வில்வம் மருத்துவ பயன்கள்

வில்வம் :

வில்வம் கற்ப மூலிகைகளுள் ஒன்றாகும். உடலுக்கு வலுவைக் கொடுத்து நோயின்றி காக்கும் சிறந்த மூலிகை வில்வம். இது இந்தியா முழுவதும் காணப்படும் மரவகையாகும். சைவ கடவுளான சிவனை வில்வ இலை கொண்டே பூஜை செய்கிறார்கள். உடல் சூட்டைத் தணிக்கும் குணம் வில்வ இலைக்கு உண்டு. இதற்கு சிவத்துருமம், குசாபி, கூவிளம், கூவிளை, மாதுரம், நின்மலி என பல பெயர்கள் உண்டு.

இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வேர், பிசின், பட்டை, ஓடு வேர்ப்பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. கற்ப முறைப்படி வில்வத்தின் சமூலத்தை சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.

 வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதி வரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்வன, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். எல்லாச் சிவன் கோவில்களிலும் இருக்கும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள். கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது. தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம். இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

பழத்தின் உள்ளீடு நேரடியாக உண்ணப்படுவதுடன் உலரச் செய்யப்பட்டும், உணவு வகைகளுக்குப் பெறுமதி கூட்டப்படுவதன் மூலமும் உள்ளெடுக்கப்படுகிறது. இளம் இலையும் அரும்பும் சலாது தயாரிப்பதில் உபயோகப்படுகிறது. தமிழில் 'கூவிளம்' , 'இளகம்' எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, அஜீரணம், சயரோகம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாகப் பயன்படுகிறது.

கண் நோய்க்கு மற்றுமொரு பக்குவம் :
 வில்வப் பழச் சதையை சுத்தப்படுத்தி 500 கிராம் அளவுக்கு ஒரு பாத்திரத்திலிட்டு, இரண்டு லிட்டர் நீர்விட்டு அடுப்பிலேற்றி கொதிக்க விடவும்.  நீர் கால் லிட்டராக சுண்டக் காய்ந்ததும் சதையைப் பிழிந்தெடுத்து கஷாயத்தை வடிகட்டிக் கொள்க. இத்துடன் 250 கிராம் சர்க்கரை சேர்த்து சர்பத் பதமாக காய்ச்சி பத்திரப்படுத்துக. வேளைக்கு இரு தேக்கரண்டி வீதம் பசும்பாலில் கலந்து மூன்று நாட்கள் குடிக்க எல்லாவிதமான கண் நோய்களும் நீங்கும்.

கண் நோய் லேகியம் :

வில்வப்பழச் சதை - 500 கிராம்
 சர்க்கரை - 250 கிராம்
 தேன் 50 கிராம்
 ஏலம் 30 கிராம்
 சுக்கு 30 கிராம்
 பசும்பால் 250 மிலி
 பசுநெய் 150 மிலி

வில்வப் பழச் சதையைச் சுத்தப்படுத்தி பசும்பால் சேர்த்து நன்கு வேக விடவும். வெண்ணெய் பதத்துக்கு வந்ததும் அத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறவும். ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை நன்கு பொடித்து சேர்த்துக் கொள்க. பசுநெய்யை கொஞ்சங் கொஞ்சமாய் சேர்த்துக் கிளறி இறக்கி சற்று ஆறியதும் தேன் சேர்த்துக் கிளறி தக்க பாத்திரத்தில் சேமிக்கவும்.

இந்த லேகியத்தை நெல்லிக்காயளவு எடுத்து ஒருநாளைக்கு இரு வேளை என மூன்று நாட்கள் உட்கொள்ள எல்லாவிதமான கண் நோய்களும் தீரும்.

