இரத்தசோகை நோய் உள்ளவர்கள் குடிக்க வேண்டிய பயனுள்ள பானம் !!

இரத்தசோகை நோய் உள்ளவர்கள் குடிக்க வேண்டிய பயனுள்ள பானம் !!

உடலில் ரத்த சோகை நோய் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் யார் வேண்டுமானாலும் பருகலாம். முதலில் ஒரு பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை
கறிவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் அதே அளவிற்கு ஒரு கைப்பிடி பச்சை முருங்கை இலைகளை சேர்த்து கொள்ளுங்கள். இலைகள் மட்டுமல்லாமல் முருங்கை காம்புகளில் அதைவிட அதிக சத்துக்கள் உண்டு எனவே முருங்கையின் இலை காம்புகளையும் கொஞ்சம் சேர்த்துக்
கொள்ளுங்கள்.

பின்னர் 4 டம்ளர் தண்ணீர் மூன்று டம்ளராக வற்றும் அளவிற்கு நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் இதனை வடிகட்டி மூன்று பேர் குடிக்கலாம். இதை அப்படியே வெதுவெதுப்பாக குடித்து விடலாம். கீரைகளையும் மென்று தின்பது ரொம்ப நல்லது.

இரத்த சோகையினால் தலை முடி உதிர்தல் பிரச்சினையும் உண்டாகும். கறிவேப்பிலை மற்றும் முருங்கை இலை சாற்றை பருகும் பொழுது தலைமுடி உதிர்வதும் நின்று விடும். வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண்பார்வைக் கோளாறுகளை கூட சரிப்படுத்தும் ஆற்றல் இந்த பானத்திற்கு உண்டு. இதில் இருக்கும் வைட்டமின்கள், கால்சியம், அயன் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முருங்கைக்கீரையில் அசைவத்திற்கு
இணையான எட்டு அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றி விடும். 

தினமும் குடிக்க முடியவில்லை என்றாலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரம் ஒரு முறையாவது குடித்து வாருங்கள், நல்ல உடல் ஆரோக்கியம் வலுப்பெறும்.