பிரண்டை உப்பு என்றால் என்ன?




பிரண்டை உப்பு                            Pirandai Salt
சீந்தில் சர்க்கரை                         Seenthil Sugar (Giloy Satva)
நிலாவரை உப்பு
மூலிகை ஹேர் டை
கட்டுக்கொடி
மின்சாரத் தைலம்
சேய்-நெய்
மூங்கில் அரிசி                            Bamboo Rice
வில்வம் பழம்                              Bael Fruit
 



பிரண்டை உப்பு என்றால் என்ன?

பிரண்டை உப்பு என்றவுடன் நிறையப் பேர் நினைப்பது பிரண்டையுடன் உப்பை கலந்தால் அதுதான் பிரண்டை உப்பு என்று நினைக்கிறார்கள். கிட்டத்தட்ட அதுபோலத்தான் இப்போது Online-லும் வெறும் பிரண்டையுடன் உப்பை மட்டுமே கலந்து ஒரே நாளில் தயார் செய்து மிகக் குறைந்த விலையில் விற்கிறார்கள். இன்னும் சிலர் அடுப்பில் வைத்து காய்ச்சி பிரண்டை உப்பு எடுக்கிறார்கள். இவைகளுக்கு பெயர் பிரண்டை பற்பம். பிரண்டை உப்பு கொடுக்கும் பயன்களை, குணப்படுத்தும் நோய்களை பிரண்டை பற்பம் சரி செய்யாது.

நாங்கள் K7 Herbo Care தயார் செய்யும் பிரண்டை உப்பு முழுக்க முழுக்க போகர் நிகண்டுவில் குறிப்பிட்ட பாரம்பரிய சித்தர்களின் முறையில் பிரண்டையை எரித்து சாம்பலாக்கி, தெளிவு நீர் எடுத்து கிட்டத்தட்ட 20-30 நாட்கள் வரை சூரிய புடத்தில் வைத்தெடுத்து உருவாக்கப்பட்டதாகும். ஒரு 50கிராம் உப்பு தயார் செய்வதற்கு 120கிலோ பிரண்டை செலவாகும். இது மட்டுமே 300 விதமான நோய்களை குணப்படுத்தும்.


பிரண்டை உப்பு எதற்காக?

வருடம் முழுவதும் பிரண்டை கிடைக்கிறது, பிறகு எதற்கு பிரண்டையை உப்பாக சாப்பிட வேண்டும்.
சித்தர்கள் கூற்றுப்படி துளிர் பிரண்டை மட்டுமே மனிதர்கள் சாப்பிடுவதற்கு உகந்தது. முற்றிய பிரண்டையையோ, பிரண்டை பொடியையோ சாப்பிடக்கூடாது. 

மழை பெய்தால் அடுத்து இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டுமே துளிர் பிரண்டை கிடைக்கும். வருடம் முழுவதும் கிடைக்காது. இந்த ஒரு காரணத்திற்காகவே சித்தர்கள் பிரண்டை உப்பை உருவாக்கினார்கள். 

மேலும் எவ்வளவு நன்மைகள் தருவதாக இருந்தாலும் நாக்கு அரிக்கும் சுவையுடைய பிரண்டையை தினமும் இருவேளை ஒரு மண்டலமோ, இரு மண்டலமோ கண்டிப்பாக அனைவராலும் சாப்பிட முடியாது. 

மேலும் நாம் நேரடியாக பிரண்டையை சாப்பிடும்போது ஒரு வேளைக்கு அதிகபட்சமாக 50கிராம் எடுத்துக் கொள்ள முடியும். அதுவே 300மில்லிகிராம் பிரண்டை உப்பில் கிட்டத்தட்ட ½ கிலோ பிரண்டையின் சத்து, சாராம்சம் இருக்கிறது. இந்த அளவு நன்மைகளுக்காகத்தான் பிரண்டையை உப்பாக எடுத்துக் கொள்ள சித்தர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.


