நீரிழிவு கால் புண், சர்க்கரை நோய் புண் குணமாக, சர்க்கரை நோய் புண்கள் ஆற, சர்க்கரை நோய் கால் புண் குணமாக, சர்க்கரை நோய் கால் புண்

சர்க்கரை நோய் புண்களை ஆற்ற
என்னுடைய குடும்ப நண்பர் ஒருவர் கிட்டதட்ட 30களின் ஆரம்பத்திலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சுகர் அளவு 500 வரை சென்று இன்சுலின் ஊசி போட்டு கொண்டவர், அதன்பிறகு சுகர் அளவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நார்மலாக்கி(?) இன்சுலின் மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுரைப்படி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
 
குறிப்பிட்ட நாளன்று என் நண்பரிடமிருந்து எனக்கு ஒரு போன், தான் இப்போது சுகர் அதிகமான காரணத்தினால் ஒரு கால் விரல் கருப்பாகி விட்டதன் காரணமாக மதுரையின் ஒரு பிரபல மருத்துவமனைக்கு வந்ததாகவும் உடனடியாக விரலை எடுக்க சொல்கிறார்கள் என்றும் சொன்னார், நான் அவரிடம் கேட்டேன் உடனடியாக எடுக்க வேண்டுமா? அல்லது ஒரு மாதம் கழித்து எடுக்கலாமா என்று கேளுங்கள் என்று சொன்னேன், அவர் கேட்டு விட்டு ஒரு மாதம் வரை டைம் எடுத்துக் கொள்ளலாம் அதற்கு மேல் லேட் செய்வது நல்லதல்ல என்று மருத்துவர்கள் கூறுவதாக சொன்னார். நான் அவரிடம் உடனடியாக கிளம்பி வந்து விடுங்கள், பார்த்து கொள்ளலாம் என்று சொன்னேன். அவர் வீட்டிற்கு வந்த பிறகு எங்களுடைய K7-தயாரிப்பு சர்க்கரை நோய்க்கான செந்தூரம் மற்றும் சில மருந்துகளையும் சாப்பிட்டார். ஒரே மாதத்தில் அவருடைய கருப்பாகி போன விரல் பழைய நிறத்திற்கே வந்தது, அவர் காலையும் காப்பாற்றி அவர் செலவு செய்ய இருந்த மிகப் பெரிய தொகையினையும் காப்பாற்றிக் கொண்டார்.
 
மேலே நடந்த நிகழ்ச்சி நடந்து முடிந்து 4,5 வருடங்கள் இருக்கும். சமீபத்தில் அதே நண்பரிடம் இருந்து மறுபடியும் ஒரு அவசர போன் கால். நண்பர் அவசர காரியமாக வெளியே ஆட்டோவில் சென்றவர் செருப்பணிய மறந்து சென்று விட்டு, அதே வெறுங்காலுடன் நல்ல மதிய வேளையில் தார் ரோட்டில் ஒரு 50 அடி தூரம் வரை நடந்து சென்றிருக்கிறார், அதனுடைய ரிசல்ட் மறுநாள் காலையில் எழுந்து பார்க்கும்போது கால் முழுவதும் தீப்பட்டது போல பொக்குளித்து விட்டது, சுத்தமாக நடக்க முடியவில்லை என ஒரே அரத்தல். நான் சொன்ன மருத்துவத்தில் ஒரே வாரத்தில் அவருடைய கால் காயங்கள் அனைத்தும் ஆறி மறுபடியும் நடக்க ஆரம்பித்து விட்டார். (சாதாரணமான ஆட்களுக்கே இந்த மாதிரி பொக்குளிப்பு காயங்கள் முழுமையாக ஆற 10நாட்கள் ஆகும்). 
 
நான் அவருக்கு சொன்ன வைத்தியம் என்னவென்றால் நித்திய கல்யாணி செடியின் இலையை அரைத்து ஒரு வேளையும், கிணற்று பாசான் செடியின் இலையையும் (தாத்தா பூச்செடி என்பார்கள், தரை மட்டத்தில் அரை அடி நீளமுள்ள காம்புடன் சிறிய மஞ்சள் நிற பூக்களை கொண்டிருக்கும்) அரைத்து போடச் சொன்னேன். ஒரே வாரத்தில் காயங்கள் அனைத்தும் சரியாகி விட்டன. இந்த வைத்தியத்தை எப்படிப்பட்ட புண்களுக்கும் பயன்படுத்தி ஆற்றிக் கொள்ளலாம்.
 
சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ஏற்படும் புண்களை குணப்படுத்த முடியாது என்ற நிலை இன்றும் இருக்கிறது. அதிலும் குழிப்புண் என்றால், சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் நிலைமை பரிதாபம். என்னதான் மருத்துவம் வளர்ந்திருந்தாலும், சில நோய்களுக்கு சிகிச்சை பலனளிப்பதில்லை. ஆனால் நமது பாரம்பர்ய வைத்தியம் அனைத்து நோய்களுக்குக் கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் குழிப்புண்களை இயற்கை வைத்தியத்தால் குணப்படுத்த முடியுமா என்ற ஒரு சந்தேகம் அனைத்து மக்களிடத்தும் உள்ளது, அது சாத்தியம்தானா என்று தெரிந்துகொள்வதற்கு முன்னர் சர்க்கரை நோயாளிகளுக்கு புண்கள் ஏற்படுவது ஏன் என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

சர்க்கரை நோய் என்பது நமது ராஜ உறுப்புகளில் ஏற்படும்  வளர்சிதை மாற்ற நோய்களின் ஒரு தொகுப்பே. நமது உடலானது தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யாத நிலையிலோ அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை பயன்படுத்த இயலாத நிலையிலோ பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். ஆக, இது ஒரு நோயல்ல, இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் ஏற்படக்கூடிய ஒரு குறைபாடே.

பொதுவாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் அது எளிதில் குணமாகாது. சர்க்கரை நோய் பாதிப்பின் காரணமாக கால்கள் மரத்துப்போகும். மேலும் நரம்புகள் பாதிப்படைவதால், அவற்றின் செயல்திறன் குறைந்து கால்களின் உணர்வு படிப்படியாகக் குறைந்துவிடும். ஆரம்பக்கட்டத்தில் சர்க்கரை நோயாளிகளால் இதை உணர முடியாது. ஆனால், காலப்போக்கில் கால்கள் விரைத்தது போன்ற உணர்வு தோன்றும். இன்னும் சொல்லப்போனால் ஏதோ மெத்தையில் நடப்பதுபோல் இருக்கும். கால்களில் மாட்டிய செருப்பு கழன்றாலும்கூட அது நமக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் கல், முள் அல்லது ஆணி குத்தினால்கூட அதை உணர முடியாது. காரணம் கால்கள் மரத்துப்போயிருக்கும்போது காயம் ஏற்பட்டால் வலி தெரியாது. அது உணரப்படாத பட்சத்தில் காயம்பட்ட இடத்தில் மேலும் அழுத்தி அழுத்தி நடப்பதால் புண் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகும்.

அதேபோல், சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் காலிலுள்ள திசுக்களுக்கு போதிய இரத்தம் பாய்ச்சப்படாமல் போகும். அப்போது காயமோ, புண்ணோ ஏற்பட்டால் போதிய இரத்தம் கிடைக்காமலும் புண்கள் ஆறுவதற்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமலும் போய்விடும். இது தவிர புண்களில் கிருமித் தொற்று ஏற்படவும், பெருகவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இரத்த சர்க்கரையின் அளவு எப்போதும் சரியான அளவில் பார்த்துக் கொள்வதோடு புண்கள் ஏற்படாமல் கவனமாக இருப்பதும் அவசியமானதாகும்.
ஆரம்பகட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களுக்கு ஆவாரம் இலையை அரைத்து கட்ட புண்கள் ஆறும். நாட்பட்ட மற்றும் ஆறாத புண்களுக்கு மேலே கண்டபடி நித்திய கல்யாணியையும், கிணற்று பாசானையும் பயன்படுத்தலாம். ஆனால் சில நாள்கள் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கும். மேலே குறிப்பிட்ட மூலிகைகள் உங்களுக்கு கிடைக்காத பட்சத்தில்  ஊமத்தை இலையில் தயாரிக்கப்பட்ட மத்தன் தைலத்தைப் பூசலாம். இதுவும் பலனளிக்கவில்லை என்றால், K7-சர்க்கரை நோய் புண் களிம்பு  என்ற ஒரு களிம்பு உள்ளது. அதைப் பூசுவதன்மூலம் ஆறாத புண்களும் ஆறிவிடும்.

 சர்க்கரை நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ள மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான மற்ற நோய்களையும் சித்த, ஆயுர்வேத முறையில் சரிசெய்ய, மேலும் தெரிந்து கொள்ள,

K7 Herbo Care,

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 

சர்க்கரை நோய் தொடர்பான மற்ற தலைப்புகளை பற்றி தெரிந்து கொள்ள,  சர்க்கரை நோய் Home Page-ற்கு செல்லவும்

சர்க்கரை நோய் Home Page