சுகப் பிரசவத்திற்கு உதவும் கசாயம்...
சுகப் பிரசவத்திற்கு உதவும்
கசாயம்...
குழந்தை உண்டான பெண்களுக்கு கொடுக்ககூடிய சிறந்த மருந்து இதுவாகும்.
தேவையான பொருட்கள்...
சாரணை வேர் 50 கிராம்,
குறுந்தொட்டி வேர் 50 கிராம்,
சதகுப்பை 10 கிராம்,
வாய்விளங்கம் 25 கிராம் ,
பெருஞ்சீரகம் 25 கிராம்,
கிராம்பு 10 கிராம்.
இவைகளை ஒன்றாக இடித்து பத்து பங்காக பிரித்து வைத்து கொள்ளவும்.
தினம் ஒரு பங்கு விதம் பத்து நாட்களுக்கு சாப்பிட்டு வரலாம்.
செய்முறை
ஒரு பங்கிற்கு 4 டம்ளர் நீர் ஊற்றி 2 டம்ளர் நீராக வற்றியவுடன்
1 டம்ளர் நீரை வடிகட்டி குடிக்கவும்
மீதமுள்ள 1 டம்ளர் நீரை இரவு
குடிக்கவும்.
காலை: சாப்பிடும் முன்
இரவு: சாப்பிட்ட பின்.
குறிப்பு
குழந்தை உண்டான பெண்கள் இதனை 5 ஆம் மாதம் முதல் 9 ஆம் மாதம் முதல் வாரம் வரை உபயோகிக்கலாம்.
இது சுகபிரசவத்திற்கும் உதவும்.
பயன்கள்
குழந்தை உண்டான பெண்களுக்கு
5 ஆம் மாதம் முதல்……
கால் வலி,
தலைசுற்றல்,
காலில் நீர் இறங்கி வீக்கம் அடைதல்,
பித்தம் அதிகரித்தல்
போன்ற உபாதைகள் தோன்றும். அச்சமயத்தில் மேற்கூறிய மருந்துகளுடன் சிறிது பெருஞ்சீரகம், கிராம்பு சேர்த்து இடித்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கால் வலி பாரம், கால் நீர் இறங்குதல் போன்றவை குணமாகும்.