படிகார கல்லை பயன்படுத்தி உடல்நல பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி...?

படிகார கல்லை பயன்படுத்தி உடல்நல பிரச்சினைகளை தீர்ப்பது எப்படி...?

பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள் ரசாயன மருந்துகளை பயன்படுவதை காட்டிலும் தலைக்கு குளிக்கும் சமயத்தில் சீயக்காய் அல்லது ஷாம்பூ உடன் சிறிதளவு படிகாரப் பொடியை சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு நன்றாக தேய்த்து குளித்து வந்தால் தலையில் இருக்கின்ற பொடுகுகள் முற்றிலும் நீங்கும்.

அடிக்கடி தலையில் அரிப்பு ஏற்படாமலும் தடுக்கும். எனினும் தலைக்கு குளிக்கும் போது தேவைக்கு அதிகமான அளவில் படிகாரப் பொடியை ஷாம்பூவில் கலக்கக்கூடாது.

முகம் அழகு பெறுவதற்கு படிகார கல் மிகவும் உதவியாக இருக்கிறது. முகத்தில் ஏற்படும் தழும்புகள் நீங்கவும் முகப்பருக்கள் மற்றும் முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி, முகப் பளபளப்பு பெற படிகார கல் உதவுகிறது. 

சிறிதளவு படிகார கல் பொடியை எடுத்து, அதில் தண்ணீரை விட்டு நன்கு குழைத்து முகத்தில் கண்களை தவிர மற்ற இடங்களில் நன்கு பூசிக் கொள்ள வேண்டும். ஒரு இருபது நிமிடம் அக்கலவையை முகத்தில் காய வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவி வந்தால் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்கும். ஏற்கனவே இருக்கின்ற முகப் பருக்களை நீக்கி, கரும்புள்ளிகள் ஏற்படாமல் காக்கும்.

மாசுக்கள் நிறைந்த குடிநீரில் இருக்கும் நுண்கிருமிகள் மற்றும் நச்சுக்களை போக்க படிகார கல் உதவுகிறது. பழங்காலம் முதலே படிகாரம் இயற்கை நீர் சுத்திகரிப்பு வடிகட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தண்ணீர் சுத்தம் செய்ய விரும்புவர்கள் ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அளவு படிகாரக்கல் பொடியை நீரில் சேர்த்து சிறிது நேரம் காத்திருந்து நீரை கவனிக்க
வேண்டும். அப்படி அந்த நீர் தூய்மையாகாத பட்சத்தில் சிறிது, சிறிதாக படிகார கல் பொடியை தண்ணீரில் சேர்க்கலாம்.

அரை டேபிள்ஸ்பூன் படிகார கல் பொடியும் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீரையும் ஒன்றாக சேர்த்து, நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். முகங்கள் மற்றும் கைகளில் வளர்ந்திருக்கும் முடிகளை சவரம் செய்த பின்பு, படிகார கல் பொடி, பன்னீர் கலந்த கலவையை முகம் மற்றும் கைகளில் நன்றாக பூசிக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் கண்களுக்குள்ளாக இந்த படிகார கல் பொடி கலவை சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க வேண்டும்.

பிறகு பூசப்பட்ட கலவை ஈரத் தன்மை குறையும் போது. அதன் மீது பன்னீர் துளிகளை தெளித்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கலவை பூசப்பட்ட இடங்களை தண்ணீர் கொண்டு நன்கு கழுவ வேண்டும். கழுவிய பின் அந்த இடங்களில் துண்டைக் கொண்டு மெதுவாக தொட்டு ஈரத்தை துடைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் தேவையற்ற முடி வளர்வதை முற்றிலும் நிறுத்த முடியும்.