பிரண்டை உப்பை யார் யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

1.  40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள்
2.  ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் உள்ளவர்கள்
3.  தீவிரமாக உடல் எடை குறைக்க நினைப்பவர்கள்
4.  விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள்
5.  முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட அலுவலகத்திற்குள்ளேயே வேலை பார்ப்பவர்கள்

1.  சூரிய ஒளியில் செல்ல வாய்ப்பில்லாதவர்கள்
 
6.  வளர்ச்சி குறைவான குழந்தைகள்
7.  எலும்பு உடைந்தவர்கள், Ligament Tear ஆனவர்கள்
8.  மூட்டு தேய்மானம், மூட்டு வலி உள்ளவர்கள்
9.  இதய பலவீனம், இதய படபடப்பு உள்ளவர்கள்
10. உடலில் கெட்ட கொழுப்பு (LDL) அதிகமாக இருப்பவர்கள்
11. நரம்புத் தளர்ச்சி இருப்பவர்கள்
12. எந்த வகையான வயிறு தொடர்பான (Irritable Bowl Syndrome) பிரச்சினைகள் இருந்தாலும்
13. அனைத்து வகையான மூலத்திற்கும்
14. முதுகு தண்டுவடம் சம்பந்தமான பிரச்சினைகள்
15. மெட்டபாலிசம் (Metabolism Disorders) தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள்
16. 10 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் சாப்பிடலாம்.


பிரண்டை உப்பின் மூலம் 300 விதமான நோய்களை குணப்படுத்தலாம்:
 
உடல் எடையை குறைக்கலாம், உடல் எடை குறைந்து முகம் இளைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மூலம் பிரச்சனைகள் சரியாகும், மூட்டு வலி சரியாகும், இடுப்பு வலி சரியாகும், எலும்பு வலுவிழந்து இருப்பவர்களுக்கு எலும்பு வலுவடையும், Bone Mineral Density Increase ஆகும், செரிமான பிரச்சனைகள் சரியாகும், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும், பெண்களுக்கான மாத விலக்கு வலி மற்றும் பிரச்சனைகள் சரியாகும், IBS பிரச்சினைகள் சரியாகும், LDL கொழுப்பு குறைந்து HDL கொழுப்பு அதிகரிக்கும்..
வயிற்று உப்புசம் நீங்கி வாயு வெளியேறும்,
Arthritis பிரச்சினைகள் சரியாகும், Osteoporosis பிரச்சினை சரியாகும்.


பிரண்டை உப்பு எடுத்துக் கொள்ளும் கால அளவு:

பொதுவாக எந்த ஒரு சித்த மருந்துகளையும் ஒரு குறிப்பிட்ட நோயை சரி செய்வதற்கு 20 முதல் 40 வயதில் இருப்பவர்கள் ஒரு மண்டலமும், 40 முதல் 60 வயதில் இருப்பவர்கள் இரண்டு மண்டலமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று மண்டலங்களும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சித்த மருத்துவ விதி. அப்போதுதான் நமக்கு வந்த நோயை முழுமையாக வேரோடு அழிக்க முடியும்.

உங்களுக்கு உள்ள நோயையும், உங்கள் வயதையும் பொறுத்து எவ்வளவு நாட்கள் பிரண்டை உப்பு சாப்பிட வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

பிரண்டை உப்பு சாப்பிட வேண்டிய அளவு:

காலை: 300மில்லி கிராம் தேனுடன் மட்டுமே கலந்து சாப்பிட வேண்டும். கண்டிப்பாக தண்ணீருடன் சாப்பிடக்கூடாது. (காலை 6 மணிக்கு வெறும் வயிற்றில்) அரைமணி நேரம் கழித்து காபி, டீ வேறு உணவு வகைகள் சாப்பிடலாம்.

மாலை: 300மில்லி கிராம் தேனுடன் மட்டுமே கலந்து சாப்பிட வேண்டும். (மருந்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு  முன்பும் பின்னும் காபி, டீயோ உணவுப் பதார்த்தங்கள் எதுவும் சாப்பிட கூடாது)
மேற்படி முறையில் சாப்பிட்டு வந்தால் நாங்கள் கொடுக்கும் குறைந்த அளவு 50 கிராமான பிரண்டை உப்பு. சராசரியாக 80 நாட்களுக்கு வரும்.


மேற்கண்ட மூலிகைகள் வாங்க மற்றும் தொடர்புக்கு...
To Buy the Herbals and also For Contact...