Posts

நாட்டு மருத்துவம் நமது மருத்துவம்

நாட்டு மருத்துவம் நமது மருத்துவம் நாட்டுப்புற மருத்துவத்தில் ஆடவர், பெண்டிர், குழந்தைகள் போன்றோர்களின் பல்வேறு வகை நோய்களுக்கான மருந்துகளும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை இனிக் காணலாம். மகளிர் மருத்துவம் திருமணமான - திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு : 1. வெள்ளைபடுதல் - அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும். 2. பிறப்புறுப்பில் புண் - மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும். 3. சீரற்ற மாதவிலக்கு - அருநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும். 4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி - முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும். 5. உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும். திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம். 1. கர்ப்பகால வாந்தி - அருநெல்லிக்காயை உண்டு வர நிற்கும். 2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் - வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வர