பல் வலி குணமாக உதவும் முத்திரை :

பல் வலி குணமாக உதவும் முத்திரை :

மனிதர்கள் எல்லோருமே தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் அனுபவிக்கும் வலி பல்வலி. இப்படியான பல் சம்பந்தமான பிரச்சனைகளைப் போக்க ஒவ்வொருவரும் கட்டாயமாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணுவர். இப்போது இங்கு நாம் கடுமையான பல் வழியை குறைக்க உதவும் ஒரு முத்திரையை பற்றி பார்ப்போம். இந்த முத்திரைக்கு “வாத நாஷக்” முத்திரை என்று பெயர்.

முத்திரை செய்யும் முறை :

முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்போது உங்கள் இருக்கைகளிலும் உள்ள ஆட்காட்டி மற்றும் நடு விரல்கள் உங்கள் கட்டை விரல்களின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருக்குமாறு வைத்துக்கொண்டு உங்கள் கட்டை விரல்களை ஆட்காட்டி மற்றும் நடுவிரல்களின் மீது வைத்துக்கொள்ள வேண்டும். மோதிர, சுண்டு விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதற்கான படம் கீழே உள்ளது.

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த முத்திரையை 15 முதல் 20 நிமிடங்கள் வரை தினமும் பயிற்சி செய்ய வேண்டும்.

பலன்கள்:

இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் உங்கள் உடலின் வாதத்தன்மை சீராகும். ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளும், பல்வலியின் கடுமையும் குறையும். முன்கோப உணர்ச்சிகள் அடங்கி மனம் அமைதியடையும். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

கடுமையான பல் வலி உள்ளவர்கள் இதனை முயற்சித்தால் பல வலி நிச்சயம் குறையும். ஆனால் பல்வலி முற்றிலும் நீங்க மருத்துவரை அணுகுவது நல்லது.