தலை தொடர்பான பிணிகளுக்கு :

வில்வப்பழச் சதையை சேகரித்து சுத்தப்படுத்தி நன்கு உலர்த்த வேண்டும். உலர்ந்த சதையை 500 கிராம் எடுத்து ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் நீர் விட்டு அடுப்பிலேற்றி காய்ச்ச வேண்டும். நீர் கால் லிட்டராக சுண்டக் காய்ந்ததும், சதையைக் கசக்கிப் பிழிந்து சாற்றை வடிகட்டவும்.

 இச்சாற்றுடன் கோஷ்டம், அதிமதுரம், சடாமாஞ்சில், ரோஜா மொக்கு, கிளியூரல் பட்டை ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து பசும்பாலில் அரைத்துக் கலக்கவேண்டும். இவற்றை நன்கு கிளறி எண்ணெய்ப் பதம் ஆனதும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.இந்த தைலத்தை தலைக்குத் தடவு சீவவும், நீராடவும் பயன்படுத்தினால் தலை தொடர்பான பிணிகளும் கண் நோய்களும் அகலும்.

நரம்புத் தளர்ச்சி :

வில்வ மரப் பிசினை ஏராளமாக சேகரித்து நிழலில் நன்கு உலர்த்தவும். இடித்து தூளாக்கி, வஸ்திரகாயம் செய்து சலித்துக் கொள்க. இத்தூளில் நான்கு சிட்டிகை எடுத்து பசுவெண்ணெயுடன் சேர்த்து உட்க்கொள்க. காலை மாலை என இரு வேளையாக பத்து நாட்கள் தொடர்ந்து உட்கொண்டால், நரம்பு மண்டலம் வலுவடையும்.

காய்ச்சல் நீங்க :

வில்வ வேரை எடுத்து ஒன்றிரண்டாகத் தட்டி ஒரு செப்புப் பாத்திரத்திலிட்டு நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற விடவும். அதிகாலை அந்நீரைப் பருகினால் எல்லாவிதக் காய்ச்சலும் அகலும். அதிதாகம் மட்டுப்படும்.

வில்வ மலர், கடுகுரோகிணி, சுக்கு, வசம்பு, கண்டங்கத்தரி வேர், ஆடாதோடா இலை ஆகியவற்றை வகைக்கு முப்பது கிராம் எடுத்து நன்றாக இடித்து அரைலிட்டர் நீரூற்றி ஒரு பாத்திரத்திலிட்டு நீர் பாதியாக சுண்டும் வரை கொதிக்க விடவும். வடிகட்டி காலையிலும் மாலையிலும் அருந்த காய்ச்சல், உடல்வலி குணமாகும். 

வில்வ மலரையும், துளசியிலையையும் சம அளவு எடுத்து சாறெடுத்து அத்துடன் சிறிது தேனை சேர்த்து காலை மாலை ஒரு தேக்கரண்டி அருந்தினால் மலேரியா காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சலும் மட்டுப்படும்.

வில்வ மலரையும் வேப்பம்பூவையும் கைப்பிடியளவு எடுத்து நெய்யில் வதக்கி அம்மியில் தேன்விட்டு அரைத்து கொட்டைப்பாக்களவிற்கு ஒரு வேளைக்கு ஒரு உருண்டையாக சாப்பிட மூன்று நாட்களில் உள்காய்ச்சல் குணமாகும்.

பசி மந்தம் நீங்க : 

வில்வ வேரை வெயிலில் காயவைத்து இடித்து சலித்து நான்கு சிட்டிகை தூளை பசுநெய்யில் குழப்பி உட்கொண்டால் பசிமந்தம் அகலும். வில்வ மலரை உலர்த்திப் பொடித்து, நாள்தோறும் சிறிதளவு சாப்பிட பசிமந்தம் நீங்கும்.

கண்வலி, கண் சிவப்பு, கண் அரிப்பு :

 வில்வத் தளிரை எடுத்து பூவுடன் வதக்கி சூட்டுடன் கண் இமைகளில் ஒத்தடம் கொடுக்க குணமாகும்.

