பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்!

பீன்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும்  அற்புதங்கள்! 

மாரடைப்பு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை!!!

அனைத்து விதமான காய்கறிகளிலும் எதோ ஒரு மருத்துவ குணங்கள் இருக்கவே செய்கின்றன. சில காய்கறிகளில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. அப்படி அன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் மிகவும் நன்மை தரக்கூடியதாக பீன்ஸ் இருக்கிறது.

பீன்ஸ் சாப்பிட்டால் ஏற்படும் அற்புதங்கள் :

மலச்சிக்கல் :

ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்

உடல் எடை :

உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சினை ஆகும். உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், உடலுக்கு தேவையான பல சத்துகள் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய பீன்ஸ் காய்களை உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வருவது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கும்.

இரத்தம் சுத்திகரிப்பு :

தினமும் நாம் சாப்பிடுவது, குடிப்பது, அருந்துவது என அனைத்து பொருள்களிலும் மாசு நிறைந்துள்ளன. இந்த மாசு அல்லது நச்சுகள் அனைத்தும் நமது இரத்தத்தில் சேர்ந்து கொண்டு எதிர்காலங்களில் நமது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பீன்ஸ் காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி இரத்தம் சுத்தம் பெறும்.

உடல்சோர்வு :

பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு இரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் பீன்ஸ் காய்கள் அதிகம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இதய நோய்கள் :

இதய நோய்களை தடுக்க இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். பீன்ஸ் காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை நிறுத்தி, மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.