மூட்டு வலி குணமாக பிரண்டை உப்பு...

மூட்டு வலி என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது ?

 
மூட்டுவலி வயதாவதாலும் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையினாலும் இன்று பரவலாக வருகிறது. இன்று குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவருக்கு மூட்டுவலி இருக்கிறது. 

மூட்டுவலிக்கு பலபல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மூட்டுவலிக்கான அடிப்படையான முதல் காரணம் இன்று நாம் சாப்பிடும் உணவில் ரசாயனங்கள் மட்டுமே உள்ளது, இன்று பெரும்பாலான மூட்டு வலிகளுக்கு காரணம் இயக்கமின்மையே, கடந்த தலைமுறை நபர்களுக்கு பெரும்பாலும் கை, கால் மூட்டுவலிகளே கிடையாது.

ஏனென்றால் பெரும்பாலான வேலைகள் அனைத்தும் உடல் உழைப்பினாலேயே செய்யப்பட்டன, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் வேலை இருந்தது.

ஆனால் நாகரிக காலத்தில் நாம் சாப்பிடுவதை தவிர உள்ள அனைத்து வேலைகளையும் மெஷின்களே செய்கின்றன, நாம் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் மெஷின்கள் செய்கின்றன, மெஷின்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன...
நாம் மூட்டு வாதத்தினாலும், முடக்கு வாதத்தினாலும் முடங்கி போகிறோம்...

உங்களுடைய ஆரோக்கியம் உங்களுக்கு திரும்ப வேண்டுமென்றால் உங்களுடைய சோம்பேறித்தனத்தை விடுத்து நம் உடல் முழுவதற்கும் தினமும் கண்டிப்பாக வேலை கொடுக்க வேண்டும்...

இயற்கை விதிப்படி இயங்கும் பொருட்கள் மட்டுமே உயிர்ப்போடு இருக்க முடியும், இயங்க முடியும்...

எந்த ஒரு நோய்க்கும் மருந்து சாப்பிடலாம், ஆனால் குறுகிய காலத்திற்கு மட்டுமே  மருந்து எடுத்துக் கொண்டு குறுகிய காலத்தில் நோயை சரி செய்து கொண்டு மருந்தை விட்டு விட வேண்டும்...

வாழ்க்கை முழுவதும் உணவுதான் சாப்பிட வேண்டும், மருந்துகள் அல்ல...


மூட்டுவலி மற்றும் மூட்டு இணைப்புகளில் உள்ள பிரச்சினைகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு இயற்கையின் அற்புதமான தீர்வு பிரண்டையாகும், மேற்கண்ட பிரச்சினைகளை நிரந்தரமாக சரி செய்ய பிரண்டை உப்பை தினமும் காலை மாலை இருவேளை 300mg அளவிற்கு 2 முதல் 3 மாத காலத்திற்கு சாப்பிடும் போது சரியாகும்...

பிரண்டை உப்பு                            
 


நமது உடலின் இயக்கத்தில் எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. நாம் நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கார்ட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது.  வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது.

உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.

சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல் ஆகியவற்றால் மூட்டுத்தசை நாண் அலர்ஜி ஏற்படலாம்.  மூட்டின் அதிக பயன்பாட்டால் அதன் முன் பக்கத்தில் வலி ஏற்படும். தசைநார் வலி பிரச்னை இருக்கும் போது முழங்கால் மூட்டு வலி அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எலும்புத் தேய்வு, மூட்டு நாண் கிழிதல் போன்ற பாதிப்புகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.

சத்தான உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி, உடலை வேலை வாங்குவதில் கவனம் ஆகியவை அவசியம். சிறிய பிரச்சனை தோன்றும் போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது
நல்லது. மூட்டுப் பிரச்னைகளுக்கு பிசியோ தெரபி பயிற்சிகள் மூலம் தீர்வு காண முடியும்.

இயந்திரம் தங்கு தடையின்றி இயங்க வேண்டுமானால், "லூப்ரிகேஷன்' (உயவுத் தன்மை) தேவை. இல்லையென்றால் உராய்வு ஏற்பட்டு, இயக்கம் தடைபடும். தேய்மானமும் அதிகரிக்கும். அப்போது, தேவைப்படும் உயவு எண்ணெயைப் போட்டால், மீண்டும் சீராக இயங்கும். அதே சமயம்
இவ்வாறு உயவுத் தன்மை வெகு சீக்கிரம் குறைந்துவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இயந்திரத்துக்கு மட்டுமல்ல இந்தப் பராமரிப்பு.  உடல் என்ற முக்கியமான
இயந்திரத்துக்கும் இது தேவைப்படுகிறது. அவ்வாறு இல்லாவிட்டால், ஏற்படுவதுதான் மூட்டு வலி (ஆர்த்தரைட்டீஸ்). ஆயுர்வேத சிகிச்சையை முறையாகச் செய்துகொண்டால், ஆர்த்தரைட்டீஸ் நோய் காணாமல் போய்விடும். 
இனி மூட்டு வலிக்கான ஆயுர்வேத சிகிச்சை
முறை குறித்து ஓர் அலசல்:

ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படை என்ன?

