ஒவ்வொரு முடியையும் வெள்ளி கம்பி போல் திக்காக அறுபடாமல் வளர செய்ய இந்த வெள்ளை ஹேர் பேக் போதும்!!

ஒவ்வொரு முடியையும் வெள்ளி கம்பி போல் திக்காக அறுபடாமல் வளர செய்ய இந்த வெள்ளை ஹேர் பேக் போதும்!!

நம்முடைய தலையில் இருக்கும் ஒரே ஒரு முடியை எடுத்து இரண்டு விரல்களை சுற்றி இழுத்து பார்த்தால் மூடி உடனடியாக அறுந்து விடக்கூடாது. அப்படி அறுந்துவிட்டால் முடிக்கு ஊட்டச்சத்து இல்லை என்று அர்த்தம். தலையில் இருக்கக்கூடிய ஒவ்வொரு முடியும் திக்காக ஊட்டச்சத்துடன் வளர்வதற்கு என்ன ஹேர் பேக் போடலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு முடியின் அடர்த்தி மேலே வேர் பகுதிகளில் எவ்வளவு திக்காக இருக்கிறதோ அதே போல கீழே நுனிவரை திக்காக இருக்க இந்த ஒரு ஹேர் பேக் போதும்.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நாம் பயன்படுத்தப் போகும் பொருட்கள். நன்றாக பழுத்த வாழைப்பழம் – 2, தேங்காய் பால் – 1 கப், மயோனீஸ் – 2 ஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் பழுத்த வாழைப் பழங்களை தோலுரித்து போட்டு, தயார் செய்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி, விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ளுங்கள். இதோடு 1 ஸ்பூன் விளக்கெண்ணெய், 2 ஸ்பூன் மயோனிஸ் சேர்த்து கலந்து இந்த பேக்கை தலையில் போட வேண்டும். இந்த பேக்கை தலையில் போடுவதற்கு அத்தனை சாஃப்டாக இருக்கும். பேக்கை முதலில் ஸ்கால்ப்பில், அதாவது மயிர் கால்களில் படும்படி நன்றாக போட்டுவிட்டு, அதன் பின்பு முடியின் நுனி வரை தடவி அப்படியே நீளமாக வைத்துவிடுங்கள். கொண்டை கட்ட வேண்டாம்.

20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த பேக்கை போட்ட முதல் தடவையிலேயே முடிகொட்வது குறையும். வாரத்தில் ஒரு நாட்கள் இந்த பேக்கை போட்டு வர, நான்கு அல்லது ஐந்து மாதத்தில் உங்களுடைய முடி திக்காக மாறும்.

ஒவ்வொரு முடியையும் திக்காக மாற்றுவது என்பது அத்தனை சுலபமான விஷயம் அல்ல. இந்த பேக்கை போட்டாலும் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை நம்முடைய உணவில் சேர்த்து வர வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முடிக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: மயோனிஸ் சாஸ் இப்போது எல்லா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் களிலும் சுலபமாக கிடைக்கின்றது. வெஜ் மயோனைஸ் சாஸ் தலைமுடிக்கு போட பயன்படுத்தலாம். இந்த பேக்கில் விலக்கெண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் இப்படி வேறு எண்ணெகளை பயன்படுத்தி கொள்ளலாம். வாழைப் பழத்தில் எந்த வகையான வாழைப்பழம் கிடைத்தாலும் அதை பேக்கிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.  வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை போட்டாலும் நல்லது தான். முடிந்தால் வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை போட்டு கொள்ளுங்கள்.