குழந்தைக்காக ஏங்கும் தம்பதியரா நீங்கள்.?

குழந்தைக்காக ஏங்கும் தம்பதியரா நீங்கள்.??

 
திருமணமாகிய ஒவ்வொரு தம்பதியரின் கனவும் குழந்தையே!

குழந்தைச்  செல்வம் தள்ளிப்போகும் போதோ அல்லது கிடைக்காமல் போகும் போதோ, தம்பதியர் அடையும் மன வேதனைக்கு அளவே இல்லை. எனவே, 

குழந்தை வரம் பெற தவமிருக்கும், குழந்தை எதிர்ப்பார்க்கும் தம்பதியர் 
பின்பற்ற வேண்டிய விஷயங்களை பற்றி காணலாம்...

பின்பற்ற வேண்டியவை..

முப்பது வயதிற்கு மேல் திருமணம் ஆனவர்கள் குழந்தை பெறுவதை தள்ளிப் போடாமல் இருப்பது நல்லது. முப்பது வயதுக்கு மேல் கருத்தரிப்பதில் பெண்களுக்கு நிறைய சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.

நல்ல மருத்துவரை அணுகி   கர்ப்பப்பையை வலுப்படுத்தும் ,ஹார்மோன்களை சீர்படுத்தும் சித்த, ஆயுர்வேத மருந்துகளை  வாங்கி தினமும் சாப்பிட்டு, மேலும் உடலுக்கு தேவையான சமச்சீர் உணவுகளை சாப்பிட்டு உடலை தயார் செய்ய வேண்டும். இது விதை விதைக்குமுன் நிலத்தை பக்குவப்படுத்துவது போன்றதாகும்.

தம்பதியர் காபி, டீ, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும் அல்லது தள்ளிப்போட வேண்டும்.

இறுக்கமான உடைகளை அணிவதால் ஆண்களுக்கு உயிரணுக்கள் குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு சொல்கிறது. ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காருவதை தவிர்ப்பது நல்லது. இது கருமுட்டைகளை பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இதை மரியாதைக்காக என்று ஒரு வாழ்வியல் தத்துவமாக நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அதன் உண்மையான பொருள் உயிரணுக்களை பாதிக்கும் என்பதே.

மடிக்கணினியை மடியில் வைத்து பயன்படுத்தாதீர்கள்.

தேவையான அளவு தூக்கம் தேவை. அதிக இரவு வேலையை எடுத்துக்கொல்லாமல் இருப்பது நல்லது. குறைந்தது 6-8 மணி நேரம் தூக்கம் தேவை. நைட் ஷிப்ட்களில் அதிக நாட்கள் வேலை பார்ப்பது உடலின் மெட்டபாலிசத்தை மிகவும் மோசமாக பாதிக்கும்...

மன அழுத்தம், மன உளைச்சல் எதுவும் இல்லாமல் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். முடிந்தவரை எந்தவித மன உளைச்சல் தரக்கூடிய விஷயங்களை இந்தக் காலக்கட்டத்தில் தவிர்ப்பது நல்லது. உதாரணத்திற்கு உடல் சோர்வை தரக்கூடிய கடன் வாங்குவது , வீடு கட்டுவது, வேலை மாறுவது, உறவுகளுக்குள் சிக்கல், நீண்ட பயணம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

சுடுநீரில் (Hot Water) குளிப்பதை தவிர்ப்பது நல்லது. அல்லது அதிக சூடு இல்லாமல் குளிக்கலாம். இது உயிரணுக்கள் எண்ணிக்கையை மிகவும் பாதிக்கும்.

கோபம் வாக்குவாதம் போன்றவற்றை தவிர்த்து மனதை அமைதியாக வைத்திருக்கவேண்டும்.

பணம் சம்பதித்துதான், வீடு கட்டித்தான், கார் வாங்கித்தான் என்று சப்பை காரணங்களை சொல்லி குழந்தை பிறப்பை தள்ளிப் போடாதீர்கள்.

இளவயதில் திருமணம் முடிந்தால் எந்த பிரச்சினை இருந்தாலும் எந்த சிகிச்சை செய்வதற்கும் நமக்கு காலமும், வயதும், உடலில் பலமும் இருக்கும். அதுவே 30 வயதிற்கு மேல் பல வாய்ப்புகள் குறைந்து விடுகிறது.

30 வயதை தாண்டியவர்கள் Obesity, sugar , B.P. ,கொலஸ்ட்ரால் என்று ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துக்கொள்ளவும்.

இப்போது சாப்பாட்டு முறை வேறு மாறி விட்டது, ஜங்க் ஃபுட் அதிகம், நேரம் தவறிய சாப்பாடு, ஒழுங்கான தூக்கமின்மை போன்றவற்றை தவிர்க்கவும்.

