எலும்பு தாது அடர்த்தி
30 வயதில் எலும்பு அடர்த்தி குறையுமா ?
எலும்பு உறுதியாக இருக்க சத்தான உணவுகள், சூரியனிடமிருந்தும் கிடைக்கும் வைட்டமின் டி, உடல் உழைப்பு தரும் விளையாட்டுகள் போன்றவை கண்டிப்பாக அவசியம். இவை சரியாகக் கிடைக்காதபோது, ‘போன் மினரல் டென்சிட்டி பிரச்னை’ உருவாகிறது.
கால்சியத்தை உற்பத்தி செய்ய வைட்டமின் டி அவசியம். கால்சியம் சத்தை எலும்பு கிரகிக்க வைட்டமின் டி தேவை. வைட்டமின் டி குறைந்தால், கால்சியத்தின் அளவும் குறையும். ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) எனும் எலும்பு மெலிதல் நோயை ஏற்படுத்திவிடும்.
Bone Mineral Density என்னும் எலும்பு தாது அடர்த்தி குறைபாட்டை
நிரந்தரமாக சரி
செய்ய மேற்கண்ட அடிப்படை விஷயங்களையும் பின்பற்றிக் கொண்டு அத்துடன்
பிரண்டை உப்பையும்
தினமும் காலை
மாலை
இருவேளை 300mg அளவிற்கு 2 முதல்
3 மாத
காலத்திற்கு சாப்பிடும் போது
சரியாகும்...
‘30 வயதில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு லோ போன் டென்சிட்டி பிரச்னை வரும். அது நீங்களா?’, ‘கால்சியம் போதவில்லை எனில் இடித்துக் கொண்டாலே, எலும்பு உடைந்துவிடும்’ இப்படி பெண்களை அச்சுறுத்தும் விளம்பரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. இது உண்மையா?
எலும்பும் ஒரு திசுதான். புதிய எலும்பு செல் உருவாவதும், வயதான செல் மறைவதும், உடலில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும். பொதுவாக, வயது அதிகரிக்கும்போது, எலும்புகளின் அடர்த்தி குறையும். அதிக அளவில் குறையும்போது, எலும்பு தொடர்பான பிரச்னைகள் வருகின்றன.
கால்சியம், வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் குறையும்போதும், எலும்பின் அடர்த்தி குறைகிறது. இதனால், எலும்பு பலவீனமடையத் தொடங்கும். பிறந்த குழந்தைகளுக்கு எலும்பு மிகவும் மிருதுவாக இருக்கும். குழந்தை வளர வளர, எலும்புகள் உறுதியடையும். எலும்புகள் வலு குறைந்துபோனால், லேசாகத் தவறி விழுந்தாலும், எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும். இளம் வயதில் எலும்பு ஆரோக்கியத்துடன் இருந்தால், அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படாது.
எலும்பு உறுதியாக இருக்க சத்தான உணவுகள், சூரியனிடமிருந்தும் கிடைக்கும் வைட்டமின் டி, உடல் உழைப்பு தரும் விளையாட்டுகள் போன்றவைஅவசியம். இவை சரியாகக் கிடைக்காதபோது, ‘போன் மினரல் டென்சிட்டி பிரச்னை’ உருவாகிறது.
கால்சியத்தை உற்பத்தி செய்ய வைட்டமின் டி அவசியம். கால்சியம் சத்தை எலும்பு கிரகிக்க வைட்டமின் டி தேவை. வைட்டமின் டி குறைந்தால், கால்சியத்தின் அளவும் குறையும். ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) எனும் எலும்பு மெலிதல் நோயை ஏற்படுத்திவிடும்.
யாருக்கு வரலாம்?
ஆண், பெண் யாருக்கு வேண்டுமானாலும் எலும்பு அடர்த்திக் குறைபாடு ஏற்படலாம். அதிலும் குறிப்பாக, மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்கள் அதிக அளவில் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர, உடல் உழைப்பு இல்லாதவர்கள், சீரற்ற மாதவிலக்கு உள்ளவர்கள், சினைப்பை, கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்கள், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு உள்ளவர்கள், கால்சியம் குறைபாடு, புகைப் பழக்கம், குடிப் பழக்கம், குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பவர்கள், சரியான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவை சாப்பிடாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு எலும்பின் வலு குறைகிறது.
எந்த வயதில்?
இந்த பாதிப்புகள் பெரும்பாலும் 30 வயதில் வருவது இல்லை. அதனால் அதிகம் பயப்பட வேண்டாம். 55 வயதுக்கு மேல் உள்ள பெண்ணுக்கும் 60 வயதுக்கு மேல் ஆணுக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் வரலாம். ஆனால், தற்போது இந்தியாவைப் பொருத்தவரை 40-50 வயதிலேயே எலும்பின் அடர்த்தி குறைவதால், அதிகமாக எலும்புமுறிவுகள் ஏற்படுகின்றன.
தடுக்க
உடல் எடையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். காலை, இரவு ஒரு கிளாஸ் பால் குடிக்கும் பழக்கத்தைத் தொடரலாம். வாரம் ஒருமுறை பாதாம் பால் அருந்தலாம். சோயா பால், வேர்க்கடலை பால் குடிப்பதும் நல்லது.
பிறந்த குழந்தைகளை சூரியக் கதிர்கள் படும்படி, காலை வெயிலில் 10 நிமிடங்கள் வைக்கலாம். மருத்துவர் ஆலோசனையுடன் உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.
வளரும் குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டும்.
சினைப்பை, கர்ப்பப்பை அகற்றப்பட்டோர் கால்சியம் நிறைந்த உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். கால்சியம் நிறைந்த கேழ்வரகு, பால் பொருட்கள், முட்டை, பாதாம், கடல் உணவுகள், கீரைகள், ஆரஞ்சு போன்றவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்றி: ஆஷிக் அமீன்
எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்,
ராமநாதபுரம்...
நன்றி: விகடன்
https://www.vikatan.com