வில்வப்பூவின் வேறு பலன்கள்:
 வடை மாவில் இப்பூவை நறுக்கிப் போட்டு கலந்து வடை செய்து சாப்பிடலாம். குடல் வாயு குணமாகும்.வில்வப் பூ கஷாயம் பசிமந்தத்தைக் கண்டிக்கும்.

ஆஸ்துமா :

வில்வத் தளிருடன் சிறிது துளசி, சில மிளகு ஆகியவற்றைச் சேர்த்து நசித்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

உஷ்ண பேதி :

வில்வ வேர்ப்பொடி நான்கு சிட்டிகையெடுத்து தேனில் கலந்து உட்கொண்டால் உஷ்ணபேதி நிற்கும்.

உடல் அழகு பெற:

வில்வ வேர் தூளை நான்கு சிட்டிகையெடுத்து பசும்பாலில் கலந்து ஒரு நாளைக்கு இரு வேளையென தொடர்ந்து பதினெட்டு நாட்கள் உட்கொள்ள உடலழகும் சருமப் பளபளப்பும் மிகும்.

தசை நோய்கள், உடல் வலி :

வில்வ வேர் 500 கிராம்
விலாமிச்சை வேர் 200 கிராம்
வெட்டி வேர் 200 கிராம்
கோஷ்டம் 20 கிராம்
அதிமதுரம் 10 கிராம்
கிளியூரம் பட்டை 10 கிராம்
ரோஜா மொக்கு 10 கிராம்
பசும்பால் 300 மிலி
நல்லெண்ணெய் 500 மிலி.

வில்வ வேர், விளாமிச்சை வேர், வெட்டி வேர் ஆகியவற்றை நன்கு தட்டிப் போட்டு நான்கு லிட்டர் நீருடன் கலந்து அடுப்பிலேற்றிக் காய்ச்சவும்.150 மிலியாக நீர் வற்றியதும் இறக்கி, வேர்களைக் கசக்கிப் பிழிந்து சக்கையை எடுத்து விட்டு வடிகட்டவும். இத்துடன் எண்ணெயைக் கலந்து கொள்க. மற்ற சரக்குகளை இடித்துப் பொடித்து பசும்பால் விட்டு அரைத்து எண்ணெயுடன் கலக்கவும். இதை அடுப்பிலேற்றி மெழுகுப்பதம் வரும்வரைக் காய்ச்சி வடிகட்டிக் கொள்க.இதை தினம் தலைக்கு தடவவும், வாராவாரம் தலைக்கு தேய்த்து சிறிது ஊறி குளிக்கவும் தசைநோய்கள், உடல்வலி, நரம்பு வலி போன்றவை குணமாகும்.

மருத்துவப் பயன்கள் : 
வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும். விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும். இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.

பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.

பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.

பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை - கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.

வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.

புற்றுநோய்தீர : 

நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் ஸ்நானம் செய்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.

வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும் நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.

வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.

வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.

வில்வ வேரை 10 - 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர, தேவையில்லாத விந்து வெளியேற்றத்தைத் தடுத்து, விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்.

வில்வ இலைகளைக் கொண்டு வந்து அரைத்து கோலி அளவு காலையில் வெறும் வயிற்றில் நீரில் கலக்கிக் குடித்து விட்டு ஒரு மணி நேரம் சென்ற பின் தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். நாளடைவில் மாத ருது காலம் தவராமலும் அதுவால் ஏற்படும் வயிற்று வலியும் படிப்படியாகக் குறைந்து குணமாகிவிடும்.

ஆன்மீகப் பயன்கள்
இந்து மதத்தில் வில்வ மரம் மிகப்புனிதமானது.சிவ வழிபாட்டில் வில்வ பத்திர பூசை முக்கியமானது.முக்கூறுகளைக் கொண்ட வில்வமிலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்பதைக் குறிக்கின்றது. நேபாளத்தில் கன்னிப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு பிரபலமானது.

வில்வத்தளிர் எல்லா மேக நோய்களையும் குணப் படுத்தும்.

