நீரிழிவு நோயால் வரும் கால் மதமதப்பு, கால் எரிச்சல், கால் பலவீனம் கால் பாதங்களில் ரத்த குழாய்களில் ஏற்படும் சீரற்ற ரத்த சுழற்சிக்கு சித்த மருத்துவம்...
நீரிழிவு நோயால் வரும் கால் மதமதப்பு, கால் எரிச்சல்,
கால் பலவீனம் கால் பாதங்களில் ரத்த குழாய்களில் ஏற்படும்
சீரற்ற ரத்த சுழற்சிக்கு சித்த மருத்துவம்...
நீரிழிவு
நோய் என்பது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தேவையை விட அதிகமாக இருப்பது
ஆகும். மிகவும் தாகமாக உணர்வது, வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல்,
மிகவும் சோர்வாக உணர்வது, உடல் எடை குறைதல், கால்கள் மரத்துப்போதல்,
வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல், கண் பார்வை மங்குதல், புண்கள் ஏற்பட்டால்
எளிதில் குணமடையாத நிலை, தாம்பத்யத்தில் ஆர்வம் இல்லாத நிலை போன்றவை
நீரிழிவு நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள். இது நபருக்கு நபர்
வேறுபடும்.
சித்த மருத்துவத்தில் நீரிழிவு,
இனிப்பு நீர், மதுமேகம் என்றழைக்கப்படுகிறது, நீரிழிவு நோய்
கட்டுப்பாடில்லாமல் இருந்தால் ஏழு உடல் தாதுக்களையும் பாதித்து உடலை
உருக்கி விடும். ஆங்கில மருத்துவமுறையில் டைப் 1, டைப் 2 என்று நீரிழிவு
நோய்கள் இரண்டுவிதமாக அழைக்கப்படுகின்றன. இது தவிர கர்ப்ப காலத்தில் வரும்
ஜெஸ்டேசனல் நீரிழிவு, சிறு குழந்தைகளுக்கு வரும் ஜுவைனல் நீரிழிவு
நோய்களும் உண்டு.
சித்த மருத்துவ தீர்வுகள்:
1) மதுமேக சூரணம் 1 முதல் 2 கிராம் அல்லது மதுமேக மாத்திரை 1 முதல் 2 மாத்திரை வீதம், காலை, இரவு சாப்பிட வேண்டும்.
2) திரிபலா சூரணம் அல்லது திரிபலா மாத்திரை காலை, இரவு எடுக்கலாம்.
3) சீந்தில் சர்க்கரை 500 மி.கி. காலை, இரவு எடுக்க வேண்டும்.
4)
ஆவாரை குடிநீர் பொடி 1 முதல் 2 கிராம் அளவில் எடுத்து, ஒரு டம்ளர்
தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, இரவு குடிக்க வேண்டும்.
5) சர்க்கரைக் கொல்லி பொடி காலை, இரவு 500 மி.கி. முதல் ஒரு கிராம் வெந்நீரில் சாப்பிடலாம்.
சிலர்
தேன் காய் அல்லது மகாகனி என்றழைக்கப்படுகிற ஸ்வெட்டீனியா தாவரத்தின்
விதையை பொடித்து சாப்பிடலாமா என்று கேட்கிறார்கள், ரத்த சர்க்கரை அளவையும்,
ரத்த அழுத்தத்தையும் இது குறைக்கும். சித்தமருத்துவரின் ஆலோசனையின் பேரில்
இதை சாப்பிடலாம். ஆனால் கல்லீரல் நோய் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
கால் எரிச்சல் நீங்க :
நீரிழிவு
நோயில் வருகிற கால் மத மதப்பு, கால் எரிச்சல், கால் பலவீனம் இவைகளுக்கு
காரணம் கால், மற்றும் பாதங்களில் மேலோட்டமாக உள்ள ரத்த குழாய்களில்
ஏற்படும் சீரற்ற ரத்த சுழற்சி ஆகும். இதற்கு சித்த மருத்துவத்தில்,
திரிபலா
சூரணம் பொடி 1 கிராம் எடுத்து அதனுடன் முத்துச் சிப்பி பற்பம் 200 மி.கி.,
ஆறுமுகச் செந்தூரம் அல்லது அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய
பற்பம் 200 மி.கி. சேர்த்து காலை, இரவு இருவேளை உணவுக்குப் பின் சாப்பிட
வேண்டும்.
கால்கள், பாதங்களில் வாத கேசரி தைலம்
அல்லது சிவப்பு குக்கில் தைலம் அல்லது விடமுட்டி தைலத்தை தேய்த்து
வரவேண்டும். உள்ளங்கால், கால் தசைகளை நன்றாக பிடித்து விடவேண்டும்.
நீரிழிவு நோயாளிகள் கால் மற்றும் பாதங்கள், விரல்களின் பராமரிப்பில் கவனம்
செலுத்த வேண்டும். நகங்களை ஒழுங்காக வெட்டவேண்டும். வெளியே போகும் போது
காலணி போட்டுத்தான் செல்ல வேண்டும்.