கிராம்பை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள்....

கிராம்பை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் !!!

கிராம்பு (cloves) என்பது வாசனை மிகுந்த மரத்திலிருந்து எடுக்கப்படும் பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை இந்தோனேசியாவில் அதிகம் பயிரிடப்படுகின்றது. காரமான உணவு பொருட்களில் வாசனைக்காக அதிகம் சேர்க்கப்படுகின்றது. ஆண்டு முழுவதும் பல்வேறு காலநிலைகளில் இந்த கிராம்பானது உற்பத்தி செய்யப்படுகின்றது. கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், தையமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இந்த கிராம்பில் (cloves) உள்ளன. எளிதில் செரிமானமாக கூடிய திறன் கிராம்பில் இருப்பதால் அதிகமாக அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றது.

கிராம்பின் 13 அற்புத நன்மைகள் (Benefits Of Cloves) :

பொதுவாக நம் உணவில் சேர்க்கப்படும் கிராம்பில் பல்வேறு அதிசய நன்மைகள் நிறைந்துள்ளன. இவற்றில் மிகவும் முக்கியமான 13 அற்புத நன்மைகளை தற்போது இந்த பதிவில் பார்ப்போம்.

இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கிறது (Help Regulate Blood Sugar) :

இது ஒரு வகையான மொட்டு. இதில் அழற்சி எதிர்ப்பு பொருள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள், ஜீரண சக்தி பொருட்கள் உள்ளன. ஆராய்ச்சி தகவல்கள் கருத்துப்படி இது இன்சுலின் சுரப்பை சரி செய்கிறது, கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது, ட்ரைகிளைசரைடு போன்றவற்றை குறைக்கிறது. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகின்றது.

எலும்புகள் வலுபெற உதவுகிறது (Promote Bone Health) :

கிராம்பை (cloves) பவுடராக தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும். எலும்புகள் வலுப்பெறும் என பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இவை எலும்பில் உள்ள எனாமல் தேயாமல் பாதுகாக்கிறது. முதுமை காரணமாக ஏற்படும் எலும்பு தேய்மானத்தை கிராம்பு சரிசெய்கின்றது.

வயிற்று புண்களுக்கு ஏற்றது (Reduce Stomach Ulcers):

கிராம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது வயிற்றில் இருக்கும் புண்களை சரிசெய்ய உதவுகின்றது. வயிற்று அல்சர் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து கிராம்பு பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் முற்றிலுமாக சரி செய்யப்படும்.

சிறுநீரக பிரச்சனைகள் :

நமது உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கச் செய்வதில் சிறுநீரகங்களுக்கும் முக்கிய பங்குண்டு. ஆனால் ஒரு சிலருக்கு இந்த சிறுநீரகங்களில் கற்கள் அடைப்பு, மற்றும் மூத்திரப்பை தொற்று போன்றவையால் பிரச்சனை ஏற்படுகிறது. இவற்றை போக்குவதற்கு சிறிது கிராம்பு மற்றும் மிளகை எடுத்து நன்கு அரைத்து அதை திராட்சை சாறுடன் கலந்து பருகி வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் நீங்கும்.

நோயெதிர்ப்பு சக்தி :

கிராம்பு (cloves) இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு மூலிகை பொருளாக இருக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு வகையான தொற்று கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலை காக்கும்.

புற்று நோய் (Protect Against Cancer) :

புற்று நோய் யாருக்குமே வரக்கூடாத ஒரு மிகக் கொடிய நோயாகும். இந்நோய்யை குணப்படுத்த அதிக விலை கொண்ட மருந்துகளை பயன்படுத்தும் அதே நேரத்தில் கிராம்பையும் உணவில் சேர்த்து பயன்படுத்துவது சிறந்த பலனளிக்கும். கிராம்பில் இருக்கும் பினைல்புரப்போனைடு என்கிற வேதிப்பொருள் உடலின் புற்று நோய் பாதித்த உடல் செல்களை மீண்டும் வளர்ச்சி பெறாமல் இருப்பதை உறுதி செய்கிறது.

