Posts

பக்க வாதம் அறிகுறிகள், paralysis symptoms in tamil

Image
  பக்கவாதம் யார் யாருக்கு வரும்? அறிகுறிகள் என்ன?   50 வயதைத் தாண்டியவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டால் பக்கவாதத்தை கட்டுப்படுத்தலாம்.   மூளையின் ஒரு பக்கத்தில் இரத்த ஓட்டம் குறைந்து, அந்தப் பகுதி செயல்படாமல் போகும்போது, உடலின் எதிர்பாகத்தில் ஒரு கை, ஒரு கால் மற்றும் முகத்தில் ஒரு பகுதி செயலற்றுப் போவதைப் ‘பக்கவாதம்’ (Stroke) என்று சொல்கிறோம்.   வலது, இடது என்று மூளையை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். உடலின் வலது பக்கச் செயல்பாட்டை இடது பக்க மூளை கட்டுப்படுத்துகிறது. இடது பக்கச் செயல்பாட்டை வலது பக்க மூளை கண்காணிக்கிறது. ஆகவே, மூளையின் வலது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் இடது பக்கம் செயல்படாது. மூளையின் இடது பக்கம் செயல்படவில்லை என்றால், உடலில் வலது பக்கம் செயல்படாது. பொதுவாக, வலது பக்கம் பக்கவாதம் வருமானால் பேச்சு பாதிக்கும். காரணம், பேச்சுக்குத் தேவையான சமிக்ஞைகள் மூளையின் இடது பக்கத்திலிருந்து வருவதுதான்.   காரணங்கள்   50 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். அதாவது, இந்த வயதுக்கு மேல் பத்தா

பக்கவாதம் பாட்டி வைத்தியம்

Image
பத்தே நாளில் பக்கவாத நோய் குணமாக வேண்டுமா?    நரம்புகளைப் பலப்படுத்த வாதநாராயணன் இலை பித்த நீர் பெருக்குதல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், உடலில் இருக்கிற வாதத்தை அடக்கி மலத்தை வெளிப்படுத்தும். வாயுவைக் குறைக்கும். வீக்கம் கரைக்கும். நாடி நரம்புகளைப் பலப்படுத்தும்.    வாதநோய் தீர வாதநாராயணன் இலையை நல்லெண்ணெய்யில் வதக்கி, உளுந்துப் பருப்பு, பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்துமல்லி, மிளகாய், உப்பு, புளி சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை உணவில் சாப்பிட பேதியாகும். வாத நோய் தீரும்.     தோல் நோய்கள் தீர சொறி சிரங்கு உள்ளவர்கள் இதன் இலையுடன் குப்பைமேனி இலை, மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து மேலே தடவி, குளிர்ந்த நீரில் குளித்து வர நீங்கும்.   சர்க்கரை நோய்க்கு மேக நோயால் அவதிப்படுபவர்கள் இதன் இலையை நன்கு உலர்த்திப் பொடி செய்து காலை, மாலை 1 கிராம் வீதம் வெந்நீருடன் கலந்து அருந்தி வர குணமாகும்.   உடம்பு வலி போக இரத்த சீதபேதிக்கு வாதநாராயணன் வேரை அரைத்து எருமைத் தயிருடன் கலந்து அருந்த குணம் தெரியும். இலையைப் போட்டுக் கொதிக்க வைத்துக் குளிக்க உடம்பு வலி தீரும்.