உங்களுடைய முடியும் பலமடங்கு உயரமாக வளரும்

பப்பாளி மரம் போல, உங்களுடைய முடியும் பலமடங்கு உயரமாக வளரும். 1 பப்பாளி இலையை எடுத்து உங்களுடைய தலையில் இப்படி போட்டு பாருங்களேன்!!!

பெரும்பாலும் நம் வீட்டின் அருகிலேயே இந்த பப்பாளி மரம் இருக்கும். அந்த பப்பாளி மரத்திலிருந்து ஒரே ஒரு இலையை மட்டும் எடுத்து பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய தலை முடியில் இருக்கக்கூடிய அத்தனை பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். தலைமுடி உதிர்வு உடனடியாக நிறுத்த, தலையில் இருக்கக்கூடிய இன்ஃபெக்ஷன் சரியாக, பேன் பொடுகு தொல்லை நீங்க, நரை முடி கருப்பாக, முடி அடர்த்தியாக வளர இப்படி எல்லா வகையான பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும். உங்களுக்கே தெரியாத தலைமுடி பிரச்சனையைக் கூட சரிசெய்ய இந்த பப்பாளி இலை ஒரு நல்ல மருந்தாக செயல்படும்.

ஆனால் கருப்பாக இருக்கக்கூடிய முடியானது வெள்ளை நிறத்தில் மாறுவதற்கு நிச்சயமாக மூன்று மாதம் எடுக்கும். அதாவது உங்களுடைய நரை முடி கருப்பாக்க, நீங்கள் நிறைய செயற்கையான பொருட்களை இதுவரை பயன்படுத்தி வந்திருந்தால், அந்த செயற்கையான விஷயங்களை உங்களுடைய தலைமுடியில் இருந்து முதலில் அகற்றும் வேலையைத்தான் இந்த பப்பாளி இலை செய்யும்.

அதன் பின்பு நரைமுடியை மீண்டும் கறுப்பாக மாற்றிவிடும். சரி குறிப்புக்குள் செல்வோம். ஒரே ஒரு பப்பாளி இலையை எடுத்துக் கொண்டு, அதை சுத்தமாக கழுவி விட்டு, துண்டு துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். இந்த விழுதை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி கொள்ளுங்கள். கொஞ்சம் திக்காக இதை அரைத்து வடிகட்டி கொள்ளுங்கள்.

இந்த பப்பாளி இலை தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை ஊற்றி நன்றாக கலந்து, இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி உங்களுடைய மயிர்கால்களில் படும்படி தலை முழுக்க ஸ்பிரே செய்து அப்படியே 1 மணி நேரம் விட்டு விட வேண்டும். அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து கொள்ளலாம்.

உங்களுக்கு தலைபாரம் ஏற்படாது. சளி பிடிக்காது என்றால் இந்த பப்பாளி இலை லிக்விடை தலையில் போட்டுவிட்டு 4 லிருந்து 5 மணி நேரம் கழித்து குளித்தால் அது முடிக்கு நிறைய ஊட்டச்சத்துக்களை கொடுக்கும்.பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். தொடர்ந்து மூன்று மாதங்கள் பின்பற்றி வர உங்களுக்கு நல்ல ரிசல்ட் தெரிய தொடங்கும். (பிரஷ்ஷாக பப்பாளி இலைகளை எடுத்து அரைத்து தான் பயன்படுத்த வேண்டும். இந்த லிக்விடை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து பயன்படுத்த வேண்டாம்.)

பொதுவாகவே பப்பாளி இலை பப்பாளிப்பழம் இவைகளில் நிறையவே மருத்துவ குணம் உள்ளது நாம் எல்லோரும் அறிந்தது தான். சரும அழகிற்கு இந்த பப்பாளி பழம் மிகவும் அற்புதமான மருந்து. பப்பாளிப்பழத்தை உள்ளுக்கு சாப்பிட்டாலும் நம்முடைய தோல் பளபளப்பாகும்‌, முடி வளர்ச்சி அதிகரிக்கும். அதே சமயம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். பப்பாளி பழத்தை அரைத்து நம்முடைய முகத்தில் போட்டு வர நம்முடைய சருமம் அத்தனை பொலிவு பெறும். முடிஞ்சா இதையும் ட்ரை பண்ணி பாருங்க.