அயோடின் உப்பு என்ற ஆபத்து


அயோடின் உப்பு என்ற ஆபத்து

பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruit

கல்லுப்பு என்ற சோற்றுப்பு சோடியம் குளோரைடு என்ற வேதிப் பெயர் கொண்டது. இதை செந்தமிழில் அளம் என்பார்கள். முன்னாளில் சம்பளம் என்று தொழிளாளர்களுக்கு கொடுப்பது (சம்பு+அளம்=சம்பளம்) சம்பா என்ற நெல்லும் உப்பும்தான். எனவே இது லட்சுமிவாசம் செய்யும் பணமாகக் கருதப்பட்டது. எனவே செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் உப்பு ,உறைமோர், விதைநெல், வசம்பு (பேர் சொல்லாதது), நிறைகுடம்   போன்றவற்றை அறவே தரமாட்டார்கள். இதுமட்டுமல்ல மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பின் இவற்றைத் தரமாட்டார்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உப்பை நஞ்சாக்கி விட்டது ஒரு அரசு உத்தரவு .அயோடின் என்ற வேதிப்பொருளை உப்பில் கலக்க அரசு போட்ட உத்தரவின் விளைவுகளை விவரிப்பதே இந்த பதிவின் நோக்கம்.

உப்பை சேர்க்காத பொருள்களே இல்லை. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். இன்று உப்புள்ள பண்டம் குப்பையிலே என்று சொல்லும் அளவுக்கு அயோடின் கலந்த உப்பின் கோரமுகம் உள்ளது. அயோடின் சேர்க்கப்பட்ட உப்பால் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்பட்டு முக்கியமான நாளமில்லாச் சுரப்பியான தைராய்டு சுரக்கும் சுரப்பு நீர்களான T3 ,T4 ஆகியவை பாதிக்கப்பட்டு .கண்கள் பிதுங்கி கழுத்தில் பெரும் கழலைக் கட்டியுடன் மக்களும், எதிர்கால சந்ததிகளும் அல்லாட வேண்டாம் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.

அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் இதோ கீழே விவரிக்கப்பட்டுள்ளன. கீழே கொடுத்துள்ள கட்டுரையைப் பாருங்கள்.

கல்லுப்பு என்ற சோற்றுப்புக்குப் பதிலாக பாறை உப்பு (ROCK SALT) என்ற இந்துப்பை உபயோகப்படுத்தினால் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பலாம். இதை ஹிந்தியில் சிந்தாநமக்கு என்பார்கள். இந்த இந்துப்பு என்பதும் சோடியம் குளோரைடுதான். ஆனால் மற்ற சில உப்புக்களும் சரியான விகிதாச்சாரத்தில் உள்ளது. மேலும் இந்த உப்பில் இந்தஅயோடின் போன்ற விஷ வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுவதில்லை.

இந்த இந்துப்பு பல மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த இந்துப்பு சேர்ந்த மருந்தால் குருடனும் பார்வை பெறவல்ல மருந்தொன்றை திருமூலர் வைத்திய சாகரத்தில் சொல்லி உள்ளார்.அந்தப் பாடல்

இந்துப்புதிப்பிலிஇயல்பீதரோகிணி
நந்திப்பூச்சாற்றில்நயந்துஅரைத்திட
அந்தகன்கண்ணுக்குஅருந்ததிதோன்றிடும்
நந்திநாதன்நயந்துஉரைத்ததே.
-திருமூலர்வைத்தியசாகரம்-

இந்துப்பு, திப்பிலி, பீதரோகிணி ஆகியவற்றை சமமாய் எடுத்து நந்தியாவட்டம் பூச்சாற்றில் அரைத்து கண்ணிலிட குருடன் கண்ணுக்கு அருந்ததி என்னும் நட்சத்திரம் தெரியும் என்று நந்திக்கு சிவன் கூறியுள்ளார், என்பதே இதன்பொருள்.

இப்படி மிக உயர்தன்மையுள்ள இந்துப்பை சோற்றுப்பிற்கு பதிலாக உபயோகித்து வந்தால், உடலிலுள்ள துர்நீர்கள் எல்லாம் நீங்கி உடல் நலம் பெறும். காயசித்திக்கும், பத்தியத்திற்கும், காயகற்பத்திற்கும் ஏற்ற உப்பு இது. இதை உபயோகித்து, அயோடின் நஞ்சு கலந்த சோற்றுப்பை தவிர்த்து எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு பலகாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்ளுவதும் ஆகும். இந்த உப்பு நமது உடலில் உள்ள இரத்தத்தில் சேர்ந்து இரத்ததின் வேகத்தை அதிகரிக்கிறது. இதுவே இரத்த அழுத்தமாகும். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு டாக்டர்கள் ஆலோசனை வழங்குவது, உணவில் உப்பை குறைப்பது தான். இன்னும் சொல்லப் போனால், உப்பில்லாத உணவு வழங்குவதும் உண்டு

