உடல் எடை குறைய தேன்
உடல் எடை வேகமா குறைய வேண்டுமென்றால்
தேனை இப்படித் தான் சாப்பிடணும்..
உடல் பருமன் இந்த பிரச்சனைதான் இன்று வயது
பேதமில்லாமல் பலரையும் வாட்டி வதைக்கிறது. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் தாண்டிய
இந்த சிறிய குறிப்புகளும் உங்கள் உடல் எடையை வேகமாக ஆரோக்கியமாக குறைக்கும்.
உடல் பருமன் அதிகரிப்பு
உடல் பருமனைக் குறைக்க எடுக்கும் முயற்சிகள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருந்தாலும் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்க பார்த்துக் கொள்வதும் அவசியம். பல நேரங்களில் உடல் எடை குறைப்புக்காக எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துமே உரிய பலனை தருவதில்லை.
அதோடு ஆரோக்கியம் தொடர்பான வேறு பல பிரச்சனைகளையும் கொண்டு வந்துவிடுவதால் எடை குறைப்பு என்பது விரைவில் சாத்தியமில்லாமல் போகிறது. ஆனால் உடல் எடை குறைப்பில் வேகம் விரும்பினால் விவேகமாக செயல்பட வேண்டும்.
இயற்கையில் இருக்கும் பொருள்களைக் கொண்டு எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் வெற்றிகரமாக எடை குறைக்கலாம். அப்படி பயன்படுத்தக்கூடிய பொருள்களில் விரைவாக பலன் தரக்கூடியது தேன்.
தேனின் சுவை இனிப்பாக இருக்கும். பூண்டு ஒருவித நாற்றத்துடன் காரத்தன்மையில் இருக்கும். இதை இரண்டையும் சேர்த்து எடுத்துகொள்ள வேண்டும். சுத்தமான தேனில் பூண்டின் தோலை உரித்து சிறு சிறு துண்டுகளாக பொடியாக நறுக்கவும்.
பூண்டை பாட்டில் அடைத்து அது மூழ்கும் வரை தேனை விட்டு ஊறவிடவும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய பூண்டை நசுக்கி ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து கொள்ள வும். மிகக் குறைந்த நாட்களில் உங்கள் உடல் எடை குறைந்து வருவதை நீங்கள் உணரலாம்.
பூண்டு உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதில் ஆண்டிபாக்டீரியல் தன்மை அதிகமாக இருக்கிறது. செரிமானத்தைத் தூண்டும். உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். கழிவுகள் வெளியேறினாலே உடல் மந்தம் நீங்கி சுறுசுறுப்பு அடைவதோடு உடல் எடையும் குறையத் தொடங்கும்.
தினமும் காலையில் ஒருதம்ளர் வெந்நீரில் இரண்டு டீஸ்பூன் தேன். 2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து குடிக்கவும். இது குடித்த அரைமணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது. இவை மூன்றுமே வயிற்றை சுத்தம் செய்யும்.
உணவு பொருள்கள் எளிதில் செரிமானமாவதை ஊக்குவிக்கும். அதோடு உணவிலிருக்கும் சத்துகளைப் பிரித்து உணவுபொருளை கரைப்பதிலும் பங்குவகிக்கிறது. உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. வயிறு உப்புசம், மந்தம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.
மேலும் உடலில் இருக்கும் தேவையற்ற சதைப் பகுதியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாள் முழுவதும் உற்சாகமாக வைக்க உதவுகிறது. உடலில் இருக்கும் கலோரிகளும், கொழுப்புகளும் எரிக்கப்படுவதால் உடல் எடை குறைவதும் சாத்தியமாகிறது.
அதனால் தான் பெரும்பாலானவர்கள் உடல் எடை குறைய என்றதும் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட எளிதில் எடை குறையும் என்று சொல்கிறார்கள்.
பலருக்கு காபியோடுதான் நாள் தொடங்குகிறது.காபியில் இனிப்புக்கு சர்க்கரை சேர்ப்போம். ஆனால் இனி சர்க்கரைக்கு மாற்றாக தேனை பயன்படுத்துங்கள். இனிப்பு வகைகளை விரும்புபவர்கள் உடல் பருமனைக் குறைக்க விரும்பும் போது எப்போதாவது இனிப்பு சாப்பிட விரும்பினாலும் தேனில் கலந்த இனிப்பை மட்டுமே சாப்பிடுங்கள்.
காபி, டீ, பழச்சாறு பானங்களிலும் இனிப்புக்கு தேன் மட்டுமே சேர்க்க வேண்டும். தேன் இயல்பிலேயே இரத்தத்தைச் சுத்திகரிக்கும் என்பதால் இவை வேண்டிய ஊட்டசத்தையும் உங்களுக்கு அளிக்கும் என்பதால் எடை குறைப்பில் உங்களுக்கு எந்த ஒரு ஆரோக்கிய குறைபாடும் உண்டாகாது.
சமையலில் நறுமணப் பொருள்களாக பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டையை தேனுடன் கலந்து பயன்படுத்தலாம்.. இவையும் நல்ல பலனளிக்கும். ஒரு தம்ளர் நீரை கொதிக்க வைத்து இலவங்கப் பட்டை சேர்த்து கொதித்ததும் இறக்கி ஆறிய பிறகு ஒரு டீஸ்பூன் கலந்து தேன் எடுத்துகொள்ளலாம். இலவங்கப்பட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. தேனுடன் இணைந்து எடை இழப்பை ஊக்குவிக்கிறது.
வேகமாக உடல் எடை குறைய வேண்டும் என்பவர்கள் தேனுடன் இணைந்து இலவங்கப்பட்டையை எடுத்துகொள்ளலாம். அதிகப்படியான தொப்பையை குறைக்கவும் இந்த பானம் உதவுகிறது.
ஆய்வு ஒன்றின்படி தேன் பசியைக் கட்டுப்படுத்தக் கூடியது இதனால் அதிகப்படியாக நீங்கள்உணவு உட்கொள்வதைத் தடுக்கிறது. உணவுக்கு முன்பும் உணவுக்கு பின்னரும் உங்கள் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது, உணவால் அதிக எடை உண்டாவதை இது தடுக்கிறது.
இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு ஒரு தம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் அதிக கலோரிகளை எரிக்கும்.
எடை குறைப்பு என்பது கண்டிப்பாக செய்ய வேண்டியதுதான். ஆனால் அதை ஆரோக்கியமாக செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். இயற்கையான முறையில் சத்துகளை இழக்காமல் உடல் எடையை குறைப்பதே உடலுக்கு ஆபத்துகளை விளைவிக்காது உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு இவற்றோடு இந்த முயற்சியும் உங்கள் எடை குறைப்பை தீவிரமாக்கும் அதனால் தேனை தினமும் எடுத்துகொள்ளுங்கள். ஆனால் சுத்தமான தேனா என்பதிலும் கவனம் செலுத்துங்கள்.
உடல் எடை குறைப்பு சிகிச்சையை சித்த, ஆயுர்வேத முறையிலும் உணவுக் கட்டுப்பாடுகள் மூலமும் இயற்கையான முறையில் மேற்கொள்ள, மேலும் தெரிந்து கொள்ள,
K7 Herbo Care,
13/A, New Mahalipatti Road,
Madurai-625001.
CELL & Whatsapp 1: +91-9629457147
CELL & Whatsapp 2: +91-9025047147