ஆப்பிளை விட கொய்யா உசத்தியா?

ஆப்பிளை விட கொய்யா 
உசத்தியா?

* கொய்யாவில் ஆப்பிளைவிட கூடுதலான சத்துகள் உள்ளன.

* இது பொதுவாக யாருக்கும் தெரிவதில்லை. கொய்யாப் பழம் மலிவான விலையில் கிடைப்பதால் அதன் மகத்துவத்தை யாரும் உணர்வதில்லை. 

* உண்மையில் கொய்யாப்பழம், விலை உயர்ந்த ஆப்பிளை விட கூடுதல் சக்தியும், ஆரோக்கியமும் கொண்டது.

* நன்றாக பழுத்த கொய்யாப் பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், 

* கொய்யாவுடன் சப்போட்டா பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப் பெறுவதோடு இரத்தம் சுத்தமாகும்.

* மதிய உணவுக்கு பிறகு கொய்யாபழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். 

* இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, அரிப்பு, மூலநோய், சீறுநீரக கோளாறு உள்பட பல நோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.

* கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். 

இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.

*  கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.