ஆக இரத்த அழுத்தம் வராமல் இருப்பதற்கும், வந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் ஒரு சிறந்த வழி சொல்கிறேன்பொதுவாக, நாம் பயன்படுத்தும் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இதுவே ஆபத்து. இதற்குப் பதிலாக நாட்டு மருந்து கடைகளில் இந்துப்பு அல்லது இந்துஉப்பு அல்லது டைமன்உப்பு என்றுகேட்டுவாங்குகள். இது வடிவத்தில் கற்கண்டு கட்டிபோல் இருக்கும். தூளாகவும் கிடைக்கும். விலை கிலோ சுமார்ரூ.50/-  இருக்கும். இந்த உப்பு மலையிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இதில் பொட்டாசியம் குளோரைடு உள்ளது. இது நாம் பயன்படுத்தும் உப்பு போலவே இருக்கும். சுவைமாறாது. உடலுக்கு எந்த ஆபத்தும் கிடையாது. உப்பை குறைக்க வேண்டியதில்லை. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. அதிக இரத்த அழுத்த்தம் உள்ளவர்கள் உடனே மாற்றுங்கள் உப்பை.

உப்பைச் சரியான அளவில் சேர்க்கும்போது, பசித்தீயைத் தூண்டுகிறது. நாக்கிலுள்ள ருசிகோளங்களில் படிந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தி சுவையை உணரும்படி செய்கிறது. உண்ட உணவைச் சீரணிக்க உதவுகிறது. வயிற்றில் ஈரப்பசையை ஏற்படுத்துகிறது. குடல் முழுவதும் எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தி குடலின் இயற்கையான அசைவுகளுக்கு உதவுகிறது.

வியர்வை கோளங்களைச் சுறுசுறுப்புடன் இயங்கச் செய்கிறது. குடலில் சேர்ந்துள்ள இறுகிய மலத்தை உடைத்து வெளியேற்றுகிறது. உடல் முழுவதும் விரைவில் பரவிவிடும் திறன் உடையது. உடலிலுள்ள எண்ணற்ற ஓட்டைகளைச் சுத்தப்படுத்தி விடும். ஊடுருவும் தன்மையும் சூடான வீரியமும் உள்ள உப்புச்சுவையின் நன்மைகளை நீங்கள் அடைந்தாலும் அதன் அதிக அளவிலுள்ள சேர்க்கையினால் ஏற்படும் கெடுதிகளில்- தலைவழுக்கை, நரை, நாவறட்சி, உடல்எரிச்சல், மயக்கம், தோலின் மேல்பரவும் நோய்கள், வீக்கம், இசிவு எனும் கை, கால்களில் உண்டாகும் வலிப்புநோய், பித்தம், ரத்தத்தில் கலப்பதால் ஏற்படும் இரத்த பித்தநோய் போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

உணவில் நாம் பொதுவாக கடலுப்பைத் தான் பயன்படுத்துகிறோம். பொதுவாக உப்பு என்றால் இந்துப்பையே பயன்படுத்த வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆனால் இன்று அது பயன்பாட்டில் இல்லை. இந்துப்பு சிறிதளவு சுவையுடையது. ஆண்மையை வளர்ப்பது. மனதிற்கு நல்லது. வாதம், பித்தம், கபம் மூன்றையும் போக்கவல்லது. இலேசானது, சிறிதளவு உஷ்ணமுள்ளது. நாட்டு மருந்துக் கடைகளில் இந்துப்பு கிடைக்கிறது.

அதனால் உப்பின் மீதுள்ள மோகத்தை நீங்கள் முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது. அப்படி முடியாமல் போனால் உப்பு வகைகளில் சிறந்ததான இந்துப்பை நீங்கள் பயன்படுத்தலாம். அயோடின் சேர்க்கை தேவை என்று கூறி அதை உப்பில் சேர்த்து விற்பதால் அதன் பயன்பாட்டையும் நாம் உதாசீனப்படுத்த இயலாது என்பதால் நீங்கள் அயோடின் கலந்த உப்பைச் சமையலுக்கும் சாப்பிடும்போது மேலும் உப்புவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்துப்பையும் சேர்க்கலாம்.

கடலுப்பு சீரண இறுதியில் இனிப்பாக மாறிவிடும். ஆனாலும் அது விரைவில் செரிப்பதில்லை. அதன் அதிக அளவிலான சேர்க்கை கபம் எனும் தோஷத்தைத் தூண்டுகிறது. இந்துப்பு இதற்கு எதிர்மறையான குணங்களைக் கொண்டுள்ளதால் கடலுப்பினால் ஏற்படும் கெடுதல்களைக் கூட இந்துப்பு குறைத்து விடக்கூடும்.