வாரத்தில் 2 நாள் இந்த மெலனின் ட்ரிங்க் குடித்து வந்தாலே போதுமே ஒரு வெள்ளை முடி கூட எட்டிப் பார்க்காது. வெள்ளை முடி அனைத்தும் சீக்கிரம் கருப்பாக மாறும்!!

வாரத்தில் 2 நாள் இந்த மெலனின் ட்ரிங்க் குடித்து வந்தாலே போதுமே ஒரு வெள்ளை முடி கூட எட்டிப் பார்க்காது. வெள்ளை முடி அனைத்தும் சீக்கிரம் கருப்பாக மாறும்!!

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில் நம்மில் நிறைய பேருக்கு இந்த இளநரை பிரச்சனை இருக்கின்றது. வெள்ளை முடி வருவதற்கு நிறைய காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வரிசையில் மெலனின் ஊட்டச்சத்து குறைபாடும் வெள்ளை முடி வருவதற்கு ஒரு காரணம். சில பேருக்கு பரம்பரை பரம்பரையாகவே இந்த வெள்ளை முடி பிரச்சனை இருக்கும். அதாவது நம்முடைய தாத்தா பாட்டிக்கு சிறுவயதிலேயே முடி நரைத்திருந்தால், நமக்கும் சிறுவயதிலேயே இந்த முடி நரைக்க கூடிய பிரச்சினை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆக உங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதாவது உங்களுடைய அப்பா, சித்தப்பா உங்களுடைய தாத்தா பாட்டி அல்லது அம்மா இவர்களுக்கு சீக்கிரமே நரை முடி வந்து இருந்தால், உங்களுக்கும் சீக்கிரமே தலைமுடி வரலாம். அதிலிருந்து தப்பிக்கவும் இந்த பானத்தை குடித்து வரலாம்.

பரம்பரை பரம்பரையாக வெள்ளை முடி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்திருந்தாலும் அதை சரி செய்ய இந்த குறிப்பு பயன்படும். உங்களுக்கு மெலனின் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக நரைமுடி வந்தாலும் அதை சரி செய்ய இந்த பானத்தை குடிக்கலாம். மிக மிக சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த பானத்தை தயாரிப்பது எப்படி தெரிந்து கொள்வோம் வாருங்கள். இந்த மெலனின் ஊட்டச்சத்து நிறைந்த பானத்தை தயாரிக்க நமக்கு மூன்றே பொருட்கள் தான் தேவை. தேங்காய், நெல்லிக்காய், கருவேப்பிலை. கொஞ்சம் கொழுந்தான கருவேப்பிலையாக எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது இலசான கருவேப்பிலை என்று சொல்லுவார்கள் அல்லவா அது கிடைத்தால் நல்லது.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் 1 கைப்பிடி அளவு தேங்காய் துருவல், 1 கைப்பிடி அளவு கழுவிய கருவேப்பிலைகள், 1 நெல்லிக்காய் வெட்டி போட்டு, 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறில் இனிப்பு சுவைக்காக சுத்தமான தேன், நாட்டு சர்க்கரை, பனைவெல்லம் அல்லது சாதாரண வெல்லம் கூட சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

ஆனால் இனிப்பு சுவைக்காக எதையும் சேர்க்காமல் வடிகட்டி எடுத்த சாறை காலை வெறும் வயிற்றில் அப்படியே குடித்து வர வேண்டும். இந்த பானத்தை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குடிக்கலாம். தொடர்ந்து இந்த ட்ரிங்கை குடித்து வரும்போது உங்களுடைய நரைமுடி பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். நரை முடி வராமல் நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போடலாம்.

அதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய முடி அடர்த்தியாக வளரவும் இந்த பானம் உதவிக்காக இருக்கும். முடி உதிர்வதை தடுக்கும். அதே சமயம் விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த ஒரு நெல்லிக்காயை தினம்தோறும் உணவோடு சேர்த்து வரும்போது நம்முடைய வயதான தோற்றம் கூட தள்ளிப் போகும். சருமம் பளபளப்பாக மாறும்.

இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பருகலாம். உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் இந்த பானத்தில் சேர்க்கக்கூடிய தேங்காயின் அளவை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். இனிப்பு சுவைக்காக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த பானத்தில் எந்த பொருளையும் சேர்க்கக்கூடாது. மற்றபடி குறைந்த செலவில் எல்லோராலும் தயார் செய்யக்கூடிய இந்த ஹெல்த் ட்ரிங்க் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க கூடிய இடத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க. ஒரு நாள் அல்லது இரண்டு நாள் குடித்துவிட்டு ரிசல்ட் எதிர்பார்க்கக் கூடாது. தொடர்ந்து மூன்று மாதங்கள் குடிக்கும்போது உங்களுடைய ஆரோக்கியத்திலும் அழகிலும் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்.