மூலிகை பற்பொடி

இயற்கையான மூலிகை பற்பொடி செய்முறை:

தேவையானவை:

கடுக்காய் - 100 கி
தான்றிக்காய் - 100 கி
நெல்லிவற்றல் - 100 கி
வால் மிளகு - 150 கி
கிராம்பு - 20 கி, 
ஏலக்காய் - 10 கி
இந்து உப்பு -20 கி
நாயுருவி வேர்-20 கி
நெல் உமி - 20 கி, 
எள்ளு - 10 கி
துளசி (உலர்ந்தது)  - 20 கி, 
புதினா (உலர்ந்தது) - 20 கி
பச்சை கற்பூரம்- 10 கிராம்

செய்முறை: 

கடுக்காய், தான்றிக்காய் இரண்டையும் விதை நீக்கி தோலை எடுத்துக் கொள்ளவும். 

மற்ற அனைத்து பொருள்களையும் சுத்தம் செய்து வெயிலில் நன்றாக காய வைத்து, பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து பொடித்தால், இயற்கை பல்பொடி தயார்.