முத்து போல உங்களுடைய முகம் வெள்ளையாக மாற,

முத்து போல உங்களுடைய முகம் வெள்ளையாக மாற, 30 நாட்கள் இதை மட்டும் முகத்தில் போட்டால் போதும். சோப்பு ஃபேஸ் வாஷ் எல்லாத்தையும் மறந்துடுங்க!!

உங்களுடைய முகத்தில் அழகை குறைக்கக்கூடிய எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை சரி செய்ய ஒரு ஃபேஸ் வாஷ் பவுடரை எப்படி தயார் செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

மிக மிக சுலபமாக தயார் செய்யக்கூடிய இந்த பொடியை கொண்டு தினம் தோறும் காலை மாலை இரண்டு வேலையும் முகம் கழுவி வர வேண்டும். முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், கருந்திட்டுகள், முகப்பருக்கள், தேவையற்ற கொப்புளங்கள் அனைத்தும் படிப்படியாக குறைய தொடங்கும். முகச்சுருக்கம் நீங்கும். முகம் ஒரு சில நாட்களில் வெள்ளையாக மாறிவிடும்.

இந்த முகம் கழுவக்கூடிய பொடியை தயார் செய்ய நமக்கு 

தேவையான பொருட்கள்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், ஆரஞ்சு பீல் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன், சந்தன பொடி – 2 டேபிள் ஸ்பூன், அதிமதுரப்பொடி – 2 டேபிள்ஸ்பூன், இந்த நான்கு பொடிகளையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் போட்டு ஈரம் படாமல் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். ஹாஸ்டலில் இருப்பவர்களும் இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒரு சிறிய கிண்ணத்தில் உங்களுக்கு தேவையான அளவு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பொடியை போட்டு தண்ணீர் அல்லது சுத்தமான ரோஸ் வாட்டர் ஊற்றி, கலந்து இதை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். கழுத்து முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள். கொஞ்சம் லேசாக அப்ளை செய்து, இரண்டு நிமிடம் போல வட்ட வடிவில் மசாஜ் செய்து அப்படியே வெறும் தண்ணீரை ஊற்றி கழுவி விடுங்கள்.

நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி பயன்படுத்தும் போது முகத்திற்கு சோப்பு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தவே கூடாது. 30 நாட்கள் கடையில இருந்து வாங்கிய சோப்பு ஃபேஸ் வாஷை மறந்து விடுங்கள். காலை மாலை இரண்டு முறையும் இந்த பொடியை மட்டும் பயன்படுத்தி முகம் கழுவி வர உங்களுடைய முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம். ஒரே நாளில் எல்லா மாற்றமும் நிகழ்ந்துவிடும் என்று சொல்ல வரவில்லை. ஆனால் படிப்படியாக ஒவ்வொரு பிரச்சினையாக தானாக நிரந்தரமாக குறையும்.

இதே பொடியை உடம்புக்கு பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் சிலருக்கு வரும். தாராளமாக பயன்படுத்தலாம். அதற்கு தகுந்து இந்த நான்கு பொருட்களையும் கொஞ்சம் கூடுதலான அளவில் கலந்து பொடி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எல்லா பொடியையும் கடையிலிருந்து வாங்கும்போது ஆர்கானிக்கான பொடியா, கலப்படம் இல்லாத பொடியா என்று பார்த்து வாங்குவது மிகவும் முக்கியம்.

உங்களுக்கு ரொம்பவும் டிரை ஸ்கின் ஆக உள்ளது. இந்த பொடியை எல்லாம் முகத்தில் போட்டால் சருமம் இன்னும் வறண்டு போகும் என்று நினைப்பவர்கள், இந்த பொடியோடு தயிர் சேர்த்து கலந்து கொள்ளலாம் அல்லது பால் ஊற்றி கலந்து கூட முகத்தில் அப்ளை செய்தால் முகம் பொலிவு பெறும். இன்னும் சொல்லப்போனால் ஆலோவேரா ஜெல் கிடைத்தால் அதை இந்த பொடியோடு கலந்து முகத்தில் போடும்போது உங்களுக்கு பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அழகின் மேல் அதிக ஆர்வம் உள்ளவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பாருங்கள்.