நமது ஒவ்வொருவருன் உடலும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தன்மைகளைக் கொண்டவை. அதன் அடிப்படையில்தான் உடல்நிலையும் அமையும்; குணாதிசயம் ௬ட மாறுவதுண்டு. இது மரபணு அடிப்படையில் அமைவது. இந்த தோஷங்களை "ப்ரக்ருதி' என்று ஆயுர்வேதம்
குறிப்பிடுகிறது.

அதே சமயம் எல்லோரது உடலிலும் மூன்று தோஷங்களும்
இருக்கும். வெவ்வேறு விகிதத்தில் அமைந்திருக்கும். ஒருவருக்கு இருப்பது போல் இன்னொருவருக்கு இந்த விகிதம் இருக்காது. உணவு, பழக்கவழக்கங்களின் மூலம் இந்த மூன்று தோஷங்களின் பாதிப்பையும் சமநிலைப்படுத்தலாம்.


மூட்டு வலி ஏன் ஏற்படுகிறது?

எலும்புகள் இணையும் பகுதிகளில் உழலும் தன்மை எளிதாக இருக்க
எண்ணெய்ப் பசை தேவை. இந்த எண்ணெய் "ஸ்லேஷக கபம்' என்ற திரவமாகும். எண்ணெய்ப் பசை குறைந்துபோனால், எலும்புகள் எளிதாக உராய முடியாது. அதனால், இயக்கம் தடைபடும். மேலும், வெப்பம் ஏற்படும். இந்த உராய்வினாலும், வெப்பத்தினாலும் வலி ஏற்படுகிறது.
வலியின் தொடர்ச்சியாக உடல் இயக்கமும் பாதிக்கப்படுகிறது.

இது நீடிக்கும்போது, உடல் உறுப்புகளே விகாரமாகும் அபாயமும் உள்ளது. உதாரணத்துக்கு கால் மூட்டுவலி முற்றினால், முடங்கிப் போய், ஊனத்தன்மை ஏற்படக்௬டும். இதை "வக்ரம்' என்கிறது ஆயுர்வேத மருத்துவம். உடலின் மூன்று தோஷங்களில் ஒன்றான வாதம்
அதிகரித்தால், இந்த எண்ணெய்ப் பசை குறைந்து, உலர்ந்துவிடும்.

மூட்டு வலிக்கான அறிகுறி என்ன?

வழக்கமாக அடிபட்ட இடத்தில் வலிக்கும். உள் காயத்தாலும் இவ்வாறு வலி ஏற்படும். ஆனால், கை, கால் மூட்டுகள், விரல் இணைப்புகள்,
தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் வலி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தால், அது மூட்டு வலிக்கான அறிகுறியாகவே இருக்கும்.

மூட்டு வலிக்கும் முதுமைக்கும் தொடர்பு உண்டா?

நிறைய இருக்கிறது. மனித வாழ்நாளை மூன்றாகப் பிரிக்கலாம்.
"பால்யம்' என்னும் இளமைக் காலம். அதில், கபம் அதிகமாக இருக்கும். எனவே, அது தொடர்பான வியாதிகளே அதிகம் வரும்.
"மத்யம்' எனப்படும் நடுத்தர வயதுக் காலம். அந்த வயதில், பித்தம் அதிகம். ஆகவே, அது தொடர்பான நோய்களே அதிகம் ஏற்படும்.

"வார்த்திக்' எனப்படும் வயோதிகப் பருவம் அல்லது மூப்பு. அப்போது வாத தோஷமே உடலில் அதிகம் இருக்கும். அதன் அடிப்படையில் நோயும் தோன்றும்.

எனவே, மூப்புக் காலத்தில்தான் மூட்டு வலி அதிகம் தோன்றும். எனினும், சிலருக்கு 40 வயதில் ௬ட மூட்டு வலி தோன்றுவதுண்டு. அதற்கு அவர்களது உடலில் உள்ள வாத தோஷம் அதிகமாகவும் தீவிரமாகவும் இருப்பதே காரணம்.

மூட்டு வலிகள் எத்தனை வகைப்படும்? அதற்கு ஆயுர்வேதம் என்ன காரணத்தைச் சொல்கிறது?

1. "சந்திவாஹம்' என்பது ஆங்கிலத்தில் Osteo Arthritis எனப்படுகிறது. கால் மூட்டுப் பகுதியில் வருவதால் முழங்கால் வலி என அழைக்கப்படும். 

