அனைத்து நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முள் சீத்தா டீ.. இத்தனை பயனா?

அனைத்து நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முள் சீத்தா டீ.. இத்தனை பயனா?

புற்றுநோய் முதல் இதய நோய் வரை அனைத்திற்கும் முள் சீத்தா அருமருந்தாகுகின்றது.

முள் சீத்தா மனித உடலின் அனைத்து செயல்பாட்டிற்கும் நன்கு உதவுகிறது.

இவற்றில் அதிகமான ஊட்டசத்துகள் நிறைந்துள்ளது. புரதம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், கால்சியம், வைட்டமின் எ, பொட்டாசியம், இரும்பு சத்து, வைட்டமின் பி போன்ற மூல பொருட்கள் உடலை சீராக வைக்க பயன்படுகிறது.

முள் சீத்தா பழத்தை காட்டிலும் அவற்றின் இலைகள் அதிக மருத்துவ தன்மை உடையது. அதை போலவே தான் முள் சீத்தாவில் டீ போட்டு குடிப்பதனால் பல நோய்களை நம்மை விட்டு பறந்து செல்கின்றது. தற்போது முள்சீத்தா டீயின் மகத்துவங்களை பற்றி பார்ப்போம்.

தேவையானவை :

• முள் சீதா இலை - 6

• தேன் - 1 ஸ்பூன்

செய்முறை :

முதலில் 6 காய்ந்து அல்லது ஃபிரஷ் முள் சீத்தா இலைகளை எடுத்து கொண்டு, அதனை 4 கப் நீரில் மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும்.

மேலும் தேவைக்கேற்ப 1 டீஸ்பூன் தேனையும் கலந்து கொள்ளலாம். 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு, வடிகட்டி குடியுங்கள்.

முள் சீத்தா டீயை குடிப்பதனால் ஏற்படும் பயன்கள் :

முள் சீத்தா இலைகளை டீ போட்டு குடித்தால் இதயம் சார்ந்த கோளாறுகளை தடுக்கலாம். அத்துடன் மன அழுத்தம், மன விரக்தி ஆகியவற்றிற்கும் தீர்வு தரும்.

முள் சீத்தா இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க செய்கிறது.

புற்றுநோய் உள்ளவர்கள் முள் சீத்தா இலைகளை டீ போட்டு குடித்து வந்தால், கீமோதெரபிக்கு சமமானது என்று சொல்லப்படுகின்றது.

முள் சீத்தா உள்ள அசிடோஜெனின் (acetogenins), உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை தந்து புற்றுநோய் செல்களை உடலில் வரவிடாமல் காக்கும்.

முள் சீத்தா சர்க்கரையின் அளவை இது அதிகரிக்காமல் உடலை சீராக வைக்கிறது.
தினமும் முள் இந்த டீயை பருகி வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்த நாளங்களுக்கு அதிக வலு தரும்.

முள் சீத்தாவில் வைட்டமின் சி இதில் உள்ளதால் வெள்ளை சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்கள் உடலில் ஏற்படாதவாறு காக்கும்.

தினமும் 3/4 கப் முள் சீத்தா இலை டீ குடித்து வந்தால், முதுகு வலி ஏற்படாமல், நிம்மதியாக இருக்கலாம்.

முடி உதிர்தல், இளநரை, முடி உடைதல், பொடுகு, பேன் தொல்லை போன்ற அனைத்து முடி சார்ந்த பிரச்சினைக்கும் இது தீர்வு தருகின்றது.