உடல் எடையை அதிகரிக்க இதை சாப்பிடுங்க!

உடல் எடையை அதிகரிக்க இதை சாப்பிடுங்க!

உலகில் பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க ஓடிக் கொண்டிருந்தாலும் இன்னும் சிலர் குறிப்பிட்ட வயதுக்கு மேல் மெலிந்தே இருப்பவர்கள் உடல் எடையை அதிகரிப்பதற்கான வழியை தேடிக்கொண்டு தான் இருக்கின்றனர். அவ்வாறு தேடலில் உள்ளவருக்கான பதிவு இது. உங்கள் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க இதை செய்துப்பாருங்கள்.

பொதுவாக ஒரு மனிதனின் எடை கூடாமல் இருப்பதற்கு காரணம்

* இரத்தம் சுத்தம் இல்லாதது
* வயிற்றில் உள்ள புழுக்கள்
* உடலின் அளவுக்கு அதிகமான உஷ்ணம்
* பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை

இவைகளே ஒரு மனித உடல் எடையை அதிகரிக்க தடையாக இருக்கும் காரணிகள். ஆனால் இப்போது உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். உங்கள் உடல் பருமனை விரைவாக மற்றும் ஆரோக்கியமுள்ள முறையில் ஒரு மாதத்தில் 10 கிலோ வரை எடை அதிகரிக்க ஒரு எளிய வழிமுறை இதோ.

செய்ய தேவையான பொருட்கள்:
 
1.வெண் பூசணி விதைகள்
2.நாட்டு சர்க்கரை (அ) வெல்லம்
3.பால் .

ஆரோக்கியமான எடை அதிகரிப்பு:

வெண் பூசணி விதை, நம் ஆரோக்கியத்திலும், உடல் எடை அதிகரிப்பதிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது பசியை அதிகரிக்கும். நீங்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவரானால் இந்த வழிமுறைக்கு நாட்டு சர்க்கரையை பயன்படுத்துங்கள், அல்லது வெல்லம் பயன்படுத்தலாம். குறிப்பாக வெள்ளைச் சர்க்கரையை பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.
பாலில் முடிந்தவரை பசும்பால் எடுத்துக்கொள்வது நல்லது. இல்லையெனில் கிடைக்கும் பாக்கெட் பாலை எடுத்துக்கொள்ளுங்கள்.
 
செய்முறை:

உலர்ந்த பூசணி விதையை நன்கு பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும். நன்றாக காய்ந்த பாலில் பூசணி விதையின் பொடியை ஒரு தேக்கரண்டி அளவு போட்டு , மேலும் நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து நன்கு கலக்கி அந்த பாலை அருந்தலாம்.
 
பருகும் நேரம்:

இந்த பாலை காலை மற்றும் இரவு நாள் ஒன்றுக்கு 2 முறை எடுத்துக்கொள்ளலாம். காலை உணவுக்கு முன் ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த பாலை பருகுங்கள். இதனால் நன்கு பசி ஏற்படும். இரவு தூங்கும் முன் மற்றொரு முறை இந்த பாலை குடிப்பது நல்லது. இதனால் காலை விழிக்கும் பொது ஒரு புத்துணர்ச்சியை உங்களால் உணர முடியும். இதனை ஒரு மாதம் குடித்தால் ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உங்கள் எடையை அதிகரிக்கலாம்.

மேலும் நீங்கள் நினைக்கும் எடையை எட்டியவுடன் இதனை நிறுத்திக் கொள்வது நல்லது. எனினும் வாரம் 1 முறை மட்டும் எடுத்துக்கொண்டால் உங்களின் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும்.