2. "அபாபஹுகம்' என்பது தோள்பட்டையில் ஏற்படுவது. இது ஆங்கிலத்தில் Peri Arthritis எனப்படுவதாகும். 

3. "மன்யாக்ரஹம்' எனப்படும் நோய் "பிடருவலி' எனத் தமிழில் அழைக்கப்படுகிறது. கமுத்துப் பகுதியில் தோன்றும் இது Cervical Spondylosis என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது. இது கைகளில் மரத்துப் போகும் நிலையை ஏற்படுத்தும். 

4. "கடிகிரகம்' என்ற மூட்டுவலி. இதை Lumbosaral Spondylosis என ஆங்கில மருத்துவம் ௬றுகிறது. இது இடுப்பில் தோன்றும்வலியாகும்.

5. "வாத ரக்தம்' எனப்படுவது "கீல் வாயு' என அழைக்கப்படும் மூட்டு
வலியாகும். இது Gouty Arthritis ஆகும். கைவிரல், கால் விரல், குதிகால் ஆகிய
பகுதிகளில் ஏற்படும்.

இவை அல்லாமல், சர்வாங்க வாதம் எனப்படும் நோய் அனைத்துவித
மூட்டு வலிகளையும் உள்ளடக்கியது.

மூட்டு வலி ஆண்களுக்கு அதிகம் வருமா?
பெண்களுக்கு அதிகம் வருமா?


ஒவ்வொரு விதமான மூட்டு வலி அவரவருக்கு ஏற்ப
தோன்றுவதுண்டு. வீட்டு வேலை செய்யும் பெண்கள் நாளொன்றுக்கு அதிக தொலைவு நடக்கிறார்கள். மேலும், வீட்டில் அதிகமாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்வது, கருத்தடை ஆபரேஷன், கருப்பை அகற்றப்படுவது ஆகிய காரணங்களாலும் முழங்கால் மூட்டு வலி அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் குழந்தை பெற்ற பெண்களில் பலர் திடீரென்று உடல் பருமனாகிவிடுகின்றனர். உடல் பருமனும் மூட்டுவலிக்கு முக்கியக் காரணமாகும்.

ஏதாவது ஒரு ஸ்டாண்டின் மீது அளவுக்கு அதிகமாக எடையை வைத்தால், அந்த ஸ்டாண்டின் இணைப்புப் பகுதிதான் முறியும். அதைப் போல் உடல் எடை அமுத்துவதால், முழங்கால் இணைப்பு அதைத் தாங்காமல், உராய்வு அதிகருத்து, வலி ஏற்படுகிறது.


ஆண்களைப் பொருத்தவரையில், அனைத்து விதமான மூட்டுவலியும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சாலையில் நீண்ட நேரம் கால் கடுக்க நிற்கும் காவலர், வகுப்பறையில் நிற்கும் ஆசிரியர், அடிக்கடி மாடியில் ஏறி இறங்கி வேலை செய்வோர், விளையாட்டு வீரர்கள், இருசக்கர வண்டிகளை ஓட்டுவோர், பொறியாளர்கள் எனப் பலதரப்பட்டோருக்கு இவ்வாறு கமுத்து
வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி எல்லாமே தோன்றும் வாய்ப்பு உள்ளது.


தரையில் காலை மடித்து அமர்ந்தால், மூட்டு வலி அதிகரிக்கும் என்று ஆங்கிலமருத்துவம் ௬றுகிறதே?

மூட்டுப் பகுதிகளை அதிகமாக இயக்கினாலும் வலி
ஏற்படும். மூட்டு வலிக்கு உணவு மட்டுமின்றி, வாழ்க்கை முறையும் முக்கிய காரணமாகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். இப்போதைய நிலையில் தரையில் கால் மடித்து அமர்ந்தால்,மூட்டுவலி தோன்றுவது இயல்பே.

ஏற்கெனவே சொன்னபடி இரு சக்கர வண்டி ஓட்டுவது,
நீண்ட நேரம் கால் கடுக்க நிற்பது, மாடிப்படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவது
ஆகியவையும் இத்தகைய பாதிப்புக்கு வழி வகுத்துவிடுகிறது.

மூட்டு வலிக்கு செயற்கை மூட்டு பொருத்துவதற்கு அலோபதி சிகிச்சையில் வழியுள்ளது. அதை ஆயுர்வேதம்ஆதருக்கிறதா?

உடலின் இயல்புக்கு ஒவ்வாத எந்தப் பொருளும் நல்லதல்ல. அதை உடல்
இயல்பாக ஏற்காது. இணைப்புப் பகுதிகளில் மூட்டு வலி ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமானஎண்ணை ய்ப் பசை ஏற்பட உதவினால் போதும்.

