தலைமுடி வளர கற்றாழையுடன் படிகாரத்தை இப்படி சேர்த்து பாருங்கள்

தலைமுடி வளர கற்றாழையுடன் படிகாரத்தை இப்படி சேர்த்து பாருங்கள், கொத்துக் கொத்தாய் தலைமுடி அடர்த்தியாக வளரத் துவங்கும்!!
 
இன்று இருக்கும் நவீன சூழ்நிலையின் காரணமாக பலருக்கும் கொத்துக் கொத்தாய் தலையிலிருந்து முடி உதிர்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதை நிறுத்துவதற்கு கற்றாழை ஜெல் மிகுந்த பயனுள்ள வகையில் உதவுகிறது. கற்றாழையில் இருக்கும் மருத்துவ குணங்கள் நம் தலை முடியின் வேர்க்கால்களில் ஊடுருவி சென்று வினை புரிகிறது. இதை எப்படி பயன்படுத்தினால் கொத்துக்கொத்தாக உதிரும் முடி சட்டென நிற்கும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தலைமுடி நன்கு செழித்து வளர கற்றாழையுடன் படிகாரத்தை சேர்க்கும் பொழுது அது நல்ல ஒரு ஊட்டச்சத்துள்ள முடி வளர்வதற்கு உதவியாக இருக்கிறது. இதற்காக ஒரு முழு சோற்றுக் கற்றாழை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் இருக்கும் தோல் பகுதியை முழுவதுமாக நீக்கி விட்டு, சதைப் பற்றை மட்டும் எடுத்து நன்கு 6 அல்லது 7 முறை அலசி கொள்ளுங்கள்.
 
அதன் மீது படிகாரத்தை கொஞ்சம் தூள் செய்து தூவி விடுங்கள். நீங்கள் படிகாரத்தை தூவியதும் அதிலிருந்து நீர் பிரிந்து வெளியில் வரும். இந்த தண்ணீரை ஒரு தாளிப்பு கரண்டியில் பிடித்துக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு இந்த தண்ணீர் இருக்கிறதோ, அந்த அளவிற்கு சரிசமமாக தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் அதை நன்கு பாதியாக சுண்ட காய்ச்ச வேண்டும்.

சுண்டக் காய்ச்சியதும் அந்த எண்ணெய் தைலம் போல கெட்டியாக மாறும். இந்த தைலத்தை தினமும் உங்களுடைய தலைமுடியின் வேர்க்கால்களுக்கு மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது விரைவில் நிற்கும். மீண்டும் புதிய முடி வளர்வதற்கு இதே சோற்றுக் கற்றாழையை வைத்து வேறு ஒரு எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

ஒரு கற்றாழையின் ஜெல்லை மிக்ஸியில் அடித்து சாறு போல எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜெல்லுடன், நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். நெல்லிக்காய் சாறு, கற்றாழை சாறு சம அளவு இருக்க வேண்டும். அதனுடன் 100ml அளவிற்கு தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். நீங்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஆக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கி கொள்ளுங்கள்.

தேங்காய் எண்ணெயில் இருக்கும் மருத்துவ குணங்களை காட்டிலும், வேறு எந்த எண்ணெயிலும் தலை முடியை வளர செய்யக் கூடிய ஆற்றல் அதிகம் இல்லை எனவே கண்ட கண்ட எண்ணெய்களை உபயோகிப்பதை விட சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தடவி இரண்டு நாளுக்கு ஒருமுறை தலையை அலசி வந்தாலே, தலை முடி வேகமாக வளரும். நெல்லிக்காய் சாறு மற்றும் கற்றாழைச் சாறு கலந்த இந்த தேங்காய் எண்ணெயை தினமும் காலையிலும், மாலையிலும் இரு வேளையிலும் தலைமுடிக்கு மசாஜ் செய்து கொடுத்து தடவிப் பாருங்கள். முடி கருகருவென நன்கு அடர்த்தியாக வளரத் துவங்கும். இது எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை முழுவதுமாக தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் சாதாரண ஷாம்புவை தலைக்கு அலசி பாருங்கள், தலைமுடி பளபளவென அலை பாய்ந்து மின்ன ஆரம்பிக்கும்.