வளர்ந்த முடி மீண்டும் உதிர வாய்ப்பே கிடையாது!!

புதிய முடிகளை புத்துயிர் கொடுத்து வளரச் செய்ய இந்த 2 பொருட்கள் போதும். இப்படி வளர்ந்த முடி மீண்டும் உதிர்வதற்கு வாய்ப்பே கிடையாது!!

புதிய முடிகளை சீக்கிரமாக வளர செய்ய, வளர்ந்த முடிகளை உதிராமல் பாதுகாக்க, நம்முடைய முடியை அழகாக பராமரித்து, பார்ப்பதற்கு சில்கியாக வைத்துக்கொள்ள, பொடுகு தொல்லையிலிருந்து விடுபட, ஒரு சூப்பரான ஹேர் பேக்கை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு இரண்டு பொருட்கள்தான் தேவை. விலை மலிவாக வெறும் 20 ரூபாயில் நம்பவே முடியாத பல நன்மைகளை தரக்கூடிய ஒரு ஹேர் பேக் தான் இது. மிஸ் பண்ணாம ரெமிடியை தெரிஞ்சுக்கோங்க. கட்டாயம் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு தேவையான பொருள்  தேங்காய் – 1, 5 லிருந்து 7 செம்பருத்திப் பூ. செம்பருத்திப் பூ கிடைக்காது என்பவர்கள் செம்பருத்திப்பூ பொடி வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் ஒரு முழு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது பத்தை போட்டு எடுத்துக் கொண்டாலும் சரி.

தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். மீடியம் சைஸில் இருக்கும் ஒரு முழு தேங்காயை எடுத்துக் கொண்டால், அதில் 6 லிருந்து 7 செம்பருத்தி பூக்களை போடலாம். செம்பருத்திப்பூ பொடியாக இருந்தால் 1 டேபிள்ஸ்பூன் போட்டுக்கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் போட்ட தேங்காய் செம்பருத்தி பூவுடன், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி தேங்காய் பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். செம்பருத்திப்பூ இதில் சேர்த்திருப்பதால், இதனுடைய கலர் லைட் பிங்க் கலரில் இருக்கும். பார்ப்பதற்கு ரொம்பவும் அழகாக இருக்கும்.

அரைத்த இந்த பேக்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அப்படியே வைத்து விடுங்கள். 10 மணி நேரம் வரை இந்த பேக் அப்படியே பாத்திரத்தில் இருக்கட்டும். ஒரு மூடி போட்டு பத்திரமாக வைத்து விடுங்கள். 10 மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் மேலே க்ரீமியாக நமக்கு தேங்காய் பால் க்ரீம் கிடைத்திருக்கும். ஒரு ஸ்பூனை கொண்டு கலக்காமல் லேசாக மேலோடு அந்த க்ரீமை அப்படியே எடுத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளுங்கள். அடியில் தண்ணீர் மட்டும் அப்படியே தங்கும். அந்த தண்ணீர் நமக்குத் தேவை கிடையாது.

மேலே இருந்து எடுக்கப்பட்ட அந்த தேங்காய் க்ரீமை அப்படியே நம்முடைய தலையில் பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் அதை பிரிட்ஜில் வைத்தால் இன்னும் க்ரீமியாக நமக்கு கிடைக்கும். அந்த க்ரீமை எடுத்து தலையில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கோக்கனட் கிரீமை தலையில் எப்படி அப்ளை செய்வது.

க்ரீமை தலையில் அப்ளை செய்வதற்கு முன்பு தலையில் நன்றாக எண்ணெய் வைத்து மசாஜ் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு சிக்கு எடுத்து விடுங்கள். தலை முடியின் வேர் பகுதியில் இருந்து நுனி வரை இந்த பேக்கை அப்ளை செய்துவிட்டு 20 நிமிடம் கழித்து தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசிக் கொள்ள வேண்டும். இது ஒரு மெத்தட். மீதம் இருக்கும் க்ரீமை ஃபிரிட்ஜில் ஸ்டோர் செய்து இரண்டு வாரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இரண்டாவதாக, இப்படியும் கூட இந்த கிரீமை பயன்படுத்தலாம். தலைக்கு குளித்து முடித்து விட்டு தலையை காயவைத்து சிக்கு எடுக்கும்போது முடி லேசாக ஈரம் இருக்கும் அல்லவா. அந்த ஈரம் இருக்கும்போது இரண்டு சொட்டு இந்த கோகனட் க்ரீமை உள்ளங்கைகளில் வைத்து எண்ணெய் போல தேய்த்து அப்படியே முடியின் மேலே அப்ளை செய்து விட்டால் உங்களுடைய முடி பளபளப்பாக சூப்பராக இருக்கும். அதாவது கண்டிஷனர் போட்டது போல் ஒரு பொலிவை இயற்கையாக கொடுக்கக் கூடிய சக்தியும் இந்த பேக்குக்கு உண்டு. உங்களுடைய முடி ரொம்பவும் சின்ன முடியாக இருந்தால் பாதி மூடி தேங்காயை போட்டு 3 செம்பருத்திப் பூக்களை போட்டு கூட இந்த கிரீம் தயார் செய்து கொள்ளலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் மேல் சொன்ன விஷயங்களை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய முடி மிக மிக அழகாக மாறும் அடர்த்தியாக மாறும்.