Posts

மண்பானை தண்ணீரை குடிக்க வேண்டுமென்று ஆயுர்வேதம் ஏன் சொல்கிறது?

மண்பானை தண்ணீரை குடிக்க வேண்டுமென்று ஆயுர்வேதம் ஏன் சொல்கிறது?  கோடை காலம் வந்துவிட்டது கொளுத்தும் வெயிலில் வெளியே சென்றுவிட்டு நாம் வீட்டிற்குள் நுழையும் போது செய்யும் முதல் விஷயம், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து நேரடியாக குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிப்பதுதான். ஆனால், அவ்வாறு குடிப்பது நல்லதா? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அவை இருமல் மற்றும் சளி ஆகிய பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம். பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் ஆயுர்வேதம் கூட குளிரூட்டப்பட்ட நீர் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது மற்றும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்று கூறியுள்ளது. இயற்கை வழியில் தண்ணீரை குளிர வைத்து குடிப்பது, உங்களுக்கு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், உங்கள் கோடை தாகமும் குறையும். நம் தாத்தா, பாட்டி காலத்தில் மண் பானையில் தண்ணீர் குடித்தது நினைவு இருக்கிறதா? இப்போது, நீங்களும் அதை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. எனவே, குளிர்ந்த நீரைக் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் களிமண் அல்லது மண் பானையில் இருந்து ந