மூளையை பாதிக்கும் ஆபத்தான ஏழு தீய விஷயங்கள் பற்றி தெரியுமா?

மூளையை பாதிக்கும் ஆபத்தான ஏழு தீய விஷயங்கள் பற்றி தெரியுமா?

நாம் அனைவரும் இந்த பரபரப்பான நவீன உலகில் ஒரு மெஷின் போல் இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒரு வகையில் நமக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அதனைத் தீர்த்துக் கொள்ள சிலர் மது அருந்துகின்றனர். சிலர் அதிக அளவில் தூங்குகின்றனர். பெரும்பாலானோர் டிவி பார்ப்பது, மொபைல் நோண்டுவது போன்றவற்றை மேற்கொள்கிறார்கள். இது ஒரு தவறான பழக்கம் ஆகும். இவை நமது மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தடுத்து மூளை செல்களை விரைவாக கொல்கிறது. 

இதனால் நமக்கு மன சோர்வு அல்லது பதட்டம் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. மேலும் சில கொடிய நோய்களால் தாக்கப்படுகிறோம். இவற்றை பின்பற்றுவதால் உங்கள் மனம் அமைதியாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கினாலும் நீங்கள் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டு உங்கள் மூளை பாதிக்கப்படுவதை உணர மறந்து விடுகிறீர்கள் என்பதே உண்மை. இவற்றை முறையான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களால் கட்டுப்படுத்த முடியும். 

உடல் பருமன் : 
அதிகப்படியான உணவு எடுத்து கொள்வதால் விரைவில் உடல் பருமன் அடைந்து மறதி மற்றும் முதுமை நோய் ஏற்பட்டு விடுகிறது. கடந்த பத்து வருடத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி இந்தியாவில் இருப்போர் முதுமை நோயால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது என்பதை கூறியிருக்கின்றனர். நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்து இல்லாத போது உடல் பருமன் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கிறார்கள். அதிகமாக உட்கொள்வதை விட ஊட்டச்சத்து நிறைந்த குறைந்த அளவு உணவு எடுத்துக்கொள்வதே மூளைக்கு ஆரோக்கியம். ஊட்டச்சத்து இல்லாத உணவை நீங்கள் அதிகப்படியாக உட்கொள்வதற்கு காரணம் உங்கள் உடலின் தேவையை பூர்த்தி செய்வதற்காக வைட்டமின்களும், தாதுக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிகப்படியான உணவையும் நீங்கள் விரும்புகிறீர்கள். நிறைய சாப்பிட்டாலும் உங்கள் மூளைக்கு அது பற்றாக்குறை என்பது கவனிக்கத்தக்கது. 

தூக்கமின்மை: 
போதுமான தூக்கம் ஒரு மனிதனுக்கு கிடைக்காததால் மறுநாள் மிகவும் மந்தமாகவே செயல்பட வேண்டி இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. காரணம் இதனால் உங்களின் மூளையில் நியூரான்களை சரியாக செயல்படுத்தும் திறன் பாதிப்படைகிறது. எனவே உங்கள் வேலை மற்றும் உறவுகளை பாதிக்கக்கூடிய வகையில் உங்கள் மனநிலை குறைபாடுகளுக்கு உட்படும். நீங்கள் இதேபோல் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் இருக்கும் பொழுது இந்த விளைவுகள் நிரந்தரமாகும். எனவே நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய நேரத்தில் உங்களது உடல் தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கும். உங்களால் சிறப்பாக செயல்பட முடியாத நிலை உருவாகும். நீங்கள் சரியான நேரத்தை தூங்குவதற்காக ஒதுக்கினால் அடுத்த நாள் குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை நீங்கள் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

மன அழுத்தம்: 
நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் உடல் முழுவதையும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் மன அழுத்தம் ஒரு நல்ல விஷயம் இது ஆபத்தை எதிர்கொண்டு போராடுவதற்கு அல்லது தப்பி ஓடுவதற்கு நமது உடலை தயார்ப்படுத்துகிறது. ஆனால் உங்கள் வாழ்க்கை முறையானது நாள்பட்ட மன அழுத்தத்தை உள்ளடக்கி இருக்கும் பொழுது மூளையில் கார்டிசால் என்ற ஹார்மோன் உருவாகி சேதத்தை உண்டாக்குகிறது. இது மூளை சுருங்குவதற்கு காரணமாக இருக்கிறது. இதனால் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். 