வில்வப் பூ- மந்தத்தைக் குணப்படுத்தும்.

பிஞ்சு - குன்மத்தை போக்கும்

பழம் - கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

பிசின் - விந்துவை கெட்டிப் படுத்தி அதன் குறையை நீக்கும்.

வில்வ இலைச் சாறை எடுத்து அதில் மிளகுத்தூள் சேர்த்து ஒரு மண்டலம் காலையும், மாலையும் பத்திய முறைப்படி இறைவனை வணங்கி அருந்தி வந்தால்காமாலை மற்றும் இரத்த சோகையால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.

வில்வ இலைச் சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்அருந்தி வந்தால் மூக்கில் நீர் வடிதல், சுரம், இருமல், தொண்டைக்கரகரப்பு, வாய் குளறல், மயக்கம் தீரும். தொடர்ந்து 40 நாட்கள் கற்பமுறைப்படி அருந்தி வந்தால் மேற்கண்ட பிணிகளிலிருந்து முழு விடுதலை பெறலாம்.

வில்வ பூவை உலர்த்தி பொடி செய்து நீர்விட்டு காய்ச்சி அருந்தினால் மாந்தம் நீங்கும்.

வில்வ இளம் பிஞ்சை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கலந்துஅருந்தினால் வயிற்றுப்புண், குடல்புண், தொண்டைப் புண் ஆறும். சிறுபிள்ளைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக் கடுப்பு, சீதக் கழிச்சல் நீங்கும்.

வில்வ காயை பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்து குளித்துவந்தால் மண்டைச் சூடு, கண் எரிச்சல் நீங்கி கண்கள் குளிர்ச்சியடையும்.

(அகத்தியர் குணபாடம்)

வில்வ இலை, இஞ்சி, சோம்பு சேர்த்து குடிநீராக்கி ஒரு மண்டலம் கற்பமுறைப்படி பத்தியம் கடைப்பிடித்து அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.

வில்வ வேர், சிற்றாமுட்டி வேர், சுக்கு இம்மூன்றையும் சேர்த்துக் காய்ச்சிஎட்டில் ஒன்றாய் ஆன பதத்தில் வடித்து தேன் கலந்து அருந்தினால் கொடியமுப்பிணியும் தீரும்.

வில்வத்தின் கனி, காய், இலை, வேர் முதலானவற்றை மணப் பாகு, ஊறுகாய்,குடிநீர், தைலம் இதில் எதாவது ஒன்று தயாரித்து ஒரு மண்டலம் உட்கொண்டால்உடலுக்கு அழகையும், ஆண்மையையும் கொடுக்கும். வாய் குழறிப் பேசும் தன்மைநீங்கும். மேலும் பல கற்ப மூலிகைகள் பற்றி வரும் இதழில் விரிவாகக்காண்போம்.
(தேரையர் நளவெண்பா)

வில்வத்தின் ஒரு வகையே மகா வில்வம். இது குளுமைத் தன்மை கொண்டது. வில்வ இலைகளைவிட சற்று சிறியதாய், வட்ட வடிவில் காணப்படும். சுவையில் வில்வத்தின் இலையை ஒத்திருக்கும். கொடியைவிட சற்றுப் பெரியதாய் இதன் கிளைகள் இருக்கும். இலைகள் கூட்டிலைகளாய் காணப்பட்டு கடைசியில் மூன்று இலைகளாய் முடியும்.

அந்த மூன்று இலைகளும் சிவன், விஷ்ணு, பிரம்மா என்னும் மூவரும் நானே எனக் காட்டுவதாய் அமையும். அந்த மகா வில்வத்தை மருந்தாக்கும் முறையை இனி காண்போம்...