மூட்டு வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை என்ன?

எண்ணெய்ப் பசை பற்றாக்குறைதான் மூட்டுவலிக்கெல்லாம் முக்கியக்
காரணம். எனவே, அந்தக் குறையைப் போக்குவதற்கு மூட்டு வலி பாதித்த உடல் பகுதியில் எண்ணைய் தேய்த்து, நீவி விட வேண்டும். அதன் பின், ஒத்தடம் அளிக்க வேண்டும். இதை "ஸ்நேகஹ; ஸ்வேதஹ' என்று வடமொழியில் குறிப்பிடுகிறார்கள். அதாவது, எண்ணெய் தேய்க்கும்போது, அது மூட்டு வலிப் பகுதியில் பரவுகிறது.

பிறகு, அங்கே நீவிவிடும்போது, உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது. இதனால், பசை இல்லாத இடத்துக்கு எண்ணெய் போய்ச் சேருகிறது.
எண்ணெய்ப் பசை குறைவதற்கு ஒருவரது உணவுப் பழக்கமும்
காரணமாக இருக்கும். அதையும் கண்டறிந்து, பசை குறையாமல் தடுக்கவும், எண்ணெய்ப் பசை ஏற்படுவதற்கும் உருய வகையிலான உணவுகளை நோயாளி சாப்பிட வேண்டும் எனச் சொல்கிறது ஆயுர்வேதம். அது மட்டுமின்றி, வாழ்க்கை முறையையும் அதற்கேற்ப மாற்றியமைக்க
அறிவுறுத்துகிறது இச் சிகிச்சை முறை.

சுருக்கமாகச் சொன்னால், மூட்டுவலி தீர்க்க முடியாத நோயே அல்ல. ஆயுர்வேதம் அதைப் பூரணமாகத் தீர்த்துவிடும்.

மூட்டுவலி வராமல் தடுக்கும் உணவு எது?

வாயுவை அதிகரிக்கும் கிழங்குவகைகள், வாழைக்காய், எண்ணெய் பதார்த்தங்களைத் துறந்துவிடவேண்டும். நார்ச்சத்துள்ள உணவு மிகவும் நல்லது. நிறைய தண்ணீர் குடிப்பவர்களுக்கும் மலச்சிக்கல் இல்லாதவர்களுக்கும் இந்நோய் வரவே வராது.
 

நாள்பட்ட மூட்டு வலிகள், Rheumatoid arthritis, Arthritis, Osteoarthritis, Gout. Psoriatic arthritis முதலிய நோய்களை முழுமையாக குணப்படுத்தும் பிரண்டை உப்பு, கட்டுக்கொடி, பஞ்சகவ்யா மற்றும் சித்த ஆயுர்வேத மருந்துகளும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்..

தொடர்புக்கு: 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001.

CELL & Whatsapp 1: +91-9629457147

CELL & Whatsapp 2: +91-9025047147

 


Keywords:

மூட்டு வலி சரியாக, மூட்டு வலி என்றால் என்ன, மூட்டு வலி சித்த மருத்துவம், மூட்டு வலி எண்ணெய், மூட்டு வலி நீங்க யோகா, மூட்டு வலி நீங்க பாட்டி வைத்தியம், மூட்டு வலி குறைய, மூட்டு வலி காரணங்கள், மூட்டு வலி இயற்கை மருத்துவம், மூட்டு வலி தீர்வு, முடக்கு வாதம், முடக்கு வாதம் நீங்க, முடக்கு வாதம் அறிகுறிகள், முடக்கு வாதம் இயற்கை மருத்துவம், முடக்கு வாதம் தீர்வு, முடக்கு வாதம் சிகிச்சை, முடக்கு வாதம் குணமாக, முடக்கு வாதம் தவிர்க்க வேண்டிய உணவுகள், முடக்கு வாதம் சித்த மருத்துவம், முடக்கு வாதம் மருத்துவம், முழங்கால் வலி குணமாக, முழங்கால் வலி நீங்க, முழங்கால் வலிக்கு மருந்து, முழங்கால் வலி மருந்து, முழங்கால் வலி, முழங்கால் வலிக்கு, முழங்கை வலி, முழங்கால் மூட்டு வலி, முழங்கால் மூட்டு வாதம், முழங்கால் மூட்டு வீக்கம், முழங்கால் சவ்வு, முழங்கால் வீக்கம், முட்டுவலி, முட்டு தேய்மானம், முட்டு வீக்கம், முட்டு சவ்வு, முட்டி வலி, முட்டி வலி குணமாக, முட்டியில் நீர், முட்டி தேய்மானம், முட்டி வலி காரணம், முட்டி வலிக்கு மருந்து, முட்டி ஜவ்வு, முட்டி வலி குறைய, முட்டி சவ்வு,