பல் ஈறு வலி (Oral health) :

பல் ஈறு வலியால் அவதிப்படுவோருக்கு கிராம்பு மிகச் சிறந்த நிவாரணியாக செயல்படுகின்றது. சிறு கிராம்பு துண்டை வலி ஏற்படும் இடத்தில் எடுத்து வைத்துக் கொண்டால் போதும் சில மணி நேரத்தில் வலி நின்று விடும். இன்று நாம் வாங்கும் எல்லா பேஸ்டுகளிலும் கிராம்பு சேர்க்கப்பட்டிருப்பதை கவனிக்கலாம்.

செரிமானத்தை அதிகரிக்கும் (Improve Digestion) :

செரிமான பிரச்சினைகளால் அவதிப்படுவோர் கிராம்பை (cloves) அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் போதும். நாம் சாப்பிடும் சாப்பாட்டை செரிமானம் செய்வதுடன் வயிற்றையும் சுத்தம் செய்யவும் உதவுகிறது. அதனால் தான் அசைவ உணவுகளில் அதிகம் கிராம்பு சேர்க்கப்படுகின்றது. கிராம்பானது கடினமான உணவுகளை எளிதில் செரிமானம் செய்ய உதவுகின்றது.

தலைவலி (Cures Headaches) :

மனச்சோர்வு, ஜுரம், ஜலதோஷங்கள் போன்றவை ஏற்படும் போது பலருக்கும் மிகுந்த தலைவலி உண்டாகிறது. இப்படியான நேரங்களில் சிறிதளவு கிராம்பை இடித்து பொடியாக்கி நீர்விட்டு குழைத்து அதனுடன், ராக் சால்ட் உப்பை சேர்த்து நன்கு கலந்து, சூடான பசும்பாலில் போட்டு குடித்தால் விரைவிலேயே தலைவலி நீங்கும். ஒற்றை தலைவலி பிரச்சனை உள்ளவர்களும் இம்மருத்துவ முறையை கடைபிடித்து நன்மை பெறலாம்

மன அழுத்தம் (Relieve Stress) :

மன அழுத்தத்தினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், அதில் இருந்து நிவாரணம் கிடைக்க, கிராம்பு, புதினா, துளசி மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை நீரில் போட்டு கொதிக்க விட்டு நல்ல தேநீர் செய்து தேன் சேர்த்து கலந்து குடித்தால், மன அழுத்தத்தில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

பருக்கள் (Treat Acne) :

பருக்கள் இருக்கும் பகுதிகளில் கிராம்பு மொட்டு அல்லது கிராம்பு (cloves) பொடியை கிராம்பு எண்ணெய்யில் குழப்பி பருக்கள் அல்லது அடிபட்ட இடங்களில் வைத்தால் போதும். தொடர்ந்து இதை செய்து வந்தால் பருக்கள் கொஞ்ச கொஞ்சமாக மறைந்து விடும். இனி அந்த இடத்தில் பருக்கள் வருவது முற்றிலுமாக குறைந்து விடும்.

எலும்புகள் வலுப் பெற (Healthy Bones) :

வயதானவர்களிடம் அதிகமாக காணப்படும் ஒரு நோயாக மூட்டுவலி இருக்கிறது. மேலும் ஒரு சிலருக்கு குளிர்காலங்களில் உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் வலி மற்றும் விரைப்பு ஏற்படுகிறது. இச்சமயங்களில் சிறிது கிராம்புடன் சுக்கை சேர்த்து இடித்து, கஷாயம் வைத்து குடித்தால் உடனடியாக மூட்டு வலி பிரச்சனைகள் நீங்கும்.

இளமையான தோற்றம் பெற (Youthful Skin) :

தொடர்ந்து கிராம்பு மற்றும் கிராம்பு பொடியை உணவில் சேர்த்து வந்தாலும் அல்லது கிராம்பு தண்ணீரை அதிகாலையில் குடித்து வந்தாலும் சருமம் இளமையான தோற்றத்தை பெறும். குளிக்கும் போதே சிறிது கிராம்பு பொடியை தண்ணீரில் கலந்து குளித்து வந்தால் சருமம் பொலிவுடன் இருக்கும்.

