40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

அகத்திக்கீரை
இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

காசினிக்கீரை- 
சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- 
சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- 
தசைகளை பலமடையச் செய்யும்.

கொடி பசலைக்கீரை- 
வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசாலை- 
கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- 
பசியைத் தூண்டும்.வீக்கம் வற்ற வைக்கும்.

அரைக் கீரை- 
ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- 
சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாக்குகீரை- 
வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- 
பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- 
உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- 
ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசாலைக்கீரை- இரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- 
நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- 
மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான் கீரை- 
கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- 
சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- 
ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை
விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- 
அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முருங்கைக் கீரை- 
சளி, இருமலை துடைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- 
நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- 
பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை
கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- 
வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளிக் கீரை- 
வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை- 
பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்தி கீரை
தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை-
மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவளைக் கீரை- 
ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை- 
இருமலை போக்கும்.

சாணக்கீரை-
காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- 
தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- 
பசியைத்தூண்டும்.

கொடி காசினிகீரை- 
பித்தம் தணிக்கும்.

துகிளிக்கீரை- 
வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- 
வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- 
மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை-
சளியை அகற்றும்.

நறுதாளிக் கீரை- 
ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.