக இருந்தாலும் வேறு தற்பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றினால் இருதய நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.

இதய நோய்களை ஆபரேசன் இல்லாமல் இயற்கையான முறையில் சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் குணப்படுத்த, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

இதய நோய்கள் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள, இதய நோய்கள் Home Page-ற்கு செல்லவும்

இதய நோய்கள் Home Page