சர்க்கரை நோயுக்கு அற்புத மருந்து. :

சர்க்கரை நோயுள்ளவர்கள் மகா வில்வத்தை மருந்தாக்கினால் மிகச் சிறந்த பலனைக் காணலாம். மகா வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, அத்துடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட் டுக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலையில் சாப்பிட்டு வர, 48 நாட்களில் சர்க்கரையின் அளவு சராசரி நிலைக்கு வரும். சர்க்கரை வியாதியால் உண்டாகும் பிற விளைவுகளும் படிப்படியாய் மறையும்.

குடற்புண்ணை குணப்படுத்த. :

குடல் சார்ந்த நோய்கள் அனைத்திற்கும் மகேசன் அருளிய மகா வில்வமே மருந்தென்றால் மிகையல்ல. குடற்புண்ணால் அவதி யுறுவோர் கீழ்க்காணும் மருந்தைத் தயாரித்துச் சாப்பிட்டுப் பாருங்கள். மகா வில்வத்தினுள் சிவனே உறைந்து, உங்களை செவ்வனே குணப் படுத்துவதை உணர்வீர்கள். உலர்ந்த மகா வில்வ இலை 50 கிராம், நெல்லிமுள்ளி, கடுக்காய், தான்றிக்காய், ஓமம், மாம்பருப்பு, வெந்தயம், சீரகம், மஞ்சள் ஆகியவை வகைக்கு 25 கிராம்- இவையனைத்தையும் ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். பின்னர் இதனைச் சலித்துப் பத்திரப்படுத்தவும். இதனை காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக இரண்டு முதல் ஐந்து கிராம் அளவு சாப்பிட்டு வர, 48 நாட்களில் குடற்புண்கள் முழுமையாய் குணமாகும். இது சித்தர்கள் அருளிய சிறப் பான மருந்து. திட சித்தமாய் உண்டு வருபவர்கள் சீக்கிரமே குணமடைவார்கள்.

உடல் வலிவு பெற. :

மகா வில்வ வேர் 50 கிராம் அளவில் எடுத்து ஒன்றிரண்டாய் சிதைத்து, ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிது மஞ்சள் சேர்த்து, ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு நன்கு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, தினசரி அதிகாலை யில் தொடர்ந்து இரு மாதங்கள் சாப்பிட்டு வர, மேனி அழகு பெறும்; முகம் காந்தமாய் ஜொலிக்கும்; ஆண்மை விருத்தியாகும்; குரலில் ஓர் காந்த சக்தி, ஈர்ப்பு சக்தி உண்டாகும்.

இளைப்பு நோய் குணமாக :

மகா வில்வ வேர், தூதுவளை வேர், கண்டங்கத்தரி வேர், முசுமுசுக்கை வேர், மிளகு, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து உண்டுவர, சளிக்கட்டு, இருமல், ஆஸ்துமாவில் உண்டாகும் மூச்சிரைப்பு, சைனஸ், தும்மல், காசநோய் போன்றவை மாயமாய் விலகும்.

மஞ்சள் காமாலை குணமாக :

மகா வில்வ வேர், கீழாநெல்லி வேர், நெல்லிமுள்ளி ஆகியவற்றை வகைக்கு 20 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து, காலை- மதியம்- இரவு மூன்று வேளையும் ஏழு தினங்கள் தொடர்ந்து குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். கல்லீரல் பலப்படும்; கல்லீரல் சார்ந்த பிற நோய்களும் தணியும்.

கண் நோய்கள் குணமாக :

மகா வில்வத் தளிர் இலைகளை நெருப்பில் வாட்டி, அதைத் துணியில் முடிந்து வெது வெதுப்பாய் கண்களில் ஒற்றிவர, கண்சிவப்பு, கண்ணெரிச்சல் போன்றவை மாறும்.

மகா வில்வத்தால் ரத்த சுத்தி உண்டாகும்; நன்கு செரிமானம் உண்டாகும்; பசியைத் தூண்டும்; மலத்தை நன்கு இளக்கும். மொத்தத் தில் சிவனை நாட சுத்த தேகத்தை உண்டாக்கும்

அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வில்வம் பறிக்கக் கூடாது.