குச்சி போல் இருக்கும் உங்கள் முடி காடு போன்று அடர்த்தியாக வளர, கற்றாழை எண்ணெயை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்!!!

குச்சி போல் இருக்கும் உங்கள் முடி காடு போன்று அடர்த்தியாக வளர, கற்றாழை எண்ணெயை வீட்டிலேயே தயார் செய்து கொள்ளலாம்!!!

முன் காலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் தங்கள் உடலை மட்டும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளாமல், அவர்களின் கூந்தலையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் உண்ணும் உணவில் நிறைந்திருந்த சத்துக்கள் தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் ஆகிய இருவருடைய முடி உதிர்வு என்பது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இப்படி முடி கொட்டும் பிரச்சினை அதிகமாக இருப்பதால் பலரும் கடைகளில் இருக்கும் வேதியல் பொருட்கள் கலந்த ஆயிலை பயன்படுத்த தொடங்குகின்றனர்.

 இதன் மூலம் அவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்சினை அதிகமாகி முடி இழப்பு தான் ஏற்படுகிறது. ஆனால் இவ்வாறு கடைகளில் விற்க கூடிய ஆயில்களை பயன்படுத்தாமல் வீட்டிலேயே இப்படி கற்றாழையில் செய்த ஆயில் பயன்படுத்தினால் முடி கொட்டும் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். வாருங்கள் இந்த கற்றாழை ஆயிலை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

கற்றாழை எண்ணெய் தயார் செய்ய தேவையான பொருட்கள்:

கற்றாழை பெரிய துண்டு – இரண்டு, தேங்காய் எண்ணெய் – கால் லிட்டர், சுடு தண்ணீர் – சிறிதளவு.

கற்றாழை எண்ணெய் செய்முறை:

முதலில் கற்றாழை துண்டை எடுத்துக்கொண்டு, அதனை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு அதன் ஓரங்களில் இருக்கும் முள் போன்ற பகுதியை கத்தி வைத்து வெட்டி எடுக்க வேண்டும். அதன் பின்னர் அதன் மேல்புறம் உள்ள தோலையும், அடிப்புறம் இருக்கும் தோலையும் சீவி எடுக்க வேண்டும்.

பிறகு அதன் உள்ளே இருக்கும் கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயையும் சேர்த்துக் கலந்து விடவேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கலந்த பின்னர் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும்.

பிறகு கலந்து வைத்துள்ள கற்றாழை எண்ணெயை சூடு தண்ணீரில் வைத்து சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதனை வெளியே எடுத்து, சிறிது நேரம் ஆற வைத்து, அதன் பின்னர் மிதமான சூட்டில் இருக்கும் கற்றாழை எண்ணெயை தலையில் தேய்த்து, இருபது நிமிடத்திற்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

பிறகு தலை முடியை இறுக்கமாக கட்டி 40 நிமிடத்திற்கு அப்படியே ஊறவிட வேண்டும். அதன்பிறகு மைல்டான ஷாம்பு சேர்த்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்துவர உங்கள் முடி வளர்ச்சி அதிகமாக ஆரம்பிக்கும். அதன் பிறகு முடி கொட்டும் பிரச்சினையும் இருக்காது. இவ்வாறு கற்றாழை எண்ணெய் உபயோகிக்கும் பொழுது உடல் சூடும் குறையும், முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.