Posts

ஒற்றைத் தலைவலி நீங்க கருப்பட்டிக் காப்பி...

  ஒற்றைத் தலைவலி நீங்க கருப்பட்டிக் காப்பி...   தேவையான பொருட்கள்: கருப்பட்டி - 1 மேஜைக்கரண்டி சுக்கு   - 1/4 தேக்கரண்டி காப்பித்தூள்   - 3/4 தேக்கரண்டி காய்ச்சிய பால் - 1/4 கோப்பை (தேவைப்பட்டால்)   செய்முறை:   1 கோப்பை தண்ணீரில் கருப்பட்டி சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தயாராக வைத்துக் கொள்ளவும். அதில் சுக்குப்பொடி, காப்பி பொடி சேர்த்து   நன்கு   கலக்கவும். தேவைப்பட்டால் காய்ச்சிய பால் சேர்த்துக்கொள்ளலாம். இது மலச்சிக்கல் நிவாரணம் மற்றும் ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவுகிறது. வறட்டு இருமல் மற்றும் சளி தொந்தரவுக்கு நல்ல மருந்தாக பயன்படுத்தலாம்.

குழந்தைகள் காய்ச்சலைக் குறைக்கும் 10 வீட்டு வைத்தியம்

குழந்தைகள் காய்ச்சலைக் குறைக்கும் 10 வீட்டு வைத்தியம் 1. நெற்றியில் ஈரத்துணி குழந்தையின் நெற்றியில் காட்டன் துணியை நனைத்து, பிழிந்து அதை நெற்றியில் பற்று போல மடித்து போட்டால் காய்ச்சல் குறையும். உடலிலும் ஈரத் துணியை ஒத்தி ஒத்தி எடுக்கலாம். இதனால் காய்ச்சல் விரைவில் குறையும். குழந்தையை இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும். சாதாரண தண்ணீரில் குழந்தையை குளிப்பாட்ட கூடாது. 2. தாய்ப்பாலே சிறந்த மருந்து குழந்தைக்கு திரவ உணவுகளை கொடுத்திட வேண்டும். 0-6 மாத குழந்தைக்கு தாய்ப்பால் அதிக அளவில் கொடுப்பது நல்லது. 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பால், சுத்தமான தண்ணீர், பழச்சாறு கொடுக்கலாம். மருத்துவர் பரிந்துரைத்து இருந்தால் சலைன் டிராப்ஸை குழந்தையின் மூக்கில் போடலாம்.  3. வெங்காய சிகிச்சை வெங்காயத்தை அறிந்து அதைக் குழந்தையின் உள்ளங்காலில் 2 நிமிடம் அப்படியே வைத்திருக்கவும். ஒரு நாளைக்கு இருமுறை இந்த சிகிச்சையை செய்யலாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெங்காய சாறை 2 டீஸ்பூன் அளவுக்கு சாப்பிட கொடுக்கலாம். இதனாலும் காய்ச்சல் குறையும். 4. இஞ்சி குளியல் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பவு