டீ, காபி ஹார்லிக்சுக்கு இதை செய்து குடித்து பாருங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருக்காது!!

டீ, காபி ஹார்லிக்சுக்கு இதை  செய்து குடித்து பாருங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருக்காது!!

பொதுவாகவே காலையில் எழுந்திருக்கும் போது சிலருக்கு டீ அல்லது காபி கையில் இருக்க வேண்டும். அப்போது தான் அன்றைய நாள் அவர்களுக்கு இனிதாக துவங்கும். இவ்வாறு டீ அருந்தி விட்டு தான் பலரும் வேலை செய்யவே துவங்குகிறார்கள். இதனை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு டீ குடிக்க முடியவில்லை என்றால் அன்றொரு நாள் முழுவதுமே அவர்களுக்கு எதையோ இழந்தது போல் தோன்றும். 

ஆனால் இந்த டீ, காபி குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறதா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எனவே இந்த டீ, காபிக்கு பதிலாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் இந்த புரோட்டீன் பவுடரை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும். தினமும் இதனை பாலுடன் சேர்த்து கலந்து குடிக்கும் பொழுது நமது உடலுக்குத் தேவையான அளவு புரதச்சத்து, கால்சியம் சத்து அனைத்தும் கிடைக்கிறது. வாருங்கள் இந்த புரோட்டீன் பவுடரை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை – ஒரு கப், பொட்டுக்கடலை – ஒரு கப், கம்பு – ஒரு கப், கேழ்வரகு – ஒரு கப், கோதுமை – ஒரு கப், ஜவ்வரிசி – ஒரு கப், ஏலக்காய் – 4, சுக்குப் பொடி – ஒரு ஸ்பூன்.

செய்முறை:

முதலில் அடுப்பை பற்ற வைத்து, ஒரு இரும்பு கடாய் அல்லது மண் சட்டியை வைத்து கொள்ள வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுத்துக் கொண்டு, அதனை தனியாக ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பின்னர் கம்பு பயிரை சேர்த்து நன்றாக மணம் வரும் வரை வறுத்துக் கொண்டு, அதனையும் அதே தட்டிற்க்கு மாற்ற வேண்டும். பின்னர் கோதுமையையும் நன்றாக வறுத்து தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஜவ்வரிசியை வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் கம்பையும் மிதமான தீயில் நன்றாக வறுத்து, அனைத்தையும் ஒரே தட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இவை அனைத்தையும் நன்றாக ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் 4 ஏலக்காய் சேர்த்து அனைத்தையும் பவுடராக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் சுக்குப் பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றை ஒரு சல்லடை பயன்படுத்தி சுத்தமாக சலித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதனை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி டப்பாவில் சேர்த்து இறுக்கமாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கப் காய்ச்சிய பாலில் ஒரு ஸ்பூன் இந்த புரோட்டீன் பவுடரை கலந்து, அதனுடன் சிறிது அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து குடித்தால் மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அது மட்டுமல்லாமல் உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.