சம்பங்கி பூவின் மருத்துவ பயன்கள்

சம்பங்கி பூவின் பயன்கள் :

சம்பங்கி பூ பூஜைக்கு ஏற்றது. அவ்வளவு சீக்கிரத்தில் வாடாது. இதன் சாறு நறுமணப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து வகை மண்ணிலும் சம்பங்கி வளரும். சரளை, செம்மண்ணில் நன்றாக வளரும். எல்லாக் காலத்திலும் சாகுபடி செய்யலாம்.

மனம் தரும் சம்பங்கி பூவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இதன் விதை, இலை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. கோடை வெயிலால் ஏற்படும் வேர்க்குரு போன்ற சரும பிரச்சனைகளுக்கு சம்பங்கி பூ தைலம் பயன்படுகிறது.

அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு, அந்த தைலத்தை உச்சி முதல் பாதம் வரை தடவி வந்தால் வியர்க்குரு மறையும். மேலும் உடல் குளிர்ச்சியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

சம்பங்கி பூ குளியல் பவுடர் தயாரிப்பது எப்படி?

சம்பங்கி 100 கிராம், வெள்ளரி விதை 20 கிராம், பயத்தம் பருப்பு 200 கிராம் இவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தைலம் தேய்த்துக் குளிக்கும் போது இந்தப் பவுடரை பயன்படுத்தி வந்தால் தோல் மினுமினுப்பாக இருக்கும்.

ஒரு கைப்பிடி அளவு சம்பங்கிப்பூக்கள் கொதிக்கும் நீரில் போட்டு, வாரம் இருமுறை ஆவி பிடித்து வந்தால், முகத்தில் ஏற்பட்ட தழும்புகள் மறைந்துவிடும்.

4 சம்பங்கி பூவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை சூடு பறக்க நெற்றி பகுதியில் தடவினால் தலைவலி உடனே குறையும்.

பாத வலி நீங்க சம்பங்கி இலையை மை போல அரைத்து பாதங்களில் தடவி வந்தால் வலி நீங்கும்.