தேன் மெழுகு - பயன்கள் :

தேன் மெழுகு - பயன்கள் :
 
1. தோலின் மேல் தேய்க்கத் தோல் வறட்சி அகலும், புண்ணை ஆற்றும்.

2. தேன் மெழுகை அனலில் வாட்டித் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து இளக்கி உடலின் மேல் ஒத்தடம் கொடுக்க வலி நீங்கும்.

3. தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஆறு பங்கு எடுத்து சுட வைத்து அதில் ஒரு பங்கு தேன் மெழுகை போட இளகிக் களிம்பு போலாகும். இதனைக்கால் வெடிப்பிற்குத் தடவ வலி, வறட்சி, பிளவு குறையும்.

4. தேன் மெழுகை மிளகளவில் சிறு சிறு துண்டுகளாக்கி அனலில் போட்டு வரும் புகையை முகரச் சளி வெளியாகும். மண்டைச்சளி (சைனஸ்) வேதனை அகலும்.

5. தேன் மெழுகை கால்களில் வரும் வீக்கம், பிடிப்பு முதலியவற்றிற்கு தடவ குணமாகும்.