கிராம்பை பயன்படுத்தும் முறை (How to Use Cloves) :

பொதுவாக நாம் கிராம்பை அதிகமாக உணவில் பயன்படுத்தித்தான் பழக்கப்பட்டிருப்போம். அதையும் தாண்டி கிராம்பு எந்தெந்த வலிகளுக்கு நிவாரணியாக செயல்படுகின்றது என்பதனை பார்க்கலாம். நீங்களே ஆச்சரியப்படும் அற்புத குணங்கள் கிராம்பில் உள்ளன.

1. நறுமணத்திற்காக பயன்படுத்தலாம் (Use cloves to flavour food) :

கிராம்பு உணவிற்கு நல்ல நறுமணத்தை தரக்கூடிய பொருள். அதனால் தான் அதிகமாக அசைவ உணவுகள் மற்றும் இனிப்பு உணவுகளில் கிராம்பு அதிகம் சேர்க்கப்படுகின்றது. வீட்டில் எலுமிச்சை பழத்துடன் கிராம்பை சேர்த்து வைக்கலாம். அப்படி வைக்கும் போது இதிலிருந்து வரும் நறுமணமானது வீட்டில் இருக்கும் பூச்சிகளை அண்ட விடாமல் துரத்த உதவும்.

2. தண்ணீருடன் சேர்த்து குடிக்கலாம் (Drinks with water) :

கிராம்பு ஒரு மிகச்சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகின்றது. இதனால் காலையில் வெறும் வயிற்றில் கிராம்பு ஊற வைத்த தண்ணீரை பருகலாம். அல்லது டீ காபி குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் இந்த கிராம்பு தண்ணீரை தினமும் குடித்தால் உடலில் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன் வலி நிவாரணம் கிடைக்கும்.

3. வீட்டு உபயோகத்திற்கு (Use cloves in the Household) :

கிராம்பு எண்ணெய் அல்லது கிராம்பு ஊற வைத்த தண்ணீரை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து கிராம்பு பட்டை கொண்டு இறுக்கமாக மூடி வீட்டின் ஒரு இடத்தில் வைத்தால் போதும். அதன் நறுமணம் வீடு முழுவதும் பரவலாக வந்துகொண்டிருக்கும். ரூம் ஸ்பிரே கூட தேவையில்லை. இந்த கிராம்பு எண்ணெய் அல்லது தண்ணீர் போதும்.

4. பல் வலிக்கு (pain from a toothache) :

பல் வலியால் அவதிப்படுவோருக்கு கிராம்பு ஒரு மிகச்சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். கிராம்பு தைலம், கிராம்பு பேஸ்ட், கிராம்பு பவுடர், கிராம்பு கம் என பல வகைகளில் இப்போது கிடைக்கின்றது. வலி ஏற்படும் இடத்தில் சிறிது கிராம்பை வைத்தால் போதும். மிகச்சிறந்த நிவாரணியாக செயல்படும்.

5. பருக்களுக்கு ஏற்றது (Apply the cloves powder for acne) :

அலர்ஜி, நாட்பட்ட தழும்பு மற்றும் வெட்டு காயங்கள் ஆகியற்றிற்கு கிராம்பு பவுடர் அல்லது பேஸ்ட் மிகவும் ஏற்றது. கிராம்பை(cloves) அடிபட்ட அல்லது காயம் ஏற்பட்ட இடத்தில் தடவலாம். பருக்கள் உள்ள இடத்தில் கிராம்பை தொடர்ந்து தேய்த்த வந்தால் போதும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கிராம்பின் பக்க விளைவுகள் (Side Effects of Cloves) :

என்ன தான் கிராம்பை நாம் தினமும் எடுத்து வந்தால் இதில் சில பக்க விளைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக அதிக அளவில் ஒரு குறிப்பிட்ட சத்து நிறைந்த பொருளை தொடர்ந்து எடுத்து வந்தால் நம் உடலில் சில உபாதைகள் ஏற்படும். அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

1. இரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடு (Increases Bleeding) :

