ஸ்பைருலினா ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்... 100 காய்கறிகளுக்கு சமமான சத்துக்கள் கிடைக்கும்!!

ஸ்பைருலினா ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்... 100 காய்கறிகளுக்கு சமமான சத்துக்கள் கிடைக்கும்!! 

தற்பொழுது இருக்கும் விலைவாசிகள் காய்கறி பழங்கள் வாங்கி சாப்பிடுவதே பெரிதாக உள்ளது. இருப்பினும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறி மற்றும் பழங்கள் மிகவும் அவசியமான ஒன்று. அவ்வாறு இந்த பதிவில் வருவதை ஒரு கிராம் எடுத்துக் கொண்டாலே பல காய்கறிகளுக்கு சமம். அது மட்டும் இல்ல இது எந்த ஒரு செயற்கை முறையும் அல்ல இருக்கையால் இருந்து பெறக்கூடிய ஒன்றுதான் இது.1965 ஆம் ஆண்டில் ஆப்ரிக்கா நாட்டில் மக்கள் உணவின்றி இருந்தனர்.பெருமளவு பஞ்சம் காணப்பட்டது.அங்குள்ள ஓர் பகுதியினருக்கு மட்டும் சத்து குறைபாடு ஏற்படவில்லை. இவர்களை தவிர மற்றவர்கள் மெலிந்து சத்து இல்லாமல் காணப்பட்டனர். இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு சத்து உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று அங்குள்ள விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர்.

இவர்கள் வெறும் அங்குள்ள நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை மட்டுமே தான் அருந்தி வந்துள்ளனர். அந்த தண்ணீரை எடுத்து ஆய்வு செய்துள்ளனர். அந்த தண்ணீரில் அதிக அளவு ஸ்பைருலினா இருந்துள்ளது. இதனை நீர் கீரை என்றும் கூட அழைப்பர். இந்த 2 கிராம் நீர் கீரையானது 50 கிராம் கேரட்டுக்கு சமம். அதே போல 55 ஆப்பிளுக்கு சமம் ,600 கிராம் பட்டணிக்கு சமம் 1 வாழைப்பழத்திற்கு சமம் என கூறுகின்றனர்.இதுமட்டுமின்றி முட்டை,முட்டைகோஸ் என அனைத்தின் சத்துக்களும் இதில் உள்ளது. இந்த ஸ்பைருலினா ஒரு பாசி வகையை சார்ந்தது. இது பல ஊட்டச்சத்து நிறைந்த தாவரமாக உள்ளது. மேலும் நீல நிறத்தில் காணப்படும். உலகில் கிட்டத்தட்ட 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசிகள் இருந்தாலும் அதில் குறிப்பிட்ட சில பாசைகளை உணவிற்காக பயன்படுகிறது. 

அவற்றில் முதலில் இருப்பது இந்த ஸ்பைருலினா தான். குறிப்பாக ஆயிரம் கிலோ பழங்கள் மற்றும் காய்கறிகளில் கிடைக்கும் சத்துக்கள் அனைத்தும் இதில் ஒரு கிலோவிலேயே கிடைத்துவிடும். மேலும் நாசா விண்வெளி ஆர்யிசியாளர்களுக்கு எந்த ஒரு சத்து குறைபாடும் வராத அளவிற்கு அவர்களை காக்கும் வகையில் இந்த ஸ்பைருலினா கொடுக்கப்பட்டு வருகிறது.இதில் 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.இது விலையிலும் மிக குறைவு தான்.