ஆண்களுக்கு விந்தணு குறைபாடு மற்றும் ஆண்மை குறைவு (ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும்.)  போன்றவை குழந்தைப் பேறின்மைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் பிரச்சினையாகும். இதை தக்க மருத்துவரிடம் ஆலோசித்து சரிசெய்து கொள்ளவும்.

 சர்க்கரை நோய்க்கும் குழந்தைப் பேறு இல்லாமைக்கும் தொடர்பு உள்ளது. உயிரணு மற்றும் கருமுட்டை உற்பத்தியில் சமச்சீரற்ற தன்மையை சர்க்கரை நோய் உருவாக்குகிறது. ஆனால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு குழந்தையின்மைக்கான சிகிச்சையைப் பெற முடியும். 
அதற்கான நவீன சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மிக அதிக அளவில் செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், டிவி பார்ப்பவர்கள் கதிர் வீச்சு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்கள் மனதளவிலும் பாதிப்படைகின்றனர். இதனாலும், குழந்தை பிறப்பு தடைப்படுகிறது என்ற தகவல் அறிவியல் ரீதியில் சொல்லப்படுகிறது.

ஓராண்டு வரை முயற்சி செய்துவிட்டு பிறகு மகப்பேறு மருத்துவரை அணுகி கருக்குழாய் அடைப்பு இருக்கிறதா என்று மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்க்கவும்.

தொடர்ந்து வரும் ஜுரம், அதிக வெய்யிலில் அலைவது இவை விந்தணுக்களின் உற்பத்தி, தரம், நகரும் சக்தி இவற்றை பாதிக்கும். ஏனென்றால் அதிக உஷ்ணம் விந்தணு தரத்தை பாதிக்கும். உடல் உஷ்ணத்தை விட, விரைகளின் உஷ்ணம் சாதாரணமாக 2 டிகிரி குறைந்தே இருக்கும்.

* உடல் பருமனை குறைப்பது.

* சுற்றுப்புற சூழ்நிலையின் மாசு நச்சுப்பொருட்கள் தாக்குதலை தடுத்தல்.

* எக்ஸ்ரே ஸ்கேன் போன் Radiation சிகிச்சைகளை தவிர்த்தல்.

* சரியான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளுதல்

* தினமும் 4 மணி நேரங்களுக்கு மேல் செல் போனில் பேசுபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* தொடர்ச்சியாக நைட் ஷிப்ட் வேலை செய்து வந்த பெண்களில் 29 சதவீதத்தினர் வரை கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

* வைட்டமின் பி நிறைந்துள்ள உணவுகளான பாலாடை கட்டி, முட்டை, பால், கெட்டி தயிர், தானியங்கள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது, விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும்.

* ஜிங்க் சத்துள்ள உணவுகளான கடல் சிப்பிகள், எள் மற்றும் சூரியகாந்தி விதைகள், இஞ்சி, கோதுமை, இறைச்சி, டார்க் சாக்லேட், தர்பூசணி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வருவது, ஆரோக்கியமான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கும்.

* செலினியம்(Selenium) நிறைந்துள்ள உணவுகளான மட்டி (Shellfish), ஈரல், மீன், சூரியகாந்தி விதைகள், நண்டுகள், இறால்கள், கடல் நண்டுகள், அரிசி, கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள் விந்தணு குறைபாட்டைத் தடுக்கும்.

* அடிக்கடி சுயஇன்பம் மற்றும் உடலுறவு மேற்கொள்ளுதலை தவிர்க்கவும்.
 

குழந்தை வரம் கொடுக்கும் மூலிகை மருந்துகள்

சதாவரி, விழுதி, சிறு நெருஞ்சில், சதகுப்பை. (இவை அனைத்தும் சேர்ந்த மருந்துகள் சதாவரி லேகியமாகவும், விழுதி எண்ணெயாகவும் எங்கள் K7Herbocare-ல் கிடைக்கும்)

மேற்கண்ட மருந்துகளையும், மற்றும் சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் சாப்பிட்டு இயற்கையான குழந்தை பிறப்பிற்கு தயாராகலாம் அல்லது நீங்கள் ஆங்கில மருத்துவத்தின் மூலம் எந்த ஒரு குழந்தை பிறப்பு சிகிச்சைக்கு தயாரானாலும், இந்த மருந்துகள் மூலம் கர்ப்பபையை வலுப்படுத்திக் கொண்டு சிகிச்சைக்கு செல்லும்போது குழந்தை எளிதாக தங்கும்.

 

மேற்கண்ட மருந்துகளை நேரிலோ அல்லது கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ள

Office Address 

K7 Herbo Care, 

13/A, New Mahalipatti Road,

Madurai-625001, 

Tamilnadu, India.

Whatsapp & Call 1: +91-9025047147.

Whatsapp & Call 2: +91-9629457147.