அளவுக்கு அதிகமாக கிராம்பை உட்கொள்ளும் போது, அது இரத்தத்தை மெலிதாக்கும். அதிலும் இரத்தம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளான ஹீமோபிலியா அல்லது ஆன்டிகோகுலன்ட் மருந்துகளை எடுப்பவர்கள் கிராம்பை அதிகம் உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே போல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் போகிறவர்கள், 2 வாரத்திற்கு முன்பிருந்தே கிராம்பை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

2. குறைவான இரத்த சர்க்கரை அளவு (Lowers Sugar Level In The Blood) :

இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைவாக இருப்பவர்களும், கிராம்பை உணவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கிராம்பு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மேலும் குறைக்கச் செய்வதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஹைப்போ கிளைசீமியா நோயாளிகள் கிராம்பை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

3. நச்சுத்தன்மை (Toxicity) :

கிராம்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அது தீவிர பக்க விளைவை உண்டாக்கும். அதில் குமட்டல், வாந்தி, சுவாசிப்பதில் பிரச்சனை, தொண்டைப் புண், திரவ ஏற்றத்தாழ்வு, சிறுநீரக கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

4. அலர்ஜி (Allergic Reactions) :

கிராம்பால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளுள் ஒன்று அலர்ஜி. அளவுக்கு அதிகமாக கிராம்பை (cloves) எடுக்கும் போது, அதனால் பல்வேறு அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். அதில் அரிப்பு, வீக்கம், தொண்டை கரகரப்பு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இன்னும் தீவிர நிலையில் அனாபிலாக்சிஸ் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

5. சென்சிடிவ் சருமம் (Makes The Skin Sensitive) :

கிராம்பு சருமத்தை மிகவும் சென்சிடிவ் ஆக்கும். ஆகவே ஏற்கனவே அலர்ஜி இருக்குமானால், கிராம்பு எண்ணெயை நேரடியாக சருமத்தில் பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது அரிப்பு, எரிச்சல், காயம் அல்லது ஒவ்வாமையை உண்டாக்கும். சில நேரங்களில் சரும செல்களைப் பாதிக்கும்.

6. உணர்வு இழப்பு (Loss Of Sensation) :

கிராம்பில் உள்ள உட்பொருள், உணர்வை இழக்கச் செய்யும். இந்த மசாலா பொருளின் எண்ணெய்யை சருமத்தில் அடிக்கடி பயன்படுத்தும் போது, அது சருமத்தில் உணர்வு இழப்பை ஏற்படுத்தும்.

கிராம்பு தொடர்பான கேள்விகள்(FAQ) :

கிராம்பு இதயத்திற்கு ஏற்றதா?

இதய நோய் இருப்பவர்கள் கிராம்பு அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டாம். போதுமான அளவு உணவில் எடுத்துக்கொண்டால் போதும். கிராம்பில் காரத்தன்மை அதிகம் இருப்பதால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அளவிற்கு அதிகமாக கிராம்பு சாப்பிட்டால் என்ன ஆகும்?

அளவிற்கு அதிகமாக கிராம்பு சாப்பிடுவதால் வாந்தி அலர்ஜி, எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கிருமிகளை கிராம்பு அளிக்குமா?

கண்டிப்பாக, கிருமிகளை கிராம்பு அண்டவிடாது. இதனால் தான் சில வீடுகளில் பாரம்பரியமாக கிராம்பு தண்ணீர் மற்றும் கிராம்பு ஊது பத்தி ஏற்றி வைப்பார்கள்.

கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு கிராம்பு ஏற்றதா?

கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தினமும் கிராம்பு எடுத்துக்கொள்ளலாம். இதனால் உடல் மெலிவதுடன் கொழுப்பை கரைக்கும் திறன் கிராம்பிற்கு உள்ளது.

வாயு தொந்தரவிற்கு கிராம்பு ஏற்றதா?

செரிமான பிரச்சினையால் வாயு தொல்லையில் அவதிபடுபவர்கள் கிராம்பு தண்ணீர் குடிக்கலாம். வயிற்று உப்புசம், வயிறு உபாதைகளுக்கு கிராம்பு ஏற்றது. ஆனால் பசியால் வாயு தொல்லையில் உள்ளவர்கள் கிராம்பு எடுக்கக்கூடாது.