பல கோடி ரூபாய் செலவு செய்தும் தீர்க்க முடியாத வியாதிகளை, வெறும் 5 ரூபாய் செலவில் சரி செய்து வைக்கும் 1 டம்ளர் தண்ணீர்!!

பல கோடி ரூபாய் செலவு செய்தும் தீர்க்க முடியாத வியாதிகளை, வெறும் 5 ரூபாய் செலவில் சரி செய்து வைக்கும் 1 டம்ளர் தண்ணீர்!!

உடம்பில் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள, சிறுநீரக பிரச்சினையை சரிசெய்ய, மூல நோய் வராமல் தடுக்க, மூட்டு வலி சரியாக, அல்சரை குணப்படுத்த, சருமத்தை இளமையாக வைத்துக்கொள்ள, வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்ய, இந்த ஒரு டம்ளர் தண்ணீர் போதும். பலகாலமாக கேரளாவில் இந்த தண்ணீரை குடித்து வருகிறார்கள். நம்மில் நிறைய பேருக்கு தெரியாத பதிமுகம் தண்ணீரை எப்படி தயார் செய்து குடிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த தண்ணீரை சர்க்கரை வியாதி உள்ளவர்களும் தாராளமாக குடிக்கலாம். பதிமுகம் என்பது ஒரு மரத்திலிருந்து எடுக்கக்கூடிய மரப் பட்டை. நாட்டு மருந்து கடைகளில் இந்த பட்டை மலிவாக சுலபமாக நமக்கு கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/4 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி அதில் பதிமுகம் பட்டை – 1/4 ஸ்பூன் சேர்த்து கொள்ள வேண்டும். இதோடு சிறிய துண்டு – சுக்கு, ஏலக்காய் – 1, வர மல்லி – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் நசுக்கி பொடி செய்து போட்டுக் கொள்ள வேண்டும். எல்லா பொருட்களும் தண்ணீரில் 5 லிருந்து 8 நிமிடம் நன்றாக கொதிக்கும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். ஒரு மூடி போட்டு இந்த தண்ணீரை வெதுவெதுப்பாக ஆற வைக்க வேண்டும்.

அதன் பின்பு வடிகட்டி 1 டம்ளர் அளவு தண்ணீரை தாராளமாக ஒருவர் பருகலாம். நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பதிமுக சத்து நிறைந்த தண்ணீரை நான்கி லிருந்து ஐந்து பேர் தாராளமாக குடிக்க முடியும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த தண்ணீரை குடிக்கலாம். எப்போது வேண்டுமென்றாலும் இந்த தண்ணீரை குடிக்கலாம். முடிந்தவரை காலையில் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வெகுநாட்களாக இந்த தண்ணீரை கேரள மக்கள் பருகிக் கொண்டு வருகிறார்கள். ஏதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டு விடுமோ என்ற எந்த பயமும் தேவை இருக்காது. ஆனால் கட்டாயமாக கர்ப்பிணி பெண்கள் இந்த தண்ணீரை குடிக்கக் கூடாது. இந்த தண்ணீர் பார்ப்பதற்கு ரோஸ் கலரில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. நிறைய வியாதிகளிடமிருந்து நம்முடைய உடம்பை பாதுகாத்துக் கொள்ள நமக்கு தெரியாத இப்படிப்பட்ட நிறைய விஷயங்கள் உள்ளது. தொடர்ந்து இப்படிப்பட்ட இயற்கையான விஷயங்களை பின்பற்றி வரும் போது நம்முடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.