காலை உணவை தவிர்ப்பது: 
காலை உணவு மிக முக்கியமாக கருதப்படுவதற்கு காரணம் இருக்கிறது. காலை உணவை தவிர்ப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. இது மூளையில் பெரிய பாதிப்பை உண்டாக்குகின்றன. இதனை சமன் செய்ய மெல்லோட்டம் அல்லது நடைபயிற்சி தேவைப்படுகிறது. இதனால் மூளை மற்ற உடல் உறுப்புகளை விட அதிக சக்தியை பயன்படுத்தும். காலையில் ஒரு அரைமணிநேரம் இவற்றை மேற்கொள்வதால் மூளை சுறுசுறுப்படைகிறது. உங்களுடைய மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டிய வேண்டியது அவசியம். 

புகைப் பழக்கம்: 
புகைப்பழக்கம் தீங்கு விளைவிக்கும் என்பதை குறித்து ஆராய்ச்சிகளால் ஏராளமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது நாம் அறிந்ததே. புகைபிடித்தல் மூளையின் பகுதிகளில் உள்ள உயிரணு சவ்வுகளையும், நரம்புகளையும் சேதப்படுத்துகிறது. இவை மொழி, நினைவகம் மற்றும் கருத்து உள்ளிட்டவைகளை குறிப்பது குறிப்பிடத்தக்கது. புகைப்பழக்கம் மூளையை அதிக அளவில் பாதிக்க செய்யும் ஒரு செயலாகும். 

நீரிழப்பு: 
நமது உடல் எழுபது சதவீதம் நீரால் ஆனவை. எனவே மூளையின் செயல்பாடு உட்பட ஒவ்வொரு உடல் செயல்பாடுகளுக்கும் நீர் இன்றியமையாததாகும். நீரினால் உங்கள் மூளையில் ஏற்படும் விளைவு மிக விரைவாக நிகழ்கிறது. தண்ணீரின்றி 2 மணிநேரம் நீங்கள் கடுமையாக உடற்பயிற்சியை மேற்க் கொள்வதானால் உங்கள் அறிவாற்றல் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உங்கள் மூளை மகிழ்ச்சியாகவும் சீராகவும் இயக்க உதவுவதற்கு நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு கட்டாயம் தண்ணீர் அருந்துவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். 

சர்க்கரை அளவு: 
நமது உடலும் மூளையும் செயல்படுவதற்கு சர்க்கரை குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறது. ஆனால் நமது நவீன உணவு பழக்க வழக்கத்தில் இதை அதிகப்படியாக எடுத்து கொள்ள நேரிடுகிறது. இதனால் மூளை செல்கள் நாள்பட்ட அழற்சியால் பாதிக்கபடக்கூடும். அதிகப்படியான சர்க்கரை நீங்கள் உட்கொள்ளும் உணவில் முக்கியமான ஊட்டச்சத்துகளை உறிஞ்சுவதற்கு தேவையான திறனை பாதிக்கிறது. இதனால் உங்கள் மூளை பாதிப்படைகிறது. உங்கள் நினைவாற்றல் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இந்த தகவல்கள் உங்களை அச்சுறுத்துவதாக தோன்றலாம். உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கும் முக்கிய மாற்றங்களை உண்டாக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் எனவே தூங்குவதற்கும், காலை உணவை தவறாமல் உட்கொள்வதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் நேரத்தை ஒதுக்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.